search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker died"

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது65). தொழிலாளி
    • நான்குவழிச் சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது65). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராகவன் (72).

    இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை நாங்குநேரி அருகே தாழைகுளத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    அவர்கள் நான்குவழிச் சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே பால்துரை பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ராகவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.
    • அப்போது அவர் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.

    கோபி:

    கோபி செட்டி பாளையம் அருகே உள்ள பொலவக்காளி காளி பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (49). இவரது மனைவி அலமேலு. கூலி தொழிலாளியான மூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று காலை மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.

    அப்போது அவர் பழையூர் பாட்டப்பமடை பள்ளம் பகுதியில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தெரியவந்ததும் அலமேலு மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • மரத்தை ஓட்டிச் சென்ற மின்வயர் மீது தொழிலாளி கை பட்டதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் கருப்பையா (வயது51). கூலித்தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று முப்பிடாரி அம்மன் கோவில் பின்புறம் உள்ள வயல்காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மரத்தை ஓட்டிச் சென்ற மின்வயர் மீது கை பட்டதில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
    • சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் பாக்கமுடையான்பட்டில் உள்ள ஒரு மது கடையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

    லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்ப நாதன்(வயது62). இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் சென்டரிங் வேலை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. புஷ்பநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் பாக்கமுடையான்பட்டில் உள்ள ஒரு மது கடையில் மது குடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

    உடனே தகவல் அறிந்த அவரது மருமகன் தனசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புஷ்பநாதனை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி புஷ்பநாதன் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திண்டுக்கல் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி :

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 42). கூலித் தொழிலாளி. இவர் செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பைக்கில் வந்தார்.

    வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில் கருப்பணசாமி கோவில் அருகே வந்த போது, எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ராம்குமார் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திண்டுக்கல் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர்மின் அழுத்த வயரில் உரசியதில மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் இது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி என்ற சிங்காரவேலன் (வயது 42). கட்டிட கூலி தொழிலாளி யான இவர் ஒரு வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை பகுதியில் உயர் மின் அழுத்த வயர் செல்வதை கவனிக்காமல் கீழே இருந்த கம்பியை மேல் நோக்கி தூக்கினார்.

    அப்போது உயர்மின் அழுத்த வயரில் பட்டு மின்சாரம் தாக்கி வீசப்ப ட்டார். சக தொழிலாளர்கள் மீட்டு அருகில் உள்ள தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டார் எனக்கூறினர். பிரேத பரிசோதனைக்காக தேனி க. விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் அவரது உடல் கொண்டு செல்ல ப்பட்டது.

    தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு ள்ளனர். மின்சாரம் தாக்கி இறந்த பாண்டிக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
    • ரெயில்வே தண்டவாளம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.

    கோவை:

    கோவை உக்கடம் அருகே உள்ள ஜி.எம். நகரை சேர்ந்தவர் அப்துல்காதர் (வயது 55). இவர் 5 முக்கில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வாலாங்குளம் ரெயில்வே தண்டவாளம் வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு குளத்துக்குள் மயங்கி விழுந்தார். தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் நீரில் மூழ்கி இறந்த அப்துல்காதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி இறந்து போனார்.

    பாகூர்:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை செல்வம் மடுகரை ஏரிக்கரை பகுதியில் உள்ள சாராயக்கடை அருகே சாலையோரம் படுத்து தூங்கினார்.

    அப்போது சூரமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக செல்வம் மீது மோதியது. இதில், மினி வேன் சக்கரம் செல்வம் உடல் மீது ஏறி இறங்கியது.

    படுகாயம் அடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து செல்வத்தின் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் புவனேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து நடந்த அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்து போனார். அதன் விவரம் வருமாறு:-

    மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் வேங்கடபதி. இவரது மனைவி ஞானாம்பாள் (60). இவர், சம்பவத்தன்று மடுகரை ஏரிக்கரையில் சாலையோரம் அமர்ந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஞானாம்பாள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஞானாம்பாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒரத்தநாடு அருகே இன்று காலை வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செம்மண்குட்டை பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 22). இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. மதுகேஷ் என்ற ஒரு வயதில் மகன் உள்ளான்.

    வீரமணி அப்பகுதியில் உள்ள வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை வழக்கம் போல் வீரமணி வேலைக்கு வந்தார். அப்போது வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்த போது எதிர்பாராத விதமாக வீரமணியை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகி அவர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் வீரமணியை மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி ஒரத்தநாடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முசிறி அருகே லாரியும், லோடு ஆட்டோவும் நேருக்குநேர் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
    முசிறி:

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள ஸ்ரீதேவிமங்கலத்தில் கருவேல மரங்களை வெட்டி லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு முசிறியை நோக்கி தொழிலாளர்கள் சிலர் இன்று காலை திரும்பி கொண்டிருந்தனர். உமையாள்புரம் அரசு பள்ளி அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த லாரியும், லோடு ஆட்டோவும் நேருக்குநேர் மோதின. இதில் லோடு ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.  

    திருச்சி வையம்பட்டி எளமனம்ராஜகோடாங்கி பட்டியை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த ஜெயா(36), ஜெயலட்சுமி (40) மற்றும் குளித்தலை குப்பாச்சிப்பட்டி கீழகோவில்பட்டியை சேர்ந்த  டிரைவர் பாக்கியராஜ் (18), அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி (18) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    மேலும் காயமடைந்த சிலர் நாயக்கனூரை சேர்ந்த விஜயகுமார் (23), ராஜகோடாடங்கிப்பட்டியை சேர்ந்த பாரதி (17) ஆகியோர்  முசிறி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறக்க இருந்த நிலையில் கர்ப்பிணி மனைவி கண்ணீர் விட்டு கதறினார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சுப்ரமணியன் (வயது 38), விவசாயி. இவர் செந்துறையில் இருந்து ராயம்புரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராயம்புரம் காலணி  அருகே சென்றபோது, எதிரே கான்கிரீட் ஏற்றிவந்த டிப்பர் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில் பைக்கில் சென்ற சுப்பிரமணியன் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் லாரி டிரைவரை கைது செய்வதோடு, இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் செந்துறை-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் விவசாயியின் உறவினர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் விபத்தினை ஏற்படுத்திய வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர். 

    மேலும் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த சுப்பிரமணிக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மலர்கொடி கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவருக்கு குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    இதனால் மலர்கொடிக்கு அவரது பெற்றோர் வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணியன் விபத்தில் இறந்த சம்பவம் கேட்டு கர்ப்பிணியான அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறினார். சுப்ரமணியன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.    
    செக் குடியரசு நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவினால் ஏற்பட்ட தீ விபத்தில் 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். #Czechmine #minefire
    பிராகா:

    செக் குடியரசு நாட்டின் தலைநகர் பிராகாவில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் கிழக்கில் உள்ள கார்வினா நகரில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது.

    இந்த சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சுரங்கத்தின் அடியில் சுமார் 800 மீட்டர் ஆழத்தில் சில தொழிலாளர்கள் பாறைகளை பிளந்து நிலக்கரியை வெட்டி எடுத்து கொண்டிருந்தனர்.


    பிற்பகல் வேளையில் அங்கு பாறைகளில் இருந்து மீத்தேன் வாயு கசிய ஆரம்பித்தது. சில நிமிடங்களில் மீத்தேன் எரிவாயு தீபந்தாக மாறி அங்கிருந்த தொழிலாளர்களை தாக்கியது. இந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Czechmine #minefire
    ×