search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டனி"

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கசட தபற' படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்.சி.எஸ்., பிரேம்ஜி, ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேரும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.


    முன்னதாக மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 படத்தொகுப்பாளர்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
    பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற'. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.

    படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.


    மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேரும் ஒரே கதையில் பணியாற்றியிருப்பதாக பிரபல படத்தொகுப்பபளரான ஸ்ரீகர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

    லெனின் பாரதி இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்கு நீங்கள் அளித்த விமர்சனம் எனக்கு செருப்படி மாதிரி இருப்பதாக விஜய் சேதுபதி பேசினார். #MerkuThodarchiMalai
    விஜய்சேதுபதி தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை. மலைவாழ் மூட்டை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வியலை இயல்பாக கூறி இருக்கும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

    இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி, ‘இந்த படத்தை இயக்குனர் லெனின் பாரதிக்காக தயாரிக்க சம்மதித்தேன். படத்தை பார்த்தபோது எனக்கு திருப்தியை தரவில்லை. படத்துக்கு செலவழித்த தொகை வந்தால் போதும் என்று நினைத்தேன். வாங்க யாரும் முன்வரவில்லை. சில லட்சங்கள் நஷ்டத்தில் வெளியிடலாமா என்றும் முயற்சித்தேன். முடியவில்லை. அந்த சூழலில் தான் சரவணன் வந்து ரிலீஸ் செய்து கொடுத்தார். எனக்கு கிடைக்கும் பாராட்டு அத்தனையும் லெனின் பாரதியையே சேரும்.



    பத்திரிகையாளர்கள் பாராட்டிய பிறகு தான், எனக்கே படத்தின் அருமை புரிய தொடங்கியது. இங்கே நல்ல படங்களை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இந்த படத்துக்கும் அந்த சிரமங்களை அனுபவித்தோம். என் படங்களை விமர்சிக்கும்போது எனக்கு கோபம் வந்து இருக்கிறது. இப்போது தான் எனக்கு விமர்சனம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. நீங்கள் ரசித்து கொண்டாடுகிறீர்கள், பெரிய பெரிய வார்த்தைகளால் மனதை குளிர்விக்கிறீர்கள். அது எனக்கு ஒரு பெரிய செருப்படி மாதிரி இருந்தது. எனக்கு பாடம் புகட்டிய அனைவருக்கும் நன்றி.



    இது எனக்கு பெரிய பாடம். தொடர்ந்து தயாரிப்பீர்களா? என்றால் அதை நாம் கேட்கும் கதை தான் முடிவு செய்யும். ஒரு கதை நம்மை தயாரிக்க தூண்ட வேண்டும். அப்படி ஒரு தூண்டுதல் ஏற்பட்டால் தயாரிப்பேன். படத்தில் நடித்த ஆண்டனி பெரிய திறமைசாலி. என்னைவிட உயரத்துக்கு செல்வார் என்று பேசினார். #MerkuThodarchiMalai #VijaySethupathi

    விஜய் சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:

    லால், ரேகா, நிஷாந்த், விஷாலி நடிப்பில் குட்டி குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஆண்டனி’ படத்தின் விமர்சனம். #Antony #AntonyReview
    கொடைக்கானலில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் லால், தனது மனைவி ரேகாவிற்கு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், அவருக்கு துணையாக இருக்க போலீஸ் பணியை விட்டு அவருடன் இருந்து வருகிறார். இவர்களின் ஒரே மகன் நிஷாந்த். இவருக்கு போலீஸில் வேலை கிடைக்கிறது.

    நிஷாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் நாயகி விஷாலியை காதலித்து வருகிறார். இந்த காதல் விஷயம் அம்மா ரேகாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால், இவர்கள் காதலுக்கு அப்பா லால் துணையாக நிற்கிறார்.

    இதனால், லால் துணையுடன் நிஷாந்தும் விஷாலியும் ரேகாவிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி காலையில், விஷாலியும், அப்பா லாலுவும் பதிவு திருமண அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். ஆனால், நிஷாந்த் சொன்ன நேரத்தில் வரவில்லை. நிஷாந்த் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்து உயிருடன் சிக்கிக் கொள்கிறார்.



    நீண்ட நேரம் ஆகியும் நிஷாந்த் வராததால், அவருக்கு என்ன ஆனது என்று லால் தேட ஆரம்பிக்கிறார். நிஷாந்த் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனையா, யாராவது எதிரி இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகிறார். 

    இறுதியில், லால் தனது மகனை கண்டுபிடித்தாரா? மண்ணுக்குள் சிக்கி இருக்கும் நிஷாந்த் உயிருடன் வெளியில் வந்தாரா? நாயகியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த், திறமையாக நடிக்க முயற்சித்திருக்கிறார். போலீசாக கம்பீரமாகவும், மண்ணுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் இளைஞனாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் விஷாலி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.



    நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் லால், மகனுக்கு என்ன ஆனது? எப்படி கண்டுபிடிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனை தேடுவதற்கு இவர் சிகரெட் பிடித்து இறந்து விடுவாரோ என்று திரையில் பார்க்கும் போது பயம் ஏற்படுகிறது. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கலாம். அம்மாவாக நடித்திருக்கும் ரேகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கொடைக்கானலில் ஏற்படும் நிலச்சரிவை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் குட்டி குமார். நல்ல கதையை கையில் எடுத்தாலும் அதை படமாக்கிய விதம் சற்று சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. மண்ணுக்குள் போராடும் நாயகன் மீது பரிதாபம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக படத்தின் முக்கிய காட்சி எந்தவித உணர்வையும் ஏற்படுத்தாதது பலவீனமாக அமைந்திருக்கிறது. 

    சிவாத்மிகா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஒரளவிற்கு ரசிக்க முடிகிறது. பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘ஆண்டனி’ சுமாரானவன்.
    ×