search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Weather centre"

    கேரளாவை மிரட்டி வந்த லூபன் புயல் திசை மாறி ஓமன் கடற்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. இதன்மூலம் கேரளாவை பயமுறுத்திய புயல் ஆபத்து நீங்கியது. #LubanCyclone
    சென்னை:

    வங்க கடலிலும், அரபிக்கடலிலும் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் புயல் சின்னமாக தீவிரம் அடைகிறது. தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் புயலாக மாறி வடமேற்கு திசையில் வடக்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதேபோல் கிழக்கு மத்திய மற்றும் தென் கிழக்கு அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து ‘லூபன்’ புயலாக மாறியது. இது இன்று காலை ஓமன் நாட்டில் இருந்து 1,040 கி.மீ. தொலைவிலும், ஏமன் நாட்டின் சோகோட்ரா தீவில் இருந்து 920 கி.மீ. தொலைவிலும், மினிக்காய் தீவில் இருந்து 1,260 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 5 நாட்களில் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாட்டு கடற்கரையை அடையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் கேரளாவை பயமுறுத்திய புயல் ஆபத்து நீங்கியது.


    இந்த நிலையில் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியானது அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி மற்றும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டது.

    ஆனால் அரபிக்கடலிலும் வங்க கடலிலும் புயல் உருவாகி இருப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை.

    இந்த புயல்கள் மறைந்த பின்புதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #LubanCyclone
    தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #WeatherCentre
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மத்திய வங்க கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

    இவற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


    சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கு 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 17, 18, 19 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மத்திய வங்க கடல் பகுதிக்கும் ஆந்திர கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் தஞ்சையில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி முதல் பெய்த மழை அளவை கணக்கிட்டால் குறைவான மழையே பெய்துள்ளது.

    வழக்கமாக இந்த சீசனில் 262 மி.மீ. மழை பெய்யும். ஆனால் 229 மி.மீ. மழை தான் பெய்துள்ளது. 13 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNRain #WeatherCentre
    தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #ChennaiRains
    சென்னை:

    சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதிகள் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் மழை நீடித்தது.

    இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழகம்- தென் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.


    தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழைபெய்து வருகிறது. இங்கு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வருகிற 26-ந்தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றமும் அதிகம் காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் இன்று அதிகாலையில் மழை பெய்த நிலையில் தொடர்ந்து மழை தூறல் காணப்பட்டது.

    எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி, அடையார், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.  #ChennaiRains
    தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. #TNRain #HeavyRain
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

    இந்தநிலையில் ஒருவாரமாக மிரட்டிய கனமழை நேற்று முதல் குறையத் தொடங்கி உள்ளது. நாளை முதல் இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.


    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலின் வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னகல்லார் 10 செ.மீ., வால்பாறை 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. #TNRain #HeavyRain
    வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக ஊட்டி, வால்பாறை, சின்னகல்லார், பெரியாறு, தேவலா, பொள்ளாச்சி, குந்தாபாலம், குழித்துறை, போடி நாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர், மயிலம், பூதப்பாண்டி, தக்கலை, பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், பண்ருட்டி, இரணியல் வந்தவாசி ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 13.8 மி.மீ மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 7 மி.மீ மழை பெய்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை தூறல் விழுந்தது. சில பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி கூறியதாவது:-

    தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இந்த ஆண்டு பரவலாக கனமழை பெய்துள்ளது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்கிறது.

    சென்னையில் நேற்று மழை பெய்ததைவிட இன்றும் மழை பெய்யும். ஆனால் குறைவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiRain
    வருகிற 26-ந்தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும், 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையால் ரூ.1,257 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக கொட்டி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. கோட்டயம், கோழிக்கோடு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய பகுதிகளிலும் அதிக மழை பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கேரள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நேற்று மழைக்கு ஆலப்புழாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 118 பேர் மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற 26-ந்தேதி வரை கேரளாவில் கனமழை நீடிக்கும் என்றும், 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்த மழை காரணமாக கேரளாவில் பல மாவட்டங்களில் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் ஆறுகள் போல் மாறிவிட்டன. இதனால் ஏராளமான பொது மக்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். மாவட்டத்திற்கு 6 முகாம்கள் வீதம் மழை வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம்புகுந்து உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாநில அரசு மூலம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை ரூ.1,257 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.293 கோடிக்கு பயிர் சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது. ஏராளமான சாலைகள் இருந்த தடமே தெரியாத அளவுக்கு மழை வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டுவிட்டது.


    சபரிமலையிலும் மழை நீடிக்கிறது. கொட்டும் மழையிலும் சிரமத்தை பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய மந்திரி ரிஜ்ஜு தலைமையிலான குழு வந்துள்ளது. அவர்கள் தொடர்ந்து வெள்ள சேதங்களை கணக்கிட்டு வருகிறார்கள். இவர்கள் தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகு கேரளாவுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படும். #KeralaRain
    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தின் மற்ற இடங்களிலும், புதுவையிலும் சில நேரங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.


    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லார், வால்பாறையில் 7 செ.மீ. மழையும், பொள்ளாச்சி, நீலகிரி ஜி.பஜாரில் 5 செ.மீ மழையும், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், பெரியாறு ஆகிய இடங்களில், 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    ×