search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Man dies"

    • கோழிக்கோடு அருகே வந்தே பாரத் ரெயில் சென்ற போது தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது ரெயில் மோதியது.
    • வந்தே பாரத் ரெயில் ஓடத்தொடங்கிய பின்பு கேரளாவில் நடந்த முதல் விபத்து இதுவாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பின்பு இந்த ரெயில் ஓடதொடங்கியதும் 2 முறை இந்த ரெயில் மீது சிலர் கல்வீசி தாக்கினர்.

    இதில் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை கோழிக்கோடு அருகே வந்தே பாரத் ரெயில் சென்ற போது தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார், பலியான நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள். வந்தே பாரத் ரெயில் ஓடத்தொடங்கிய பின்பு கேரளாவில் நடந்த முதல் விபத்து இதுவாகும்.

    • ராமநாதன் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார்
    • அப்போது அங்கு கூடுகட்டியிருந்த விஷகுளவிகள் பறந்து வந்து ராமநாதனின் தலை, முகத்தில் கொட்டியது

    புதுச்சேரி:

    சேதராப்பட்டில் விஷ குளவி கொட்டியதில் முதியவர் பலியானார். புதுவை சேதராப்பட்டு புதுத்தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது67). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் ராமநாதன் அருகில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு கூடுகட்டியிருந்த விஷகுளவிகள் பறந்து வந்து ராமநாதனின் தலை, முகத்தில் கொட்டியது. இதனால் வலிதாங்க முடியாமல் அலறியடித்துக் கொண்டு ராமநாதன் வீட்டுக்கு விரைந்து வந்தார்.

    அங்கு தனது உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் ராமநாதன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமநாதன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது சகோதரர் பஞ்சநாதன் கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் எதிர்பாராதவிதமாக உள்ளே சிக்கிக்கொண்டதில் தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார். #HouseFire #Dog #ManDies
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மேய்ன் மாகாணம் ஓர்லண்ட் நகரை சேர்ந்தவர் சாம் கிராபோர்ட் (வயது 40). இவர் அங்குள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். சாம் கிராபோர்ட், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வீட்டில் வளர்த்து வந்தார். அந்த நாய் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்தது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டதால், சாம் கிராபோர்ட் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வீட்டை வீட்டு வெளியே ஓடி வந்தார். அவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.

    இதை எண்ணி நிம்மதி பெருமூச்சுவிட்ட சாம் கிராபோர்ட், தனது பாசத்துக்குரிய நாய் தன்னுடன் இல்லை என்பதை உணர்ந்து பதறிப்போனார்.

    உடனே அவர் நாயை தேடி பற்றி எரியும் வீட்டுக்குள் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார். தீயின் கோரப்பிடியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்த பிறகு, கரிக்கட்டையான நிலையில் சாம் கிராபோர்ட் உடல் மீட்கப்பட்டது. அதே சமயம் அந்த நாயின் உடல் கிடைக்கவில்லை. நாயின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
    ராம்லீலா நாடகத்தில் ராவணனாக நடித்த வாலிபர் ஒருவரும், பஞ்சாப் ரெயில் விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கும்படி தாய் கேட்டுக்கொண்டுள்ளார். #AmritsarTrainAccident #Dussehra #Ravana
    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜோதா பதக் என்ற இடத்தில் நேற்று இரவு தசரா கொண்டாட்டத்தின்போது ராவணனின் ராட்சத உருவ பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. அதைக் காண்பதற்காக, சுமார் 600 பேர் திரண்டிருந்தனர். சிலர் இடப்பற்றாக்குறையால் அருகில் உள்ள தண்டவாளத்திலும், தண்டவாளத்தின் அருகிலும் நின்றுகொண்டிருந்தனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த ஜலந்தர் எக்ஸ்பிரஸ் ரெயில் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில் ராவணனாக நடித்த தல்பீர் சிங் என்ற வாலிபரும் ரெயில் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 மாத கைக்குழந்தை உள்ளது. தல்பீல் சிங் இறந்ததையடுத்து அவரது மனைவி மற்றும் தாய் இருவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.



    மகன் தல்பீர் சிங் இறந்துவிட்டதால், நிர்கதியாக நிற்கும் மருமகளுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். #AmritsarTrainAccident #Dussehra #Ravana




    ×