search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்
    X

    கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ்.

    திருச்செந்தூரில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.

    மின்சார சிக்கன வார விழா

    மின்சார சிக்கன வாரவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் உப மின் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×