search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி அணை"

    • கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.
    • நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக்கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு வருகிறது. ஆங்காங்கே மண் திட்டுக்களாக தோற்றம் அளித்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    • திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. இதன் காரணமாக நீர் வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து போதுமான அளவு நீர்இருப்பு இருந்தது.

    இந்த சூழலில் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களுக்கு (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு) பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    வரு–கிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி வரையில் 135 நாட்களில் 80 நாட்களுக்கு திறப்பு 55 நாட்களுக்கு அடைப்பு என்ற முறையில் உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு 2,074 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். 

    • அலங்கியம் முதல் கரூர் வரை 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

    உடுமலை  :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

    மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

    பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று முதல் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8 பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு ஜூன் 1-ந் தேதி (இன்று) முதல் அக்டேபர் 13-ந் தேதி வரை 2 ஆயிரத்து 74 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் கல்லாபுரம், ராகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜவாய்க்கால்களுக்கு உட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு வரும் ஜூன் 1 முதல் குறுவை நெல் சாகுபடிக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கையின் அடிப்படையில் நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு ஜூன் 1 முதல் 135 நாட்களில் உரிய இடைவெளி விட்டு நீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை வெளியிட்டதும் நீர் திறக்கப்படும் என்றனர்.

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21,867 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அதேபோல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள 25,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.

    பாசன பகுதிகளிலுள்ள நிலைப்பயிர்கள் மற்றும் கரும்பு அறுவடை முடிந்ததும் கட்டை கரும்பு மற்றும் நடவு மேற்கொள்ள அமராவதி அணையில் இருந்து உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ஜூனில் தென்மேற்கு பருவ மழை துவக்கியதும் அணை நீர் இருப்பை பொருத்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக இந்த பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது போதிய மழை பெய்யாத நிலையில் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அமராவதி அணை பாசனப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால் நிலைப்பயிராக உள்ள கரும்புக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.மேலும் மக்காச்சோளம் உள்ளிட்ட இதர பயிர்களும் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்படும் நிலை உள்ளது.அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.நீர் இருப்பும் திருப்திகரமாக உள்ளது.எனவே, நிலைப்பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவைக்காகவும், அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாயில் சிறப்பு உயிர் தண்ணீர் திறக்க வேண்டும்.

    இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நிலைப்பயிர்கள் காப்பாற்றப்படும். மேலும் வழியோர கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
    • அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.இந்த அணையின் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதுடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைப்பகுதியில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் புகைப்படம் எடுத்து மகிழவும் முதலைப் பண்ணையை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதிக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் அணைப்பகுதியில் படகு சவாரியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பத்து நிமிட பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    அணையிலும் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் படகு சவாரி மனதிற்கு புத்துணர்வை அளிப்பதுடன் இனிமையான நிகழ்வாக உள்ளது.கடல் போன்று காட்சி அளிக்கும் அணையில் படகில் திகிலுடன் சென்று திரும்பும் சில வினாடிகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் பெறுவதற்காக அணைப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சவாரி செய்து வருகின்றனர். குறிப்பாக வார,கோடை,பொது விடுமுறை நாட்களில் படகு சவாரி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமராவதி அணைக்கு வருகை தந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அணைப்பகுதி, பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.பின்பு படகு சவாரிக்கு சென்றனர். இதையடுத்து படகில் ஏறி குடும்பத்துடன் சென்று உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். அதற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு படகோட்டியின் சார்பில் விழிப்புணர்வும் உயிர் கவசமும் வழங்கப்பட்டது. மேலும் திருமூர்த்தி அணையில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் உள்ள படகு சவாரியை துவக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது.
    • மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவா் ஏ.காளிமுத்து அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தாராபுரம் வட்டம், அமராவதி பாசனப் பகுதிகளான அலங்கியம், தாராபுரம், தளவாய்பட்டிணம், கொழிஞ்சிவாடி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். தண்ணீா் பற்றாக்குறையால் மக்காச்சோளப் பயிா்கள் தற்போது காயும் தருவாயில் உள்ளது. அமராவதி அணையில் தற்போது 54.5 அடிக்குத் தண்ணீா் இருப்பு உள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யும். ஆகவே, அமராவதி அணையில் இருந்து மே 10 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா் எஸ்.கே.கொளந்தசாமி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- ஊத்துக்குளி வட்டம் தளவாய்பாளையம் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் முன்பாக அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தாா் சாலைகள் தோண்டப்பட்டது. இதன் பின்னா் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சேதமான தாா் சாலைகள் சீரமைக்கப்படாததால் விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைந்து வருகின்றனா். ஆகவே, தாா் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்..

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், இணை இயக்குநா் (வேளாண்மை) மா.மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சொ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • கடந்த ஆண்டு பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது.

     உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயி லாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    தென்மேற்கு பருவ மழை துவங்கி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி அணை நிரம்பி யது. பருவ மழை தீவிர மடைந்ததால் கடந்த ஆண்டு பெரும்பாலான நாட்கள் அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே இருந்தது. நடப்பாண்டு பாசனம் வழக்கத்தை விட முன்னதாகவே துவங்கியது. கடந்த ஆண்டு மே 16-ந்தேதி அணையில் இருந்து அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்க ளுக்கு குறுவை சாகு படிக்கு நீர் திறக்கப்பட்டது.

    மேலும் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், திருப்பூர், கரூர் மாவட்டங்க ளில் தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த செப்ட ம்பரில் நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு செய்யப்பட்டது. அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவில் உள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு, பிப்ரவரி 28-ந் தேதி நிறைவு பெற்றது.

    அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணா டிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு ஆகிய 8 ராஜ வாய்க்கால் பாசன த்திலுள்ள 7,520 ஏக்கர் நிலங்களுக்கு குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த ஆண்டு மே 16 ல் தண்ணீர் திறக்கப்பட்டு செப்டம்பர் வரை நீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் பருவம் சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டு பிப்ரவரி 28-ந் தேதி வரை நீர் வழங்க அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயி ர்களுக்கு நீர் தேவை என்பதால் பாசன காலம் நீடிக்க விவசாயிகள் வலியு றுத்தினர். அதன் அடிப்ப டையில் பழைய ஆயக்கட்டு, ராஜவா ய்க்கால்கள் பாசன நிலங்க ளுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கி பாசன காலம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அணை நீர் இருப்பை பொறுத்து பாசன நிலங்களுக்கு உயிர்த்தண்ணீ ர் மற்றும் குடிநீருக்கு அரசு அனுமதி வழங்கினால் திறக்கப்படும் என்றனர்.

    • அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றின் வழியோரத்திலுள்ள கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.இரு மாவட்ட பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் இம்மாத இறுதி வரை நீர் வழங்க வேண்டியுள்ளது.இந்நிலையில் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணை நீர் மட்டம் மொத்தமுள்ள 90 அடியில் 51.87 அடியாகவும், மொத்த கொள்ளளவான 4,047 மில்லியன் கன அடியில், 1,269.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 170 கன அடியாகவும், அணையிலிருந்து பாசனத்திற்கு 90 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

    நடப்பாண்டு நீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் கோடை காலத்தை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், அணையில் குடிநீர் தேவைக்கான நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்து நீர் வரத்து காணப்படுகிறது. கோடை காலத்தில் பாதிப்பு ஏற்படாது என்றனர்.

    • அமராவதி அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
    • இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    உடுமலை:

    மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்தநிலையில் புயல் கரையை கடந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த ஆறுகள் மூலம் நீர் பெறுகிற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளின் நீராதாரங்களாக கொண்டு அமராவதி அணை உள்ளது.

    90 அடிக்கு நீர் தேங்கும் வகையில் 4.04 டி.எம்.சி., கொள்ளளவுள்ள இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மூலம் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    மாண்டஸ் புயல் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை, கொடைக்கானல், மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நீர்வரத்தை நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வந்தனர்.

    நேற்று முன்தினம் இரவு அணைக்கு திடீரென 1000 கனஅடியை கடந்து நீர்வரத்து இருந்தது. இதனையடுத்து அணையில் ஏற்கனவே 89.5 அடிக்கு நீர்தேக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு கருதி வரத்து நீர் முழுவதும் அமராவதி ஆற்றில் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 89 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1,282 கனஅடி தண்ணீர் உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    அணையின் மொத்த கொள்ளளவான 4.04 டி.எம்.சி.யில் தற்போது 3.99 டி.எம்.சி.க்கு நீர் இருப்பு உள்ளது. அணை முழு கொள்ளளவில் தற்போது உள்ளது.

    அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் வரும் நீர் முழுமையாக உபரியாக ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இந்த ஆண்டில் 5-வது முறையாக அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.
    • அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை கொடுக்கிறது.

    அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டதால் அணைக்கு வந்து கொண்டுள்ள தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்இருப்பும் கிடுகிடுவென உயர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.

    மேலும் மாண்டஸ் புயல் உருவாகி உள்ளதையொட்டி வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. இதன் காரணமாக கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது. இதையடுத்து அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாமிட்டு உள்ளதுடன் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 89.47 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 501 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 488 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணிசமான அளவு நீர் வரத்து இருக்கும்.
    • அணையின் நீர்மட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முழு கொள்ளளவில் இருந்து வருகிறது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன .

    ஆண்டுதோறும் பழைய ஆயகட்டுப்பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும் புதிய ஆயகட்டுப்பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தவிர கல்லாபுரம், ராமகுளம் நேரடி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    மேலும் தென்மேற்கு பருவமழை காலம் அனைத்து முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் பாம்பாறு, கூட்டாறு, தேனாறுகளில் நீர் பெருக்கெடுத்து தூவானம் அருவி வழியாக அணைக்கு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கணிசமான அளவு நீர் வரத்து இருக்கும்.

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் முழு கொள்ளளவில் இருந்து வருகிறது. தற்போது நீர்மட்டம் 89.47 அடியாக உள்ளது. 830 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 767 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    ×