search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waste water"

    • கழிவுநீர் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • பொது இடங்களில் கழிவுநீரை கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    தஞ்சை மாநகராட்சிக்கு ட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் நச்சுத்தொட்டி சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தலின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தில் அனைத்துவித பாதுகாப்பு இன்சூரன்சு, விபத்து காப்பீடு, பணியாளர் மருத்துவசான்றிதழ், ஓட்டுனர் உரிமம் பயன்பாட்டில் உள்ளவாறு அரசுவிதி களின்படி புதுப்பித்திருக்க வேண்டும்.மாநகராட்சி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன விவரத்தினை இம்மாநகராட்சியில் கண்டிப்பாக பதிவுசெய்து மாநகராட்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டுக்கு ஒருமுறை பதிவுசெய்து தேவையான ஆவணங்களுடன் ரூ.2000 செலுத்தி அதனை வாகனத்தின் முகப்பில் ஒட்டி இருக்க வேண்டும்.

    கழிவுநீரை மாநகராட்சிக்கு சொந்தமான மாரிகுளம் நீருந்து நிலையத்திற்கு கொண்டு சென்று அகற்றிட்டு உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செல்லாமல் நீர் நிலைகள் மற்றும் இதர பொது இடங்களில் கழிவுநீரை கொட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். கழிவுநீர் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதால் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தாமல் நவீனரக கழிவுநீர் வாகனங்கள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும். கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டி நிறைந்திருந்தாலும் உடனடியாக அவற்றை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் ஏதேனும் அசாதாரணமான விபத்துகள் நிகழ்ந்தால் அதற்கு அந்த கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு ஆகும். அந்த கட்டிட உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

    தவிர அதற்கான நஷ்ட ஈடு இழப்புகள் அனைத்தும் கட்டிட உரிமையாளர்களிடமிருந்தே பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தற்போது பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களாக பெய்த கோடை மழையால் சாலைகள் மோசமாக காட்சியளிக்கிறது.

    நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி விதிகளில் இந்த பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.

    சமீபத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் போதுகூட கிழக்கு சித்திரை வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. தற்போது மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. சாலைகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வெளியூர் பக்தர்கள் நேதாஜி சாலை வழியாக வரவேண்டும். ஆனால் நேதாஜி சாலையில் உள்ள தண்டபாணி முருகன் கோவிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் வெளி மாநிலத்த வர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    மேலும் மாதத்தில் ஒரு முறை பாதாள சாக்கடையை எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் நடு ரோட்டில் கொட்டி வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சொல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க அக்கறையும் காட்டவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இன்று காலையில் வடக்கு மாசி வீதி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று நாள்தோறும் கோவிலை சுற்றியுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வெளி மாவட்டத்தினர் மற்றும் மற்ற மாநில மக்கள் டவுன்ஹால் ரோடு வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். டவுன்ஹால் ரோடு பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கி சுகாதார மற்ற முறையில் காட்சி யளிக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து நகருக்கு வரும் மக்களுக்கு மதுரையின் சுகாதாரம் குறித்து தவறான எண்ணம் ஏற்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோவிலை சுற்றி சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இது போன்ற சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    • உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது.
    • நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) பிராண்ட்ஸ்- சோா்சிங் லீடா்ஸ் (பிஎஸ்எல்) நிறுவனம் சாா்பில் சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.

    இதில், ஏஇபிசியின் தென்னிந்திய பொறுப்பாளரும், பியோ தலைவருமான ஏ.சக்திவேல் பேசியதாவது:-

    உலக நாடுகளில் சீதோசன நிலை பரவலாக மாறி வருகிறது. சுற்றுச்சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகா்கின்றது. உலகிலேயே 100 சதவீதம் சுற்றுச்சூழல் மாசடையாமல் கழிவுநீா் ஜீரோ டிகிரி முறையில் சுத்திகரிப்பு திருப்பூரில் மட்டுமே 10 ஆண்டுகளாக நடக்கிறது. நாளொன்றுக்கு திருப்பூரில் 13 கோடி லிட்டா் கழிவுநீா் சுத்திகரிக்கப்படுகிறது.

    அதில் 96 சதவீதம் மறு பயன்பாடு, 4 சதவிகிதம் ஆவியாக்கப்படுகிறது. பசுமையை மேம்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றாா்.

    இதைத்தொடா்ந்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது:-

    ஏ.இ.பி.சி., மற்றும் பி.எஸ்.எல்., இணைந்து டெல்லி, பெங்களூரு, திருப்பூர், மும்பை, குர்ஹாம் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மே 5 முதல் 27-ந் தேதி வரை சுற்றுச்சூழல் மாசடையாமல் ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியை பெருக்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    புவி மாசுபடாத ஆடைகள் தயாரிப்பில் திருப்பூர் நகரை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நோக்கமே 2025-26ம் ஆண்டுக்குள் திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகள் அனைத்தும் பசுமை ஆடைகளாக தயாரிப்பதற்கான வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளோம்.

