குடிபோதையில் தண்ணீரில் தவறிவிழுந்து தொழிலாளி சாவு

மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.அப்போது அவர் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.
குடிபோதையில் தண்ணீரில் தவறிவிழுந்து தொழிலாளி சாவு
Published on

கோபி:

கோபி செட்டி பாளையம் அருகே உள்ள பொலவக்காளி காளி பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (49). இவரது மனைவி அலமேலு. கூலி தொழிலாளியான மூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று காலை மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.

அப்போது அவர் பழையூர் பாட்டப்பமடை பள்ளம் பகுதியில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தெரியவந்ததும் அலமேலு மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com