search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவீரன் பிள்ளை"

    • கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கேஎன்ஆர் மூவிஸ் சார்பில் கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். இதில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.


    ராதாரவி

    ராதாரவி

    இப்படம் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் உருவாகியுள்ளது. 'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பிறகு நடிகர் ராதாரவி பேசியதாவது, "மதுவை ஒழிப்போம்.. மக்களை காப்பாற்றுவோம்.. விவசாயிகளை காப்பாற்றுவோம்.. பெண்களை காப்பாற்றுவோம் என ஒரு நல்ல கருத்தை இதில் சொல்லி இருக்கிறார்கள்.


    ராதாரவி

    ராதாரவி


    இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்கும்போது இது நான் நடித்த படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாறுதலாக இருக்கிறது. தண்ணீர் எவ்வளவு நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதை தான் இதில் காட்டியிருக்கிறார்கள்.. இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்" என்றார்.

    • கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை.
    • இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கே.என்.ஆர்.ராஜா கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'.இந்த படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

    படத்தில் நடிப்பது குறித்து விஜயலட்சுமி கூறியதாவது:-"சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்" என்று கூறினார்.

    ×