search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayalakshmi"

    • சீமான் மீது புகார் தெரிவித்த நடிகை விஜயலட்சுமிக்கு அக்கட்சியினர் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது.
    • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி இன்று புகார் அளித்தார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் தெரிவித்த நடிகை விஜயலட்சுமிக்கு அக்கட்சியினர் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி இன்று புகார் அளித்தார். அவர் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சியினர் அங்கு திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள். இதையடுத்து கமிஷனர் அலுவலகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • முதல் முறையாக சம்மன் அனுப்பியபோதும் நேரில் ஆஜராகவில்லை
    • தற்போது வீட்டில் நேரடியாக சென்று வழங்கியபோது, சம்மனை ஏற்க மறுப்பு

    நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் அடிப்படையில், சீமான் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகும்படி ஏற்கனவே சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் நேரில் ஆஜராகவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை வளசரவாக்கம் போலீசார், பாலவாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்று சம்மன் வழங்க முடிவு செய்தனர். நாளை நேரில் ஆஜராகுவதற்கான சம்மனை வழங்க சென்றபோது, சீமான் தரப்பு சம்மனை வாங்க மறுத்துவிட்டது.

    சீமான் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்த கொள்ள இருப்பதால் நேரில் ஆஜராக முடியும், அவர்கள் காவல் நிலையத்திற்கு வந்து சம்மனை பெற்றுக்கொண்டு மற்றொரு தேதியில் நேரில் ஆஜராகுவார் எனவும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில், விஜயலட்சுமி மீது மானநஷ்டஈடு வழக்கு தொடர இருப்பதாகவும், 2011-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் தொடங்கியிருப்பதால், வழக்கை ரத்து செய்யக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாகவும் சீமான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சனிக்கிழமை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணைக்கு வருமாறு அவருக்கு நேரில் சம்மனை வழங்கினார்கள்.
    • விஜயலட்சுமி 2011-ல் அளித்த புகார் தொடர்பாக சமாதானமாக செல்வதாக கூறியதையடுத்து வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது.

    போரூர்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் கற்பழிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இதை தொடர்ந்து விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனையையும் மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டுக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணைக்கு வருமாறு அவருக்கு நேரில் சம்மனை வழங்கினார்கள். அதில் 10-ந் தேதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை) வளசரவாக்கம் போலீசில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

     

    ஆனால் அன்று சீமான் ஆஜராகவில்லை. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கூறும்போது, சீமான் 12-ந்தேதி காலையில் ஆஜராவார் என்று தெரிவித்து இருந்தனர். இதன்படி சீமான் இன்று காலையில் வளசரவாக்கம் போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    நாம் தமிழர் கட்சியினரும் வளசரவாக்கம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். 500-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினார்கள். 200-க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

    சீமானிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் காத்திருந்தனர். 11 மணிக்கு பிறகு சீமான் வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் காலை 10.30 மணியளவில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வக்கீல்கள் மட்டும் வந்தனர். சீமான் நேரில் ஆஜராகவில்லை. இதை தொடர்ந்து போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

    பின்னர் சீமான் தரப்பு வக்கீல் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சில காரணங்களால் எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை. இது தொடர்பாக விளக்க கடிதம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து உள்ளோம். நடிகை விஜயலட்சுமி 2011-ல் அளித்த புகார் தொடர்பாக சமாதானமாக செல்வதாக கூறியதையடுத்து வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றத்தில் ஒப்புதல் ஏதேனும் பெறப்பட்டுள்ளதா? என்று கேட்டு மற்றொரு கடிதமும் கொடுத்துள்ளோம்.

    இது தொடர்பாக ஆலோசித்து விளக்கம் அளிப்பதாக போலீசார் தரப்பில் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை விளக்கம் கிடைத்தபின் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சீமான் தயாராக உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது மீண்டும் புகார் அளித்து இருந்தார்.
    • விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு அளித்த பாலியல் புகார் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தற்போது போலீசார் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது மீண்டும் புகார் அளித்து இருந்தார். இந்த புகார் தொடர்பாக விஜயலட்சுமியை நேரில் அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். இதை தொடர்ந்து திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தியும் விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து சீமானுக்கு சம்மன் வழங்கி நேரில் வரவழைத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதன்படி கடந்த வாரம் கோவை சென்றிருந்த சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அப்போதே அவரை போலீசார் கைது செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. பின்னர் சம்மன் கொடுப்பதற்காகவே போலீசார் சென்றிருப்பதாக கூறப்பட்டது. அப்போது அவரிடம் சம்மன் வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சீமானிடம் போலீசார் நேற்று இரவு நேரில் சம்மன் வழங்கி உள்ளனர். சென்னை பாலவாக்கம் சக்தி மூர்த்தி அம்மன் நகரில் வசித்து வரும் சீமானின் வீட்டுக்கு நேரில் சென்ற வளசரவாக்கம் போலீசார் அவரிடம் சம்மனை நேரில் வழங்கினர்.

    விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே தாங்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில் இந்த சம்மன் சீமானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இதைதொடர்ந்து சீமான் இன்று போலீசில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீமான் இன்று ஆஜராகவில்லை என்றும் வருகிற 12-ந்தேதி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராவார் என்றும் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இதன் மூலம் அன்று சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சீமான் மீது விஜயலட்சுமிஅளித்துள்ள புகார் மீது போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சீமான் மீது போலீசார் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜயலட்சுமி அளித்துள்ள வாக்குமூலத்தில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்ட தாக கூறி இருந்தார். இதற்காக நேற்று முன்தினம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி சீமானை விசாரணைக்கு அழைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.
    • பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகிறார்கள்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அளித்துள்ள பாலியல் புகார் தொடர்பாக மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் மேற்பார்வையில் விஜயலட்சுமி அளித்துள்ள புகார் மீது அடுத்தடுத்து போலீசார் சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சீமான் மீது புகார் அளித்த விஜயலட்சுமி அளித்த பேட்டியில் 7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக போலீஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையிலும் நடந்தது என்ன? என்பது பற்றி விஜயலட்சுமி கடந்த வாரம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான புகார் மீது போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

    இதை தொடர்ந்து விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்திருந்தனர். இதன்படி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலையில் விஜயலட்சுமி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    இந்த பரிசோதனை தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீதான புகாரில் மேல் நடவடிக்கைக்கு போலீசார் தயாராகி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்த போது 5 தனிப்படையினர் அங்கு விரைந்திருந்தனர். இதனால் சீமான் மீது கைது நடவடிக்கை பாய இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது.

    இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது சம்மன் கொடுப்பதற்காகவே கோவை சென்றுள்ளோம் என்று தெரிவித்தனர். ஆனால் சீமான் தரப்பில் சென்னைக்கு வந்த பின் சம்மனை வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சீமான் மீதான புகாரில் விஜயலட்சுமிக்கு போலீசார் திடீரென மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜயலட்சுமி புகாரில் போலீசார் அடுத்து மேற்கொள்ள உள்ள நடவடிக்கை என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
    • அதே நேரத்தில் சீமானை போலீசார் கைது செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயலட்சுமி அளித்த புகாரின் மீது போலீசார் பரபரப்பாக விசாரணை நடத்தி வருவதால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

    சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு புகார் அளித்த பிறகு விஜயலட்சுமி அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் சீமான் மீது விஜயலட்சுமி அளித்து உள்ள புதிய புகார் பூதாகரமாகி இருக்கிறது.

    சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

    இதன் பேரில் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் விசாரணை நடத்தி விஜயலட்சுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். இதை தொடர்ந்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விஜய லட்சுமி மாஜிஸ்தி ரேட்டு முன்னிலையிலும் வாக்கு மூலம் அளித்தார். இப்படி சீமான்-விஜயலட்சுமி விவகாரத்தில் போலீசார் கோர்ட்டு மற்றும் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள்.

    விஜயலட்சுமியின் வாக்குமூலத்தை தொடர்ந்து சீமான் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சென்னை போலீசார் பரபரப்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் சீமான் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கொங்குமண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி நிகழ்ச்சி களில் பங்கேற்றுள்ள அவர் தற்போது கோவையில் உள்ளார்.

    இதை தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சீமானிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதன்படி சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் நேற்று இரவு கோவை விரைந்தனர். அங்கு சீமானை சந்தித்து சம்மனை நேரில் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதே நேரத்தில் சீமானை போலீசார் கைது செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் சீமான் தங்கி இருக்கும் இடத்துக்கே போலீசார் விரைந்து சென்று முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு பேட்டி அளித்த விஜயலட்சுமி, சீமானை கைது செய்யும் வரை ஓயமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
    • விஜயலட்சுமி, அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு விஜய லட்சுமி அளித்த புகாரில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில் சீமான் மீது விஜயலட்சுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் புகார் அளித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு பேட்டி அளித்த விஜயலட்சுமி, சீமானை கைது செய்யும் வரை ஓயமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் விஜயலட்சுமியிடம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். அப்போது விஜயலட்சுமி சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் விஜயலட்சுமியை இன்று திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தியும் வாக்குமூலம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

    "விஜயலட்சுமி, அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்காகும். இது தொடர்பாக விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருப்பதை தொடர்ந்து அவரிடம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புகார் அளித்திருப்பதால் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை நடத்துவோம்.

    விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி முடிக்கபட்ட பிறகு சீமானிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்" என்று போலீசார் தெரிவித்தனர்.

    • கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை.
    • இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

    படத்தில் நடிப்பது குறித்து விஜயலட்சுமி கூறியதாவது:-"சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்" என்று கூறினார்.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. 

    அந்த ஆறு முக்கிய கதாபாத்திரங்களில் சந்தீப் கிஷன், சாந்தணு, ஹரிஷ் கல்யாண், ரெஜினா கசாண்ட்ரா, விஜயலட்சுமி மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி நடித்துள்ளனர்.



    திரைக்கதை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்களும், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்களும், பாலசுப்ரமணியம், எம்.எஸ்.பிரபு, விஜய் மில்டன், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் உள்ளிட்ட 6 ஒளிப்பதிவாளர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    முன்னதாக மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேரும் ஒரே கதையில் பணியாற்றியிருப்பதாக பிரபல படத்தொகுப்பபளரான ஸ்ரீகர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.
    சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் உருவாக இருந்தது. சிம்புதேவன் - வடிவேலு இடையேயான கருத்து வேறுபாட்டால் படம் பாதியிலேயே நிற்கிறது. இந்தப் பிரச்சினை எப்போது முடியும் என்று தெரியாததால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

    6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் தலைப்பு அடங்கிய போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த படத்திற்கு கசட தபற என்று தலைப்பு வைத்துள்ளனர்.



    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைப்பதாக கூறப்படுகிறது. 


    சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘அந்த நாள்’ திரைப்படம் போல் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படம் விரைவில் துவங்க இருப்பதாக சிம்புதேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ×