என் மலர்
நீங்கள் தேடியது "car cycle crash"
பாகூர்:
புதுவை பூரணாங்குப்பம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது55), மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று மாலை தவளக்குப்பத்தில் கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். தவளக்குப்பம்- பூரணாங்குப்பம் சந்திப்பில் சாலையை கடக்க முயன்ற போது பாகூரில் இருந்து புதுவை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட பழனிச்சாமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இன்று காலை 6 மணிக்கு பழனிச்சாமி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே கொருக்குமேடு காந்திநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது74). இவர் தவளக்குப்பம்- புதுவை மெயின்ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
நேற்று மதியம் இவர் மற்றொரு கம்பெனியில் காவலாளியாக வேலைபார்த்து வரும் நண்பரை பார்க்க சைக்கிளில் சென்றார்.
சாலையை கடக்க முயன்ற போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த பிரான்சிசை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரான்சிஸ் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் அந்தோணி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேட்ரிக் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






