search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பிறந்தநாள்"

    • நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    • தி.மு.க. முன்னணியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    சென்னை:

    தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சி தந்த காவியத் தலைவர்-உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர்-தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ்நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர்.

    "இப்படை தோற்கின் எப்படைவெல்லும்" என்று தம்பிமார் பெரும் படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன்-"மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப்பெரும் தனயன், சுயமரியாதை சுடரொளி, சொக்க வைக்கும் சொற்பொழிவாளர்-எழுத்து வேந்தர்-தென்னகத்தின் மிகப்பெரும் அரசியல் தலைவர்-பேரறிஞர் அறிஞர் அண்ணாவின் 114-வது ஆண்டு பிறந்த நாள் (15-ந்தேதி) அன்று காலை 8 மணி அளவில் மதுரை, கீழவெளி வீதி-மேலவெளி வீதி சந்திப்பு, நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நே.சிற்றரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 15-ந்தேதி காலை 8 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

    • அண்ணாவின் உருவச் சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.
    • தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், சார்பு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் ஒரு அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.

    • போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் விளையாட்டு பிரிவின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் போட்டி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயது,17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தலா 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு தலா 15 கிலோ மீட்டர் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

    போட்டியை கலெக்டர் வினீத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, திருப்பூர் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜகோபால் வரவேற்றார்.

    13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவர் சபரீஸ்வர் முதலிடத்தையும், காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர் உதயகிரி 2-வது இடத்தையும், ஹரிஸ்ராம் 3-வது இடத்தையும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி சர்நிதா முதலிடத்தையும், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் தீக்ஷனா 2-வது இடத்தையும், சஞ்சனா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    15 வயதுக்கு உட்பட்டோர் மாணவிகள் பிரிவில் பிளாட்டோஸ் அகாடமி மாணவி அனுஸ்ரீ முதலிடத்தையும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மாணவி வர்ஷிதா 2-வது இடத்தையும், பொம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவி அபிநயா 3-வது இடத்தையும் வென்றனர். மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர். பள்ளி மாணவர்கள் சஞ்சீவ் ராகவேந்திரா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், கருப்பகவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர் பரத்ராம் 3-வது இடத்தையும் பெற்றனர்.

    17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் காங்கயம் எஸ்.ஆர்.ஆர்.பள்ளி மாணவர்கள் விஷ்ணு வர்தன், சிவபாலாஜி, அருண்விஷால் ஆகியோர் முறையே 3 இடங்களை பிடித்தனர். மாணவிகள் பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் பள்ளி மாணவிகள் அபிநயாஸ்ரீ, அஞ்சலி சில்வியா, மதுமிதா ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர். மொத்தம் 87 மாணவிகள், 129 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் 4-வது இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    • சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • 13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நடக்கும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாள் விழா வைமுன்னிட்டு நாளை 9-ந்தேதி சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.

    13, 15 மற்றும் 17 வயது ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கிறது.சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நம் நாட்டில் தயாரான சாதாரண சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வயது சான்றிதழ், எமிஸ் எண் பெற்று வர வேண்டும்.போட்டி துவங்குமிடத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே வந்து பெயர் பதிவு செய்ய வேண்டும். முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய். இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 3 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளி தலைமை ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை தேர்வு செய்து அதற்கான ஆவணங்களுடன் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×