search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பிறந்தநாள்"

    • காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கினார்.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சி சாம்பவலசு பகுதியில் திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு காங்கயம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை தாங்கி பேசினார்.ஒன்றிய துணை செயலாளர் ஏ.என்.திருச்செந்தில், முன்னாள் ஊராட்சி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.

    விழாவில் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும்,திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு பேசினார்.விழாவில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் முத்துவெங்கடேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளருமான குணசேகரன், காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வெங்கடேச சுதர்ஷன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர்.மணி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல் என்ற ஏ.எஸ்.ராமலிங்கம், முத்தூர் பேரூர் செயலாளர் ஜி.முத்துக்குமார், காங்கயம் தொகுதிக்குப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.
    • மதுரை மத்திய ஜெயிலில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் கடந்த 15-ந்தேதி கொண்டாடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 700 கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள ஜெயில்களில், சிறைவாசம் அனுபவித்து வரும் நீண்ட நாள் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரக் குறிப்புகளை உடனடியாக அனுப்பி வைக்கும்படி, சிறைத்துறை டி.ஜி.பி. அலுவலகம் சுற்றறிக்கை அனுப்பி வைத்திருந்தது.

    அதன் அடிப்படையில் மதுரை மத்திய ஜெயிலில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் கைதிகள் மற்றும் அவர்களின் நன்னடத்தை தொடர்பான விவரங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதனை பரிசீலனை செய்து மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகளாக இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    • பரமக்குடியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பரமக்குடி

    பரமக்குடியில் காந்திசிலை முன்பு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இக்கூட்டத்திற்கு போகலூர் ஒன்றிய செயலாளர் லோகிதாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, குப்புசாமி, காளிமுத்து, பரமக்குடி அவைத்தலைவர் சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் எம்.கே.ஜமால் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

    இக்கூட்டத்தில் அ.தி.மு.க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சிறப்பு பேச்சாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, டாக்டர் முத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் பாலாமணி மாரி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் அனிதா முருகேசன், நகர்மன்றத் உறுப்பினர்கள் ஜெய்சங்கர், கண்ணன் உட்பட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர் அம்மா பேரவை செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான வடமலையான் நன்றி கூறினார். 

    • பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    ஊட்டி

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் மற்றும் தி.மு.க முப்பெரும் விழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் ஆலோசனைக்கிணங்க, ஊட்டி கலைஞர் அறிவாலய முகப்பில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமையில் மாலை அணிவித்தும், கட்சி கொடியேற்றி ெபாதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் ஊட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தொரை, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்கில் ரவி, காந்தல் ரவி, செல்வராஜ், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்னுபிரபு, கஜேந்திரன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அந்தோனி மேத்யூஸ், எல்.பி.எப் ஜெயராமன், மார்கெட் ரவி, ராமன், தியாகு, ஜெகதீஷ், மத்தீன், குண்டன், குரூஸ், மாதன், சங்கர், இலியாஸ், பொன்சிசெல்வம், ராஜம்மா, ராஜ்குமார், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது.
    • அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

     மங்கலம் :

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட இந்தியன்நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் அண்ணாவின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. வர்த்தகஅணி திருப்பூர் ஒன்றிய அமைப்பாளர் சுல்தான்பேட்டை கோபால் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் மு.சர்புதீன் முன்னிலை வகித்தார் . மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மு.ரபிதீன் , ஒன்றிய கழக அவைத்தலைவர் மு.அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, , திருப்பூர் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஷா.தம்பிரஹீம், மு.ஐக்கிரியா, மு.முஜிபுர்ரகுமான் க.முபாரக்ராஜா மற்றும் மங்கலம் தி.மு.க. ஊராட்சி கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கெ௱ண்டனர்.

    • அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர்.
    • பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்து வாழ்ந்த அவரது நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், மாணவரணி மாநில செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    இதில் காஞ்சிபும் மாநகராட்சி மேயர் யுவராஜ் மகாலட்சுமி, வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, ஒன்றியக்குழு தலைவர்கள் மலர்கொடிகுமார், தேவேந்திரன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், பாலாஜி, ஜெயராஜ், திலக்குமார், வாலாஜாபாத் அரிக்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அண்ணாவின் இல்லம் அருகே கூடி இருந்த பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் இனிப்புகளை வழங்கி அண்ணாவின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினர். பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பலராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன் ராஜா, கவுன்சிலர் பானு பிரசாத், நகர செயலாளர் செல்வகுமார், முன்னாள் தலைவர் பா. சங்கர், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கவுன்சிலர்கள் செந்தில், சுரேஷ், அபிராமி விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருத்தணி சித்தூர் சாலையில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.
    • வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.

    பெரியார் சூரியன் என்றால் அண்ணா மழை. பெரியார் லட்சியவாதி. அண்ணா யதார்த்தவாதி. பெரியார் நாளையைப் பற்றி சிந்தித்தார். அண்ணா இன்றைய பொழுதை தமிழர்க்கு கையளிக்க செயல்பட்டார்.

    இரண்டு அறிவுசீவிகள் ஒரே கட்சியில் இருக்க முடியாது என்கிற நடைமுறை யதார்த்தத்திலிருந்து உருவானதே தி.மு.க. பெரியார் திருமணம் என்பதெல்லாம் பிரிவதற்காக உருவாக்கப்பட்ட காரணங்களே.

    அதிகாரத்துக்கு வெளியே இருந்ததால்தான் பெரியாரால் சமரசமின்ற சமராட முடிந்தது. சிறிய அளவில் தேர்தல் ஜனநாயகத்தோடு சமரசம் செய்து கொண்டதால்தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த பல முட்களைப் பிடுங்க முடிந்தது அண்ணாவால்.

    கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார். எந்த பக்தி இலக்கியங்களை பெரியார் கழுவி ஊற்றினாரோ அதே திருமூலரிடமிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' என்கிற பதத்தை உருவி கையாண்டார் அண்ணா.

    மாநிலங்களவை கன்னிப் பேச்சிலேயே திராவிட நாடு குறித்து அனல் கக்கினார். ஆனாலும் சீனப்போர் வந்தபோது, திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டார். வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என அதற்கொரு விளக்கமும் தந்தார்.

    தான் நிதானமானவன். அவசரப்பட்டு குழிக்குள் விழுந்து விடமாட்டேன். அதற்காக அச்சப்பட்டு அடங்கிப்போகவும் மாட்டேன் என அரசியல் நுட்பம் கூடியவர் அண்ணா.

    ஈரடி முன்னே, ஓரடி பின்னே எனும் யுக்தியை வகுத்தவர். இத்தகைய சாதுர்யத்தால்தான் முதல்வராக பதவி வகித்த குறுகிய காலத்தில் (2 ஆண்டுகள்) மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற முடிந்தது. சுயமரியாதை திருமணத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க முடிந்தது.

    தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மனதில் கொண்டு, தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழி திட்டம் கொண்டுவர முடிந்தது.

    ஆகாஷ்வாணி வானொலியாக மாறியதும். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியும் சாத்தியமானது. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்ய முடிந்தது.

    பேருந்துகள் அரசுடைமை ஆகியது. ஏழை பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிந்தது. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற்றன.

    சென்னை செகரட்டேரியட், தலைமைச் செயலகமானது.

    விதவைகளைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடிந்தது.

    கூட்டத்தில் நின்றால் கண்டுபிடிக்க முடியாத தோற்றம். குள்ளமான உருவம். மாற்று சிந்தனை, தீவிரமாக செயலாற்றும் திறன், ஜனநாயகப் பண்பு, நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், ஆங்கில அறிவு, எளிமை, நேர்மை இத்தகைய எல்லா படிக்கட்டுகளிலும் அயராது ஏறி, தன்னை உயரமாக்கி, உலகுக்கு காண்பித்தார் அண்ணா.

