புதிய ரேஷன் கடை அமைக்கும் பணி

புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.ஏராளமான தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ரேஷன் கடை அமைக்கும் பணியினை  மதியழகன் எம்.எல்.ஏ பூமி பூைஜ போட்டு தொடங்கி வைத்த காட்சி.
ரேஷன் கடை அமைக்கும் பணியினை மதியழகன் எம்.எல்.ஏ பூமி பூைஜ போட்டு தொடங்கி வைத்த காட்சி.
Published on: 

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குரும்பட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார். மாவட்ட அவை தலைவர் நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா காளியப்பன், மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com