search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat"

    • புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும்.
    • நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டி தரும் ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நெல்லை-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை பணிகளை பார்வையிட தனி ரெயில் மூலமாக நெல்லை வந்த தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ரெயில் நிலையத்தை பார்வையிட்டார். அதனை தரம் உயர்த்துவது குறித்த ஆலோசனைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில் நிலையத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள இந்த ரெயில் நிலையம் விமான நிலையம் போன்ற அமைப்பில் இருக்கும். அதற்கு தேவையான இட வசதிகள் மற்றும் பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டு அரசு நிதி ஒதுக்கிய உடன் நெல்லை ரெயில் நிலையம் சீரமைக்கும் பணி சில வருடங்களுக்குள் முடிக்கப்படும்.

    நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரெயில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இயக்கப்படும். நெல்லை ரெயில் நிலையத்தில் கூடுதலாக ஒரு நடைமேடை அமைக்கப்படும். நாகர்கோவில்-நெல்லை இரட்டை வழியில் பாதை அமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1893-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள பழமையான ரெயில் நிலையங்களில் சந்திப்பு ரெயில் நிலையமும் ஒன்றாகும். இங்குள்ள 5 நடைமேடைகளில் தினமும் 48 ஜோடி ரெயில்கள் இந்த வழியாக செல்கிறது.

    கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.80.60 கோடி வருவாய் இருந்த நிலையில், கடந்த ஆண்டு வருவாய் ரூ.111.7 கோடியை எட்டியது. இதனால் சந்திப்பு ரெயில் நிலையத்தின் தரம் என்.எஸ்.ஜி.-2ல் இருந்து என்.எஸ்.ஜி-3க்கு உயர்ந்துள்ளது. இதன்மூலம் இங்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. நெல்லையின் அமைவிடம், தற்போதைய சூழல், ரெயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை, எதிர்காலத்தில் உயரும் பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு நிலையத்தை வடிவமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கான மாதிரி படம் வெளியாகி உள்ள நிலையில், சர்வதேச தரத்திலான விமான நிலையம் போல் படங்கள் காட்சியளிப்பதாக பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இன்னும் 4 மாதங்களில் வந்தே பாரத் ரெயில் சென்னைக்கு இயக்கப்படும் என்று பொதுமேலாளர் தெரிவித்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த ரெயில் இயக்கப்பட்டால் சுமார் 3 மணி நேரம் வரை பயண நேரம் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    சென்னை:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.

    வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது.

    ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் மாற்ற வேண்டும்.

    அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரவ்வாய் மொழி பள்ளியாடி குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்த வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுன், பள்ளியாடி குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஷாதோல் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைப்பு.
    • 5 வந்தே பாரத் ரெயில்களை நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பி பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.

    முதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, பாஜக தொண்டர்களின் பூத் அளவிலான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

    மத்தியப் பிரதேச  மாவட்டத்தின் ஷாதோல் மாவட்டத்துக்கு இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், போபால் மாவட்டத்திற்கான பயணம் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிவ் சவுகான் தெரிவித்துள்ளார்.

    திட்டப்படி, இன்று காலை போபாலுக்கு செல்லும் பிரதமர் மோடி ராணி கமலாபதி ரெயில் நிலையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து, வந்தே பாரத் அதிவேக ரயில்களான ராணி கமலாபதி (போபால்)-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மற்றும் ஹதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தொடங்கி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த 5 வந்தே பாரத் ரெயில்களை நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

    நான் நாளை (இன்று) ஜூன் 27-ம் தேதி போபாலில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். முதலில், ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் ஒரு நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில்கள் கொடியேற்றப்படும். இந்த ரெயில்கள் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, பீகார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில நகரங்களை இணைக்கும்.

    மேலும், "மேரா பூத் சப்சே மஸ்பூட்' திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு வளர்ந்த இந்தியாவுக்கான அவர்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தும்

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • கோழிக்கோடு அருகே வந்தே பாரத் ரெயில் சென்ற போது தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது ரெயில் மோதியது.
    • வந்தே பாரத் ரெயில் ஓடத்தொடங்கிய பின்பு கேரளாவில் நடந்த முதல் விபத்து இதுவாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்பு இந்த ரெயில் ஓடதொடங்கியதும் 2 முறை இந்த ரெயில் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.

    இதில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை கோழிக்கோடு அருகே வந்தே பாரத் ரெயில் சென்ற போது தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார், பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வந்தே பாரத் ரெயில் ஓடத்தொடங்கிய பின்பு கேரளாவில் நடந்த முதல் விபத்து இதுவாகும்.

    • புதன்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    • டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ.1065

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து டெல்லி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். டேராடூன்-டெல்லி இடையேயான தூரத்தை, 4 மணி நேரம் 45 நிமிடங்களில் இந்த ரெயில் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

    வார நாட்களில் புதன் கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது. டேராடூனில் இருந்து காலை 7.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் டெல்லி ஆனந்த விகார் ரெயில் நிலையத்திற்கு 11.45 மணிக்கு வந்தடையும். இடையில் மீரட், முசாபர்நகர், சகாரன்பூர், ரூர்கி மற்றும் ஹரித்வார் போன்ற ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும்.

    மறுமார்க்கத்தில் ஆனந்த் விகார் ரெயில்வே நிலையத்தில் இருத்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு டேராடூனுக்கு இரவு 10.35 மணியளவில் வந்தடையும். இந்த ரெயிலில் மொத்தம் எட்டு பெட்டிகள் உள்ளன.

    டெல்லியில் இருந்து டேராடூனுக்கு செல்ல ஏ.சி. சேர் கார் டிக்கெட் விலை ரூ.1065 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எக்சிக்யூடிவ் சேர் கார் டிக்கெட் விலை ரூ.1890 ஆகும். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
    • இந்த ரெயில் ஒடிசாவின் பூரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா வரை செல்லும்.

    புவனேஷ்வர்:

    ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா வரை செல்லும்

    மேலும், 8,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஹவுரா மற்றும் பூரி இடையே மத, கலாச்சார மற்றும் ஆன்மீக இணைப்பை மேலும் வலுப்படுத்தும். தற்போது நாட்டில் 15 வந்தே பாரத் ரெயில்கள் செயல்பட்டு வருகின்றன. அவை இணைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.

    • விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    • சென்னையிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார்.

    ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணி அளவில் வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.

    இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    இந்நிலையில், ஹெலிகாப்டரில் நேப்பியர் பாலம் அருகில் உள்ள அடையாறு ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

    அங்கு சென்னையிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலினுள் சென்று பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் பார்வையிட்டனர்.

    அப்போது மத்திய மந்திரிகள் அஷ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • பிரதமர் மும்பையில் நடைபெற்ற விழாவில் 2 வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இயக்கப்பட உள்ளது.

    மும்பை:

    நாடு முழுவதும் 8 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் ஓடுகின்றன. இதில் முதல் ரெயில் சேவை தலைநகர் டெல்லி- வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் புதிதாக 2 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற விழாவில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ரெயில்கள் மராட்டிய மாநிலத்துக்குள்ளே இயக்கப்படுகிறது. அதாவது மாநில தலைநகர் மும்பையில் இருந்து புனித ஸ்தலமாக கருதப்படும் ஷீரடிக்கும் (339 கி.மீ), மும்பையில் இருந்து சோலாப்பூருக்கும் (452 கி.மீ.) இயக்கப்பட உள்ளது.

    ×