search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dust"

    • மதுரையில் தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
    • சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாலங்கள் அமைப்பது குறித்தும், மெட்ரோ திட்டம் செயல்படுத்துவது குறித்தும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மண்ணும், தூசியும் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக அதிகளவில் மண் சேர்ந்து காற்று அடிக்கும் போது மண்ணும் தூசியும் பறந்து வாகன ஓட்டிகளை கவனம் சிதற செய்கிறது.

    மதுரை சாலைகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் மண் சேர்கிறது. இந்த நிலையில் இவ்வாறு சேரும் மண்ணை அதிகாலை நேரத்திலேயே அகற்றி சாலையை தூய்மையாக பராமரிப்பதற்காக புதிய நவீன மண் அகற்றும் எந்திரங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த வாகனங்களை வாங்குவது தாமதமாகி வருகிறது.

    தற்போது மாநகராட்சி வசம் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வ தற்காக 5 எந்திரங்கள் உள்ளன. ஆனால் 2 எந்திரங்கள் பழுதடைந்துள்ளன. 3 எந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த 3 எந்திரங்களை பயன்படுத்தி 5 மண்டல பகுதிகளிலும் உள்ள முக்கிய சாலைகளில் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் சாலைகள் மற்றும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மண் அகற்றும் பணிகளை விரைவாக செய்து முடிக்க இயலாமல் சில பகுதிகளில் மண் அகற்ற முடியாமல் போகிறது.

    இதனால் அந்தப் பகுதிகளில் மேலும் மண் சேர்ந்து சாலைகள் தூசியாக காணப்படுகின்றன. அந்த சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில், கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் கவனம் சிதறி தடுமாறுகின்றனர்.

    மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள ஆரப்பாளையம் - திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு, தேனி ரோடு, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி ரோடு, புதூர் ரோடு, கே.கே.நகர், காமராசர் சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    சில இடங்களில் குடிநீர் பைப்லைன் உள்ளிட்ட திட்டங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்பட்டு சரியாக சாலை அமைக்காமல் விடப்படுகிறது. அந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதுடன் மண், தூசி சேர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்து பவையாக உள்ளன.

    இந்த நிலையில் மதுரை சாலைகளில் மண் அகற்றும் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு நவீன எந்திரங்களை விரைவாக வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பள்ளம் தோண்டி மூடும் பகுதிகளில் சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும் என்றும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக அடையாளப் படுத்தும் வகையில் சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சி மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க...
    • சோதனை ஓட்ட முயற்சி

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை கியூ ஆர் கோடு மூலம் இணைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனை மாநகராட்சியின் 61-வது வார்டில் சோதனை ஓட்டம் நடத்தி கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காக திட்டமிட்டுள்ளனர்இந்த அமைப்பின் கீழ், துப்புரவுத் தொழிலாளர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட் டிருக்கும் க்யூ ஆர் கோர்டை மொபைல் செயலியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்து, அங்கிருந்து சேகரிக்கப்ப–டும் குப்பைகள் பிரிக்கப் பட்டதா? இல்லையா என் பதை பதிவிடுவார்கள். இதன்மூலம் பொதுமக்கள் தங்களது கடமைகளை சரியாக செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க முடியும். இதுதொடர்பாக மாநக–ராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் கூறுகை–யில், திருச்சி மாநகராட்சி–யில் உள்ள 50 பொது கழிப்பிடங்களில் ஏற்க–னவே கியூ ஆர் கோடு பொருத் தப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,284 தரவுகள் பொது–மக்களிடமிருந்து வந்துள்ளது. இதில் சொற்ப புகார்கள் மட்டுமே உள்ளன. அதில் தண்ணீர் சரிவர வரவில்லை, கதவு உடைந்துள்ளது என்பன உள்ளிட்ட சில புகார்களை தெரிவித்திருந்தனர்.அதைத்தொடர்ந்து உடனே அந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்துள் ளோம். மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு தனித்தனி கியூ ஆர் கோடு வழங்கும் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த சோதனை ஓட்டத்தை திருச்சி மாநகராட்சியில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு இருக்கின்றோம்.இந்த கியூ ஆர் கோடு மூலம் பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே செலுத்த முடியும். அது மட்டுமல்லாமல் பாதாள சாக்கடை, கழிவு நீர் வாய்க் கால், குடிநீர் சப்ளை போன்றவற்றின் செயல்பாடுகளில் குறைகள் இருந்தால் அதனை மாநகராட்சிக்கு தெரிவித்து உடனடியாக நிவாரணம் தேடிக்கொள்ள முடியும். திடக்கழிவு மேலாண்மையையும் உறுதிப்படுத்த ஏதுவாக அமையும் என்றார்.கியூ ஆர் கோடு பொருத் தப்பட்டுள்ள வீடுகளில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து கொடுத்தார்களா? பொது–மக்கள் தரம் பிரித்து கொடுத்தார்களா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் குப்பைகளை எவ்வாறு அகற்றுகிறார்கள் என்பதை அறிந்து நடவ–டிக்கை மேற்கொள்ள உதவும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

    தஞ்சையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம் எம்பி, அதிமுக முன்பு எதிர்கட்சிகள் தூசிக்கு சமம் என்று கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி 3-வது கேட் முன்பு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவின் பேச்சாற்றலால் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவர், அண்ணாவின் கொள்கைகளை திரைப்பட வசனம், பாடல்கள் மூலம் பட்டி, தொட்டி எங்கும் பரப்பினார். முதன் முதலில் தி.மு.க. ஆட்சிக்கு வர காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். படித்தவர்கள் மத்தியில் அண்ணாவின் பேச்சாற்றல் மூலம் தி.மு.க. கொள்கை சென்றடைந்தது என்றால் அந்த கொள்கையை படிக்காதவர்கள் மத்தியில் கொண்டு சென்றவர் எம்.ஜி.ஆர். தான்.

    தி.மு.க. வளர, ஆட்சிக்கு வர துணை நின்றார். அ.தி.மு.க.வை தொடங்கிய அவர், ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளுக்கு நல்ல திடங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

    அ.தி.மு.க. இரண்டாக பிரிந்து இருக்கிறது. அடுத்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என மு.க.ஸ்டாலின், ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். எங்களிடம் சேதாரம் தான் ஏற்பட்டு இருக்கிறது. சிதறி கிடப்பவர்கள் காந்த துகளை போல் ஒட்டி கொள்வார்கள். எங்களுக்கு தி.மு.க.வே எதிரியாக இல்லாதபோது, ரஜினி, கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தாலும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் எங்களுக்கு தூசிதான். கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தம் இல்லாமல், நாடாளுமன்ற தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் இணைத்து பேசுகிறார். இதில் சிறிதளவும் உண்மை இல்லை. மடியில் கனம் இல்லை. எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம்.

    எங்களை விட்டு பிரிந்து தவறான பாதைக்கு சென்றவர்களை வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கிறோம். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் தலைமை பொறுப்புக்கு வரலாம். குடும்ப வாரிசுக்கு இடம் கிடையாது. அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×