    திருப்பூர் மாநகரில் மொத்தமாக சூரிய ஒளி மின் சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி மூலம் 1,650 மெகாவாட் மின் உற்பத்தியை தயார்படுத்தி கொண்டுள்ளோம். இதில், மாவட்ட அளவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு 250 மெகாவாட் மின் சக்தியே போதுமானது. மீதமுள்ள 650 மெகாவாட்டை நகர பயன்பாட்டிற்காக அளித்து வருகிறோம்.

    உலக அளவில் உள்ள வர்த்தகர்களுக்கு திருப்பூரின் பசுமை திட்டம் குறித்து முழுமையாக தெரிவதில்லை. அதனை முன்னிறுத்தி பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் தனித்துவ தன்மையை காட்டுவதற்கே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.

    • அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும்.
    • பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    பொன்னேரி நகராட்சி உள்ள 27 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர், தொழிற்சாலைகளின் கழிவு நீர் டிராக்டர், லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பெரும்பாலான வாகனங்கள் உரிய அனுமதி பெறாமல் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபடுவதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து உரிய அனுமதி பெறாமல் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்று பொன்னேரி நகராட்சி ஆணையாளர் கோபிநாத் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • கழிவுநீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோடையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது.
    • பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம் மனு கொடுத்தனர்.

    பல்லடம் :

    பல்லடம்அருகே மாதப்பூரில் கோவை- திருச்சி தேசிய நெடு ஞ்சாலை, சிங்கனூர் பிரிவு அருகே தனியார் ஓட்டல் ஒன்றுசெயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சுமார் 300 மீட்டர் தூரத்தில் உள்ள நீரோ டையில் விடப்படுவதாக புகார்எழுந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அருகில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகள் கழிவு நீரை ஓடையில் விடும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியிடம்மனு கொடுத்தனர்.அந்த மனுவில்அவர்கள் கூறியிருப்பதாவது:- ஓட்டலில் இருந்து சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு குழாய்அமைத்து நீரோடையில் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இந்தகழிவுநீரானது நீரோடையில் கட்டப்ப ட்டுள்ள தடுப்பணைகளில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர்ம ட்டமும் பாதிக்கப்படுகிறது. அருகில் உள்ள விவசாய நிலங்களில்உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்ஆழ்துளை குழாயில் இருந்து வரும் குடிநீரை மக்கள் குடிக்க முடியவில்லை. துர்நாற்றத்தை கட்டுப்படுத்த ஓட்டல் நிர்வாகம் ஒருவித ரசாயனத்தை பயன்படு த்துவதாக தெரிகிறது. இந்த ரசாயனம் கலந்த நீர் அருகில் உள்ள கிணறுகளில் கலந்து அந்த நீரை குடிக்கும் மாடுகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வளர்த்து வந்த மீன்களும் இறந்து விட்டது. ஓட்டல் நிர்வாகம் ஏற்கனவே அந்த பகுதியில் உள்ளஆழ்துளை கிணறுகளிலும் கழிவுநீரை கலந்து விடுவதாக தெரி கிறது. சுத்தகரிக்கப்படாத இந்த கழிவுநீரை அப்படியே நீரோடையில் விடுவதால் பெரும்சுற்றுச்சூழல் மாசுபாடுஏற்பட்டு வருகிறது.

    நீரோடைகளில் கழிவு நீரை கலக்கக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருந்தும்அதனை மதிக்காமல் செயல்படும் ஓட்டல் நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்ப ட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் பெற்று தர வேண்டும். இந்த சட்டவிரோத செயலை உடனடியாக தடுக்க ஒன்றிய நிர்வாகமும்,அரசு அதிகாரிகளும் முன்வர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்தெரிவித்து ள்ளனர்.

    • சாக்கடை நீர் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள்..
    • மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். .

    விழுப்புரம்::

    மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் சாக்கடை நீர் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகிறார்கள். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே நகர் கிராமத்தில் 5000 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் விவசாயிகள்   இங்கு ஊரின் நடுவில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பெருமாள் கோவில் எதிரில் சாலையில் தேங்கி நிற்கிறது  சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, இந்த சாலையில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு முறை மனு மற்றும் புகார் கொடுத்தனர். இருப்பினும் கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட வில்லை.  எனவே, புதியதாக பொறுப்பேற்றுள்ள விழுப்புரம் மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு நகர் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் ப-வடிவ வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு அதில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்தது.
    • நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளையும், தேங்கிய கழிவுநீரையும் விரைவாக அப்புறப்படுத்தினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட புஸ்ஸி வீதியில் ப-வடிவ வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு அதில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் சாலையில் நிரம்பி தேங்கி கிடந்தது.

