என் மலர்

  புதுச்சேரி

  கட்டிட தொழிலாளி தற்கொலை
  X

  கோப்பு படம்.

  கட்டிட தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உருவையாறில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • அவரது மனைவி கண்டித்து மது பழக்கத்தினால் மகனின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.

  புதுச்சேரி:

  உருவையாறில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வில்லியனூர் அருகே உருவையாறு செல்வாநகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது39). கட்டிட தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

  ரமேஷ் சமீப காலமாக மது பழக்கத்துக்கு ஆளாகி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மனைவி லட்சுமி கண்டிக்கும் போது இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படும். அப்போது கணவரிடம் கோபித்துக்கொண்டு லட்சுமி உறவினர் வீட்டுக்கு சென்று விடுவார்.

  பின்னர் கோபம் தனிந்து கணவர் வீட்டுக்கு திரும்பி விடுவார். அதுபோல் ரமேஷ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி கண்டித்து மது பழக்கத்தினால் மகனின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்று அறிவுரை கூறினார்.

  ஆனால் அதனை ரமேஷ் ஏற்காமல் மனைவியிடம் தகராறு செய்தார். தொடர்ந்து வீட்டில் இருந்தால் மேலும் பிரச்சினை உருவாகும் என கருதி லட்சுமி அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

  பின்னர் கணவரின் கோபம் தணிந்து விடும் என நினைத்து லட்சுமி வீடு திரும்பினார். அப்போது மின் விசிறியில் சேலையால் கணவர் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  பின்னர் இதுகுறித்து மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×