என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தனியார் நிறுவன ஊழியர்- தொழிலாளி தற்கொலை
  X

  தனியார் நிறுவன ஊழியர்- தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனியார் நிறுவன ஊழியர்- தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை சோலைஅழகுபுரம், மகாலட்சுமி கோவில் சந்து பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (26). இவர் அங்கு உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அருண்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

  இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை சுந்தர்ராஜன்பட்டியை சேர்ந்தவர் மஞ்சமலை (வயது29). இவர் அந்த பகுதியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

  இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×