    இதை அறிந்த தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பொதுப்பணிதுறை அதிகாரியிடம் தெரிவித்து அதனை விரைந்து சுத்திகரிப்பு செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    ஆனால் மார்ச் மாதம் வரை அவகாசம் கேட்டதால் உடனே நகராட்சி இயக்குனர் சிவக்குமார் மற்றும் டாக்டர் துளசிராமனிடம் செல்போனில் பேசி அங்குள்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக கழிவு நீரை உறிந்து எடுக்கும் நவீன எந்திரம் பொருத்திய லாரியை வரவைத்து நகராட்சி ஊழியர்கள் உதவியுடன் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளையும், தேங்கிய கழிவுநீரையும் விரைவாக அப்புறப்படுத்தினார்.

    மேலும் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ப-வடிவ வாய்க்காலையும் தூர்வாரி சுத்திகரிப்பு செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.

    இதில் அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞர் அணி ராஜி, கிளை செயலாளர்கள் காளப்பன் மற்றும் ராகேஷ் கவுதமன், தி.மு.க.வை சேர்ந்த இருதயராஜ், ஈசாக், மரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒரு வருடமாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் மற்றும் திருப்பாற்கடல் ஊராட்சியில் பாலாற்றில் ஆய்துளை கிணறுகள் அமைத்து பைப் லைன் வழியாக ராமாபுரம், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம் போன்ற ஊர்களுக்கு தண்ணீர் செல்கிறது.

    இந்நிலையில் பாலாற்றில் இருந்து அத்திப்பட்டு செல்லும் வழியில் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

    ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகிறது.

    மேலும் சிறு பாலத்தில் தண்ணீர் தேங்கி பாலத்தின் உறுதி தன்மையை இழந்து சேதம் அடையும் அபாயம் உள்ளது ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்த வீணாகும் குடிநீரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா?.

    • நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
    • குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை முதல் பல்லடம் பனப்பாளையம் வரை உள்ள சுமார் 12 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பனப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளின் போது அந்த வழியே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணானது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர்.

    • கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது.
    • சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கிராம ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பயன்படுத்தும் வகையில் கண்டமங்கலம் ஊராட்சி மூலம் குடிநீர் குழாய்கள் மூலம் வழங்கி வருகின்றனர். ‌‌ கண்டமங்கலம் ஊராட்சி மூலம் வழங்கப்பட்ட குடிநீர் களங்கிய நிலையில் சேறும் சகதிகமாக வந்தது. கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டு தெரு பகுதியில் குடிநீர் கலங்கிய நிலையில் வந்ததால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து குடிநீர் கலங்களாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்தக் குடிநீரை பருகினால் காய்ச்சல், காலரா போன்ற கொடிய நோய்கள் வரக்கூடிய நிலை உள்ளது. எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாக்கடை கழிவு நீருடன் கான்கிரீட் கலவை போடப்பட்டது
    • மேயர் கவிதா நேரில் ஆய்வு

    கரூர்:

    கரூரில் சாக்கடை கழிவுநீருடன் கான்கிரீட் கலவை போடப்பட்ட தொடர்பாக பொதுமக்களிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்களை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வது வார்டு கே.ஏ. நகரில் சாக்கடை வடிகால் கட்டும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. சாக்கடை கால்வாயின் இரு பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சாக்கடை கால்வாயின் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கழிவுநீர் ஓட்டத்தை தடுத்துவிட்டு அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்காமல் சாக்கடை கழிவுநீருடனே கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்கில் பரவியதை அடுத்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மண்டல குழுத்தலைவர் சக்திவேல், அதிகாரிகள் சாக்கடை கால்வாய் கட்டுமானம் குறித்து நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தெருவில் கழிவுநீர் தெப்பம் போல் நிறைந்திருக்கிறது.
    மதுரை

    மதுரை நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு சனி மற்றும் விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கூடுவார்கள். மேலும் முகூர்த்த நாட்களில் அதிக அளவில் இக்கோவிலில் திருமணங்கள் நடைபெறுகின்றன.

    இக்கோவில் அமைந்து ள்ள கூடலழகர் பெருமாள் கோவில் தெருவில் வாகனம் நிறுத்தும் இடமும் அமைந்துள்ளது. இதனால் இந்தக் கோவில் தெருவை தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

    இந்த கோவில் அமைந்துள்ள தெருவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது தொடர்ந்து வருகிறது. இதனால் கோவில் தெருவின் தொடக்கத்தில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லவே தயக்கம் காட்டுகின்றனர்.

    பலமாதங்களாக இதே நிலை நீடித்து வருகிறது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.

    எனவே கோவிலுக்கு செல்லும் இந்தப் பாதையில் கழிவு நீர் தேங்குவதை தடுத்து நிறுத்தி சுகாதாரமான முறையில் பேணி காக்க வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×