search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mini van accident"

    • டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    போளூர்:

    ஜமுனா முத்தூர் அடுத்த போங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 44). இவர் போளூருக்கு பொருட்களை வாங்குவதற்காக வந்தார். பொருட்களை வாங்கிக்கொண்டு பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக மினி வேன் ஒன்று வந்தது. அந்த வேன் போங்கனூர் கிராமத்திற்கு செல்வதால் வள்ளியம்மாள் அதில் ஏறினார். வேனில் வள்ளியம்மாள் உட்பட 10 பேர் பயணம் செய்தனர்.

    வேனை அதே உரைச் சேர்ந்த குப்பன் (25) என்பவர் ஓட்டி சென்றார். மினி வேன் அத்திமூர் துணை மின் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

    திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் வள்ளியம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து போளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வள்ளியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் காயம்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் நேற்று திறன் மேம்பாட்டு திருவிழா நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். மேலபுஞ்சை கிராமத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த நபர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சி முடிந்து மினி வேன் ஒன்றில் மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது மினிவேன் புதுப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த வயல்வெளியில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 5 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இது குறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி இறந்து போனார்.

    பாகூர்:

    நெட்டப்பாக்கம் அருகே மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை செல்வம் மடுகரை ஏரிக்கரை பகுதியில் உள்ள சாராயக்கடை அருகே சாலையோரம் படுத்து தூங்கினார்.

    அப்போது சூரமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக செல்வம் மீது மோதியது. இதில், மினி வேன் சக்கரம் செல்வம் உடல் மீது ஏறி இறங்கியது.

    படுகாயம் அடைந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து செல்வத்தின் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, உதவி சப்-இன்ஸ்பெக்டர் புவனேஷ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த விபத்து நடந்த அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்து போனார். அதன் விவரம் வருமாறு:-

    மடுகரை வாணியர் தெருவை சேர்ந்தவர் வேங்கடபதி. இவரது மனைவி ஞானாம்பாள் (60). இவர், சம்பவத்தன்று மடுகரை ஏரிக்கரையில் சாலையோரம் அமர்ந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஞானாம்பாள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ஞானாம்பாள் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்தும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பத்தில் மினி வேன் மோதியதில் நர்சிங் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் மணவெளி பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவர் பொதுப்பணித்துறையில் மஸ்தூராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் லட்சுமி (வயது 20). இவர் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார்.

    இவர் தினமும் சைக்கிளில் வந்து  அரியாங்குப்பம் சந்திப்பில் சைக்கிளை நிறுத்தி விட்டு பஸ்சில் கல்லூரிக்கு செல்வது வழக்கம். 
    அதுபோல் நேற்று காலை லட்சுமி கல்லூரிக்கு செல்ல சைக்கிளில் அரியாங்குப்பம் சந்திப்புக்கு வந்தார். அப்போது பின்னோக்கி வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது. 

    இதில், தூக்கி வீசப்பட்ட லட்சுமி படுகாயம் அடைந்தார். உடனடியாக லட்சுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×