search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vaithilingam mp"

    தஞ்சையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம் எம்பி, அதிமுக முன்பு எதிர்கட்சிகள் தூசிக்கு சமம் என்று கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி 3-வது கேட் முன்பு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவின் பேச்சாற்றலால் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர், அண்ணாவின் கொள்கைகளை திரைப்பட வசனம், பாடல்கள் மூலம் பட்டி, தொட்டி எங்கும் பரப்பினார். முதன் முதலில் தி.மு.க. ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். படித்தவர்கள் மத்தியில் அண்ணாவின் பேச்சாற்றல் மூலம் தி.மு.க. கொள்கை சென்றடைந்தது என்றால் அந்த கொள்கையை படிக்காதவர்கள் மத்தியில் கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர். தான்.

    தி.மு.க. வளர, ஆட்சிக்கு வர துணை நின்றார். அ.தி.மு.க.வை தொடங்கிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளுக்கு நல்ல திடங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

    அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து இருக்கிறது. அடுத்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின், ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். எங்களிடம் சேதாரம் தான் ஏற்பட்டு இருக்கிறது. சிதறி கிடப்பவர்கள் காந்த துகளை போல் ஒட்டி கொள்வார்கள். எங்களுக்கு தி.மு.க.வே எதிரியாக இல்லாதபோது, ரஜினி, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தாலும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் எங்களுக்கு தூசிதான். கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தம் இல்லாமல், நாடாளுமன்ற தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் இணைத்து பேசுகிறார். இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மடியில் கனம் இல்லை. எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

    எங்களை விட்டு பிரிந்து தவறான பாதைக்கு சென்றவர்களை வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறோம். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் தலைமை பொறுப்புக்கு வரலாம். குடும்ப வாரிசுக்கு இடம் கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    எல்லாவற்றிலும் ஊழல் செய்துவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என்று அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்பி பேசினார். #mkstalin #vaithilingammp

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. சார்பில் தஞ்சையில் நடைபெற்றது. இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திரைப்பட நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் பரசுராமன் எம்.பி., பால் வளத்தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன், ஒன்றியச் செயலாளர்கள் துரைவீரணன், தனபால், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தம்பித்துரை, ஒன்றிய துணைத் தலைவர் இளவரசி கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி., பேசும் போது கூறியதாவது:-

    மத்தியில் நடந்த காங்கிரஸ் கட்சியில் திட்டமிட்டு நாடகமாடி 1½ லட்சம் ஈழ தமிழர்களை கொன்று குவித்தனர். ராஜபக்சே தற்போது சொல்கிறார் அந்த போரில் எங்களுக்கு இந்திய அரசு உதவியது என்று, இந்திய அரசு என்றால் காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டணி வைத்திருந்த தி.மு.க.வும் தான். இவர்கள் தமிழ் இனத்துக்கே துரோகம் இழைத்து வே‌ஷம் போட்டு வருகின்றனர்.

    எல்லாவற்றிலும் ஊழல் செய்துவிட்டு ஊழலை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை. நான் சட்டமன்றத்தில் பலமுறை ஸ்டாலினுடன் நேருக்குநேர் ஊழல் பற்றிய விவாதத்தை பேசி இருக்கிறேன்.


    இந்தநிலையில் மொழி பற்றி பேசுவதற்கும், தமிழ் இனத்தை பற்றி பேசுவதற்கும், குடும்ப அரசியல் பற்றி பேசுவதற்கும், தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை. தி.மு.க. இப்போது கருணாநிதியின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. குடும்ப உறுப்பினர்களே பொறுப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் தி.மு.க. தினமும் ஒரு அ.தி.மு.க. அமைச்சர்கள் மீது ஊழல் பற்றி பேசி வருகிறது. இதை எல்லாம் தமிழக மக்கள் மறந்து விடமாட்டார்கள். மறைந்த ஜெயலலிதா நீதிமன்றம் சென்று நிரபராதி என்று நிரூபிப்பதற்குள் அவரை சூழ்ச்சி செய்து விட்டார்கள்.

    அவரை சூழ்ச்சி செய்தவர்கள் இப்போது சந்தியில் நிற்கிறார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களை அவரது ஆத்மா சும்மா விடாது. இப்போதும் அவர்கள் அதனை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    இந்த இயக்கத்தையும், ஜெயலலிதாவின் ஆட்சியையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. தினகரனோ இல்லை ரஜினி, கமல், ஸ்டாலின் என்று யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த ஆட்சி ஜெயலலிதா கூறியது போன்று இன்னும் 100 ஆண்டுகாலம் எழுச்சியோடு செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mkstalin #vaithilingammp #congress

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #parliamentelection
    பெரம்பலூர்:

    பாராளுமன்ற தேர்தல் பூத்  கமிட்டி அமைப்பது குறித்த பெரம்பலூரில் நடந்த மாவட்ட  அ.தி.மு.க. செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்னர் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம். பி.யுமான வைத்திலிங்கம் நிருபர்களிடம்    கூறியதாவது:- 

    திருப்பதி ஏழுமலையான் குமாரசாமிக்கு நல்ல புத்தியை கொடுக்கவேண்டும், நிலத்தோட அமைப்பில் காவிரி உபரிநீரை தேக்கி வைக்க முடியாது. அதனால் நிபுணர்களை கேட்டபோது அவற்றை தேக்கி வைக்க முடியாது. எனவே ஏரி, குளம், குட்டைகளில் மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

    தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண நலம் பெறுவார். அவரை விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று சந்திப்பார். தி.மு.க. கட்சியை எதிர் கட்சியாகவே நாங்கள் நினைக்க வில்லை. அதனால் தி.மு.க. பிளவுபட்டாலும்,  பிளவுபாடாவிட்டாலும் நாங்கள் கவலை கொள்வதில்லை. 

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அ.தி.மு.க. இருக்கும் என்றார். 

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆர்.டி. ராமச்சந்திரன், எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்.எல்.ஏ. தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர். #parliamentelection
    ×