search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chance to rain"

    வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #ChennaiRain
    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளையொட்டிய நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக ஊட்டி, வால்பாறை, சின்னகல்லார், பெரியாறு, தேவலா, பொள்ளாச்சி, குந்தாபாலம், குழித்துறை, போடி நாயக்கனூர், உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், திருக்கோவிலூர், மயிலம், பூதப்பாண்டி, தக்கலை, பாபநாசம், செங்கோட்டை, ராதாபுரம், பண்ருட்டி, இரணியல் வந்தவாசி ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

    சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 13.8 மி.மீ மழை பெய்தது. மீனம்பாக்கத்தில் 7 மி.மீ மழை பெய்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மழை தூறல் விழுந்தது. சில பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை அதிகாரி கூறியதாவது:-

    தென்மேற்கு பருவ மழையால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இந்த ஆண்டு பரவலாக கனமழை பெய்துள்ளது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்கிறது.

    சென்னையில் நேற்று மழை பெய்ததைவிட இன்றும் மழை பெய்யும். ஆனால் குறைவாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ChennaiRain
    ×