search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீணாகும் குடிநீர்"

    • தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் வேலூர் மாநகராட்சிக்கு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 944 வழியிடை ஊரக கிராமங்களுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தினசரி 150 எம்.எல்.டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குடிநீர் குழாய் உடைப்பு

    இந்நிலையில் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் வேலூர் மாநகராட்சி ராட்சத குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலையில் நடந்து செல்வோரும் வாகன ஓட்டிகளும் தண்ணீரில் நனைந்தபடியே சென்றனர். தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முறையான பராமரிப்பு பணி இல்லாததால் ராட்சத குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க புதிய குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • ஒரு வருடமாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் மற்றும் திருப்பாற்கடல் ஊராட்சியில் பாலாற்றில் ஆய்துளை கிணறுகள் அமைத்து பைப் லைன் வழியாக ராமாபுரம், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம் போன்ற ஊர்களுக்கு தண்ணீர் செல்கிறது.

    இந்நிலையில் பாலாற்றில் இருந்து அத்திப்பட்டு செல்லும் வழியில் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.

    ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகிறது.

    மேலும் சிறு பாலத்தில் தண்ணீர் தேங்கி பாலத்தின் உறுதி தன்மையை இழந்து சேதம் அடையும் அபாயம் உள்ளது ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்த வீணாகும் குடிநீரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா?.

    • மதுரை அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை வசந்த நகர் பகுதியில் மெயின் ரோட்டில் குழாய் உடைந்ததால் அந்த பகுதியில் ஆறு போல குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழங்காநத்தம், ஜெய்ஹிந்த்புரம், முத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் பிரதான குழாய் வசந்த நகர் வழியாக செல்கிறது அந்த குழாயில் இன்று காலை திடீரென உடைப்பு ஏற்பட்டதால் மெயின் ரோட்டில் குடிநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது.இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குழாய் உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த தண்ணீர் வசந்த நகர் மெயின் ரோட்டில் இருந்து பழங்காநத்தம் சந்திப்பு வரை குளம் போல தேங்கியது இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டவுடன் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதிக அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாலை அமைக்கும் பணியில் ஊழியர்கள்மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர்.
    • கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், பண்ணைப்புரம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கூடலூரில் இருந்து மந்தைவாய்க்கால் வரை சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அதிகாரிகள் மேற்பார்வை இல்லாமல் ஊழியர்களே ஈடுபட்டு வருவதால் அடிக்கடி குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி செல்வது வாடிக்கையாக உள்ளது.

    நேற்று இரவு கூடலூரில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் அரசு கள்ளர் பள்ளி அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு நீரூற்று போல தண்ணீர் வெளியேறி வீணாகி செல்கிறது. இது குறித்து இன்று அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு புகார்அளித்தனர். அடிக்கடி இதுபோல குழாய் உடைப்பு ஏற்படுவதால் மெத்தனமாக பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதிகாரிகள் மேற்பா ர்வையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ×