search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி  570 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
    X

    பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டபோது எடுத்தபடம்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி 570 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

    • தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி 570 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நயினார்பத்து, சுதந்திர நகர், விஜயநாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 570 நலிந்தோர்களுக்கு சேலை, தையல் எந்திரம், பள்ளிச் சீருடைகளை வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி, தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பிறந்தநாளையொட்டி உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. சார்பில் 570 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடிகிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ தலைமையில் வெள்ளாளன்விளையில் நடந்தது.

    நயினார்பத்து, சுதந்திர நகர், விஜயநாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 570 நலிந்தோர்களுக்கு சேலை, தையல் எந்திரம், பள்ளிச் சீருடைகளை வழங்கி, கனிமொழி எம்.பி.யின் சாதனைகள் குறித்து பேசினார்.

    முன்னதாக கிழக்கு ஓன்றிய தி.மு.க. அவைத் தலைவர் ஷேக் முகம்மது வரவேற்றார். வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜரத்தினம், கிழக்கு ஓன்றிய தி.மு.க. பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் லியாஸ்கர், அற்புதஆரசி, விஜயா, குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடன்குடி மெயின் பஜார் நான்கு சந்திப்பில் தி.மு.க. நகரச் செயலாளரும் உடன்குடிபேரூராட்சி மன்ற துணைத்தலைவரு மான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் பேருராட்சிமன்ற உறுப்பினர் ஜான்பாஸ்கர், பிரதீப்கண்ணன் மற்றும் முகமது சலீம், முருகேசன், திரவியம், தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×