search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரன்பட்டினத்தில் ரூ.22 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
    X

    குலசேகரன்பட்டினத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றிய காட்சி.

    குலசேகரன்பட்டினத்தில் ரூ.22 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி, மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவர் கணேசன், உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருகேஸ்வரி ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி யூனியன் ஆணையாளர் ஜான்சிராணி அனைவரையும் வரவேற்றார். கூடுதல் பி.டி.ஒ.பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி, மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் உமரி ஷங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர்கள் ஜெசி பொன்ராணி, செல்வக் குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள் ராமலிங்கம் என்ற துரை, இசக்கி, முத்துசாமி, மிராஉம்மாள், தனலெட்சுமி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரசூல் தின் நன்றி கூறினார்.

    Next Story
    ×