    பிறர் பேச அஞ்சியதைப் பேசியவர். மாநில சுய உரிமை பற்றி மாநிலங்களவையில் அவர் பேசியபோது நம் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணாவுக்கு ஆதரவாக இல்லை.

    தனித்து களமாடியவர். இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசை நிறுவிய இரண்டாவது முதல்வர் அண்ணா. மாநிலக் கட்சியொன்றின் முதல் முதல்வர்.

    தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.

    வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.

    -கரிகாலன்

    • அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் மரியாதை செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல். ஏ., சு.குணசேகரன், முன்னாள் எம். பி.,சி.சிவசாமி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் , பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் அன்பகம் திருப்பதி, கே.பி.ஜி. மகேஷ்ராம், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, கருணாகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பொதுக்கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார்.
    • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார். மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை, ஈரோடு, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலை முதலே திருப்பூருக்கு திரண்டு வந்தனர். மேலும் டி.டி.வி. தினகரனை வரவேற்று திருப்பூர் மாநகரின் பல்வேறு இடங்களில் வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    • அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார்.
    • மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார்.

    திருப்பூர் :

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த மேற்கு மண்டலம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் நாளை 15-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்திற்கு அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.சண்முகவேலு தலைமை தாங்குகிறார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான விசாலாட்சி வரவேற்று பேசுகிறார். மாவட்ட செயலாளர் கோவை மேற்கு சேலஞ்சர் துரை, நீலகிரி கலைச்செல்வன், கோவை மத்திய மாவட்டம் அப்பாதுரை, கோவை தெற்கு சுகுமார், திருப்பூர் வடக்கு ஆனந்தகுமார், ஈரோடு மாநகர் கிழக்கு சிவபிரசாத், ஈேராடு புறநகர் கிழக்கு சதாசிவ மூர்த்தி, ஈரோடு மாநகர் மேற்கு வெங்கடேசன், ஈரோடு புறநகர் மேற்கு வேலுச்சாமி, கோவை கிழக்கு செந்தில்குமார் , கோவை வடக்கு பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் விழா பேரூரையாற்றுகிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரோகிணி கிருஷ்ணகுமார், மருத்துவ அணி இணை செயலாளர் செந்தில்குமார், அமைப்பு செயலாளர்கள் லட்சுமணன், துளசிமணி, தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வபாண்டி, நெசவாளர் அணி செயலாளர் சண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். முடிவில் வாலிபாளையம் பகுதி செயலாளர் சிவக்குமார் நன்றி கூறுகிறார்.

    • பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    உடுமலை :

    தமிழ்வளர்ச்சி துறை சார்பில் காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணா , கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப்போட்டி நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி அண்ணா , ஈ.வெ.ரா., பிறந்தநாளையொட்டி உடுமலை கல்வி மாவட்ட அளவிலான போட்டி, பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.போட்டியை, தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். உடுமலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி ஆகியோர் பார்வையிட்டனர்.தமிழாசிரியர்கள் சின்னராசு, ரேணுகா, வசந்தி ஆகியோர் நடுவர்களாகச்செயல்பட்டனர்.

    இதில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல, போட்டியை தமிழாசிரியர் ராஜேந்திரன், கலை ஆசிரியர் லாவண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஒவ்வொரு பிரிவிலும் தேர்வு செய்யப்படும் தலா 5 பேர் திருப்பூரில் நாளை 15, 17 ஆகிய தேதிகளில் நடக்கும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கவும் உள்ளனர்.

    • பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுகோள்
    • அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ. அறிக்கை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வரும் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

    அன்றைய தினம் ஒன்றிய செயலாளர்கள் பேரூர் கழக செயலாளர் கிளை கழக செயலாளர் ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அண்ணாவின் பிறந்த நாளில் அவரது திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கிக் கொண்டாட வேண்டும்.

    பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென அ.தி.மு.க.வினற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தமிழக இளைஞர்களை திசை திருப்பி வரும் தி.மு.க.வுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என சு.ரவி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×