search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker died"

    தருமபுரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி பெரிய மல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது36), தொழிலாளி. வெல்லாளப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பிரவீன்குமார் (25) ஆகிய 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பெரியமல்லிப்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ஓட்டினார். பின்னால் முருகன் அமர்ந்து இருந்தார். 

    அப்போது பெரிய மல்லிப்பட்டி பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வேடியப்பன் மீது பிரவீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை முருகன் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் என்கிற சின்னபையன் (35), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சரஸ்வதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    இவர் நேற்று இரவு தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக மோட்டார் சைக்கிளில் காரிமங்கலத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பைசுஅள்ளியில் உள்ள சர்ச் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் உடனே அங்கு சென்று முனியப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வில்லியனூரில் ரோட்டை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி மீது பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆரியப்பாளையம் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலி என்ற முத்தையன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று மாலை முத்தையன் வில்லியனூர்- ஆரியப்பாளையம் மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது, புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக முத்தையன் மீது மோதியது.

    இதில், முத்தையன் தலை மீது பஸ் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் புனிதராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம் அருகே சாரம் சரிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 31). இவர் கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று சுந்தரராஜபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். சாரத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்த அவர் மதியம் சாப்பிடுவதற்காக கீழே இறங்கினார்.

    அப்போது ஆபிரகாம் எதிர்பாராத விதமாக கால் இடறி சாரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் அபிரகாம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆபிரகாம் மனைவி புஷ்பவள்ளி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மோட்டார் சைக்கிள் விபத்தில் பாண்லே ஊழியர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    புதுச்சேரி:

    புதுவை 45 அடி ரோடு பாலாஜி நகர் வழியாக அதிகாலை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஒரு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அந்த வாலிபர் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சின் பின்புறம் வேகமாக மோதினார்.

    இதில் பஸ்சின் அடியில் புகுந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சிறிது நேரத்தில் பலியானார்.

    இதையறிந்த வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போக்கு வரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்தில் இறந்தவர் சின்ன கொசப்பாளையம் ராமன் நகரை சேர்ந்த ராஜாராம் என்பவரின் மகன் வெங்கடேசன் (வயது 27) என்பதும், இவர் பாண்லே ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி காந்தி ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ்(55). கூலி தொழிலாளி. தனது பைக்கில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் கிட்டம்பட்டி அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் செல்வராஜீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பப்டது. 

    உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார். 

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    தவளக்குப்பத்தில் சைக்கிள் மீது கார் மோதியதில் மரம் ஏறும் தொழிலாளி பலியானார்.

    பாகூர்:

    புதுவை பூரணாங்குப்பம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது55), மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று மாலை தவளக்குப்பத்தில் கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். தவளக்குப்பம்- பூரணாங்குப்பம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது பாகூரில் இருந்து புதுவை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இன்று காலை 6 மணிக்கு பழனிச்சாமி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை கந்தன்சாவடியில் கட்டிட சாரம் சரிந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கந்தன் சாவடியில் தனியாரால் கட்டப்பட்டு வந்த கட்டடம் கட்டும் பணியின் போது, எதிர்பாராத விதமாக 21.7.2018 அன்று சாரம் சரிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றவுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, அவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், பேரிடர் மேலாண்மை ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.

    எனது உத்தரவின் பேரில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்க ஏதுவாக, 7 தீயணைப்பு வாகனங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், 6 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இடிபாடுகளில் சிக்கியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியிலும்; காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியிலும், மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சென்னை மாநகர காவல் துறை, மருத்துவத் துறை, நெடுங்சாலைகள் துறை, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

    இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு ரூ.5லட்சம் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இச் சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மதனகோபாலபுரம் ஆர்.சி.காலனியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி சென்று மளிகைப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் ஜெபராஜ் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் ஜெபராஜீக்கு மனைவியும், 2 பெண்கள் குழந்தைகள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.

    மயிலாடுதுறை அருகே கோவில் திருவிழாவுக்கு கொண்டு சென்ற பட்டாசு வெடித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜூ மகன் ராஜமாணிக்கம் (வயது 23). கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டை பஞ்சகுப்பம் பகுதியை சேர்ந்த தர்மன் மகன் சதீஷ் (27).

    இவர்கள் 2 பேரும் பொறையாறு அடுத்த தில்லையாடி பைரவபிள்ளை தெருவை சேர்ந்த பட்டாசு வியாபாரி மோகன் என்பவரிடம் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் சீர்காழி அருகே கொடுவாய் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக கோவில் நிர்வாகத்தினர் வாணவேடிக்கை நடத்துவதற்காக மோகனிடம் பட்டாசு ஆர்டர் கொடுத்திருந்தனர்.

    இதனால் திருவிழாவுக்கு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை கொண்டு செல்ல இன்று அதிகாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் ராஜமாணிக்கமும், சதீசும் புறப்பட்டு சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டினார். பின்னால் ராஜமாணிக்கம் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை தனது வயிற்று பகுதியில் வைத்திருந்தார். மேலும் சில பட்டாசுகளை மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தனர்.

    மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார் கோவில் அடுத்த ஆக்கூர் முக்கூட்டு கருவேலி என்ற இடத்தில் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள ஒரு பாலத்தில் சென்ற போது பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் ராஜமாணிக்கம், சதீஷ் ஆகியோர் கீழே விழுந்தனர்.

    அப்போது திடீரென ராஜமாணிக்கம் வைத்திருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. இதில் பட்டா சுகள் தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்ததால் ராஜமாணிக்கம் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சதீசும் படுகாயம் அடைந்தார். இந்த வீபத்தில் மோட்டார் சைக்கிளும் எரிந்து சேதமானது.


    அதிகாலை நேரத்தில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டதால் அப்பகுதி கிராம மக்கள் திரண்டு வந்தனர். அங்கு ராஜமாணிக்கம் உடல் சிதறி பலியாகி கிடப்பதையும், சதீஷ் காயத்துடன் சத்தம் போட்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே இதுபற்றி பொறையாறு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் காயம் அடைந்த சதீசை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வெடிக்காமல் இருந்த பட்டாசுகளை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் மயிலாடு துறை போலீஸ் டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் செம்பனார் கோவில் போலீசார் விரைந்து வந்தனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில் திருவிழாவுக்கு கொண்டு சென்ற பட்டாசு வெடித்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தக்கலை அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது ரப்பர் மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.

    தக்கலை:

    நாகர்கோவில் சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் துரைமணி. இவரது மகன் ராஜன்(வயது32). தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 14-ந்தேதி தக்கலை அருகே உள்ள சித்திரன்கோடு பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலைக்கு சென்றிருந்தார். அங்கு சுமார் 500 அடி பள்ளத்தில் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார்.

    அப்போது மேலே இருந்து ரப்பர் மரம் ஒன்று முறிந்து ராஜன் மீது விழுந்தது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தொலையா வட்டம் பகுதியைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் ஜெய் மனோகரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    லாலாபேட்டை:

    லாலாப்பேட்டை மேட்டு மகாதானபுரம் வீரமலை என்பவரின் மகன் சந்திரசேகர் (55) கொத்தனார். இவர் கடந்த 3-ந் தேதி லாலாபேட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் மகாதான புரத்துக்கு சென்றார். அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த  பாலசுப்பிரமணியன் (30) என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளில் எதிர் பாராத விதமாக சந்திரசேகர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ×