search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker suicide"

    • செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • செல்வம் பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பெரிய எடப்பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (58). கூலி தொழிலாளி. இவர் திருவள்ளூர் பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஏரிக்கரையில் மயங்கி விழுந்து கிடந்தார்.

    உடனடியாக செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது பாக்கெட்டில் விஷ பாட்டில் இருந்தது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    • தியாகதுருகம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி, அக்.27-

    தியாகதுருகம் அருகே நின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடையன் (வயது 38) கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததார். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார். இதுகுறித்து வரஞசரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • லட்சுமணசாமி மதுவிற்கு அடிமையாகி வயிற்று வலி தாங்க முடியாமல் இருந்த காரணத்தினால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் செங்கோடம் பாளையத்தை சேர்ந்த லட்சுமணசாமி (49). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டதால் மதுவுக்கு அடிமையாகி இவரது மகன் கமலக்கண்ணன் உடன் தங்கி இருந்து வருகிறார்.

    உடலை கமலக்கண்ணன் தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த லட்சுமணசாமி மதுவிற்கு அடிமையாகி வயிற்று வலி தாங்க முடியாமல் இருந்த காரணத்தினால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் போலீசார் நேரில் சென்று உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் தனியார் நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    திருச்சி :

    திருச்சி திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது30). இவர் தனியார் நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    ஆறு மாதத்திற்கு பிறகு இருவரும் லிவிங்டு கெதர்ரில் வாழ்ந்து வந்த நிலையில் சுரேஷ் கடந்த மாத காலமாக எந்தவித வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கி–ட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்துசுரேஷின் தாயார் பத்மா பொன்மலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன ஊழியர்- தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சோலைஅழகுபுரம், மகாலட்சுமி கோவில் சந்து பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (26). இவர் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அருண்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை சுந்தர்ராஜன்பட்டியை சேர்ந்தவர் மஞ்சமலை (வயது29). இவர் அந்த பகுதியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரிய கண்ணாடி சேர்ந்தவர் குமார் (வயது 47).கூலி தொழிலாளி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் 8 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி 5 மாதம் 2400 ரூபாய் வீதம் தவணை முறையில் செல்போன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் குமார் ஒரு மாதம் தவணை மட்டும் கட்டியுள்ளார். மீதமுள்ள தவணைப்பணம் கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 5-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது வீட்டில் குமார் இறப்பதற்கு முன்பு என் சாவுக்கு தனியார் நிதி நிறுவனம் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்ததாக இறந்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து குமார் உடலை குறிஞ்சிப்பாடி போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி பணம் கட்டாத பெண்ணை மிரட்டியதால் பெண் தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் தனியார் நிறுவன நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தவணைப்பணம் கட்டாத கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உருவையாறில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரது மனைவி கண்டித்து மது பழக்கத்தினால் மகனின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.

    புதுச்சேரி:

    உருவையாறில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அருகே உருவையாறு செல்வாநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    ரமேஷ் சமீப காலமாக மது பழக்கத்துக்கு ஆளாகி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி லட்சுமி கண்டிக்கும் போது இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படும். அப்போது கணவரிடம் கோபித்துக்கொண்டு லட்சுமி உறவினர் வீட்டுக்கு சென்று விடுவார்.

    பின்னர் கோபம் தனிந்து கணவர் வீட்டுக்கு திரும்பி விடுவார். அதுபோல் ரமேஷ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கண்டித்து மது பழக்கத்தினால் மகனின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.

    ஆனால் அதனை ரமேஷ் ஏற்காமல் மனைவியிடம் தகராறு செய்தார். தொடர்ந்து வீட்டில் இருந்தால் மேலும் பிரச்சினை உருவாகும் என கருதி லட்சுமி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் கணவரின் கோபம் தணிந்து விடும் என நினைத்து லட்சுமி வீடு திரும்பினார். அப்போது மின் விசிறியில் சேலையால் கணவர் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாலத்தில் இருந்த மின்கம்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் நாராணயன மடம் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 62). இவர் ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் ரவீந்திரன் சிக்கினார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவர் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர் ஊன்றுகோல் உதவியுடன் நடக்க முடிந்தது.

    கால் ஊனமானதன் காரணமாக ரவீந்திரன் வேலை பார்க்க முடியவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். விபத்தில் ஏற்பட்ட ஊனத்தால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் ரவீந்திரன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரவீந்திரன் விருதுநகரில் அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு நடந்து சென்றார். அங்குள்ள மின்கம்பம் ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாலத்தில் உள்ள மின்கம்பத்தில் ரவீந்திரன் பிணமாக தொங்குவதை இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவீந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் கால் ஊனமாகி வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால் வாழ்வில் விரக்தி ஏற்பட்டு ரவீந்திரன் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    பாலத்தில் இருந்த மின்கம்பத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகரில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குடிபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 64), விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    கடந்த 24-ந் தேதி இரவு 7 மணி அளவில் குடிபோதையில் வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டு அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் குமார் எல்லப்பனை மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    பின்னர்மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த எல்லப்பன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் இறந்தார்.

    இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
    • சகோதரர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பன்னாரி முத்து பரிதாபமாக இறந்தார்.

    கோவை:

    கோவை புலியகுளம் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் பன்னாரிமுத்து (வயது 42).

    கூலித் தொழிலாளி. திருமணமாகவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையான பன்னாரிமுத்துவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். 1½ வருடம் சிறையில் தண்டனை பெற்ற அவர் வெளியே வந்தார். பின்னர் தாயுடன் நீலிகோணாம் பாளையத்தில் வசித்து வந்தார்.

    இவர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் பன்னாரி முத்துவுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அதற்கும் பதில் அளிக்கவில்லை.

    இதனையடுத்து போலீசார் அவரது தாயை தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் வேலைக்கு சென்ற மகன் வீட்டிற்கு வரவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து பன்னாரி முத்துவை அவரது சகோதரர் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அவர் காந்திபுரம் ஜி.பி. சிக்னல் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது சகோதரர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பன்னாரி முத்து பரிதாபமாக இறந்தார்.இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • மாமல்லபுரம் அருகே அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாப்பாக்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாப்பாக்குடி அருகே உள்ள நந்தன்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 50), தொழிலாளி. இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் இவரது மனைவி ராமலட்சுமி கணவரை கண்டித்தார்.

    இதில் மனமுடைந்த உச்சி மாகாளி நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×