கரியம்பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும்

ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரியம்பாளையத்தில் புதிய ரேஷன் கடை திறக்க வேண்டும்
Published on

அன்னூர்,

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் 700-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ரேஷன் கடையானது அங்கன்வாடி மையம் மற்றும் கிராம அலுவலக மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.அந்த ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழைமை அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் இந்த ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. கடை மாற்றப்படும் இடமானது ஊர் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com