search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கடை கழிவு நீருடன் கான்கிரீட் கலவை
    X

    சாக்கடை கழிவு நீருடன் கான்கிரீட் கலவை

    • சாக்கடை கழிவு நீருடன் கான்கிரீட் கலவை போடப்பட்டது
    • மேயர் கவிதா நேரில் ஆய்வு

    கரூர்:

    கரூரில் சாக்கடை கழிவுநீருடன் கான்கிரீட் கலவை போடப்பட்ட தொடர்பாக பொதுமக்களிடம் பேட்டி எடுத்த செய்தியாளர்களை திமுக நிர்வாகி மிரட்டிய சம்பவம் செய்தியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வது வார்டு கே.ஏ. நகரில் சாக்கடை வடிகால் கட்டும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. சாக்கடை கால்வாயின் இரு பக்கவாட்டு சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் கான்கிரீட் அடித்தளம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சாக்கடை கால்வாயின் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கழிவுநீர் ஓட்டத்தை தடுத்துவிட்டு அடிப்பகுதியில் கான்கிரீட் அமைக்காமல் சாக்கடை கழிவுநீருடனே கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்கில் பரவியதை அடுத்து கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மண்டல குழுத்தலைவர் சக்திவேல், அதிகாரிகள் சாக்கடை கால்வாய் கட்டுமானம் குறித்து நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×