search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "velanganni"

    • இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    சென்னை:

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தென்னக ரெயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தார்.

    வேளாங்கண்ணிக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பண்டிகை கால சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை மதியம் புறப்பட்டு அன்று நள்ளிரவு வேளாங்கண்ணி சென்றடைகிறது. அதே ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு இரவு நாகர்கோவில் வந்தடைகிறது.

    ஆகையால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர அட்டவணையை மாற்றி சனிக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வேளாங்கண்ணி சென்றடையும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை நாகர்கோவில் வந்தடையும் வகையிலும் மாற்ற வேண்டும்.

    அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா காலத்திற்கு முன்பிருந்தது போல் மதுரை-புனலூர் ரெயில் ஆரவ்வாய் மொழி பள்ளியாடி குழித்துறை மேற்கு போன்ற நிலையங்களில் நிறுத்த வேண்டும். நாகர்கோவில்-கோட்டயம் ரெயில் நாகர்கோவில் டவுன், பள்ளியாடி குழித்துறை மேற்கு ஆகிய இடங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேர ஏரநாடு விரைவு ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதிதாக அறிமுகமாக உள்ள சென்னை-நெல்லை 'வந்தே பாரத்' ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நாசரேத்-பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவிழாவின் 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் மாலை 6 மணி ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    நாசரேத்:

    நாசரேத்-பிரகாசபுரம் பங்கிற்குட்பட்ட மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாளன்று ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை நடைபெற்றது. தைலாபுரம் பங்குத்தந்தை இருதயராஜா, சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் மாலை 6 மணி ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    திருவிழா 9-ம் நாளன்று ஜெபமாலை, திருவிழா ஆரா தனை தூத்துக்குடி அருள்வளன் ஆயர் இல்லத்தந்தை ரூபர்ட் தலைமையில் நடைபெறுகிறது. மறையுரையை அருட்திரு ஜேம்ஸ் விக்டர் ஆற்றுகிறார். சிறப்பு நிகழ்வாக சமபந்தி விருந்து நடைபெறுகிறது.

    8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு 10-ம் நாள் திருவிழா திருப்பலி மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட் தலைமையில் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி ஆயர் இல்ல அருட்தந்தை இசிதோர் மறையுரை ஆற்றுகிறார். மாலை 6 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பிரகாசபுரம் பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் நாசரேத்-மாதாவனம் இறைமக்கள் செய்துள்ளனர்.

    ×