search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US President"

    • தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது என மிரட்டி வருகிறது.
    • சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும்.

    பீஜிங் :

    அமெரிக்கா, சீனா இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக மோதி வருகின்றன. குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகள் இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.

    தைவான் தன்னை சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.

    அதுமட்டும் இன்றி அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற சீனா தனது படைபலத்தை பயன்படுத்த தயங்காது எனவும் சீனா மிரட்டி வருகிறது.

    இதனால் சீனா-தைவான் இடையே பதற்றம் நீடித்து வரும் சூழலில் தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. இதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

    இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரமடைந்த சீனா, நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால் அதற்குரிய விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என சீன எச்சரித்தது.

    இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் தொலைபேசியில் பேசினர். நேற்று முன்தினம் நடந்த இந்த தொலைபேசி உரையாடல் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. அப்போது இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    அதோடு வருகிற நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டின்போது இருவரும் நேரில் சந்தித்து பேசுவது குறித்து அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

    இந்த பேச்சுவார்த்தையில் தைவான் விவகாரம் முக்கியத்துவம் பெற்றதாகவும், தைவான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என ஜோ பைடனை ஜின்பிங் பகிரங்கமாக எச்சரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தைவான் விவகாரம் குறித்து ஜோ பைடனிடம் ஜின்பிங் கூறியதாவது:-

    சீனாவின் ஒரே நாடு ஒரே கொள்கையை அமெரிக்கா மதிக்க வேண்டும். தைவான் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு வெளிநாட்டு குறுக்கீட்டையும் சீனா கடுமையாக எதிர்க்கிறது.

    தைவான் விஷயத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். இதை அமெரிக்க தரப்பு புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு ஜின்பிங் கூறினார்.

    • பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை.
    • தைவான் தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் இல்லை என பைடன் உறுதி

    வாஷிங்டன்:

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது.

    இரு நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு துறைகளில் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் நன்மை பயக்கும் என்று அமெரிக்க அதிபர் இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார்.

    தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான ஒருதலைப்பட்ச முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றும் பைடன் தெரிவித்தார்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • ஒமைக்ரான் துணை வகை தொற்றால் அமெரிக்க அதிபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம் சீராக உள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ஜோ பைடன் ஒமைக்ரான் வைரஸ் துணை வகையை சேர்ந்த BA5 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் கெவின் ஓ கானர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வகை கொரோனா வைரசால் தற்போது அமெரிக்காவில் 70 முதல் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் அமெரிக்க அதிபர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக மருத்துவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜோ பைடனுக்கு, இருமல், தொண்டை புண் மற்றும் உடல் வலி இருந்தாலும் அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம், நுரையீரல் செயல்பாடு, உடல் வெப்ப நிலை சீராக உள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பைடன் போட்டிருந்த நிலையில், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கொரோனா தடுப்பூசிகளை பைடன் முழுமையாக போட்டு கொண்டுள்ளார்.
    • தாம் சிறப்பாகச் செயல்படுகிறேன் என்று பைடன் டுவிட்டர் பதிவு.

    வாஷிங்டன்:

    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 91,76, 7,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,74,3,320 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பரிசோதனையின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார்.

    பைடன், கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார் என்றும், தற்போது தன்னை தனிமைக்கப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை அவர் கவனிப்பார் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தனது புகைப்படத்தை தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்த பைடன்  நண்பர்களே, நான் சிறப்பாகச் செயல்படுகிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

    அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது செய்தால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின், புஜைரா துறைமுகம் அருகே சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. எத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்தோ, யார் தாக்குதல் நடத்தியது என்பது பற்றியோ எந்தவித தகவல்களும் இல்லை. எனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

    இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஈரான் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப், “ஈரானுடன் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஏதாவது செய்தால் அது மிக மோசமான தவறு ஆகிவிடும். ஈரானின் செயல்பாடுகள் குறித்து சில விஷயங்களை கேள்விப்படுகிறேன். அவை அமெரிக்காவை பாதிக்குமானால் ஈரான் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறினார்.

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். #Pulwamaattack #Trump
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதி தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, “புல்வாமாவில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதி நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. அது குறித்த அறிக்கைகள் எனக்கு கிடைத்துள்ளது.

    தாக்குதல் நடத்தியவர்களை பாகிஸ்தான் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார்.

    அமெரிக்க அரசின் துணை செய்தி தொடர்பாளர் ராபர்ட் பல்லாடினோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    இத்தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டு பேசினோம். சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.


    அவரை தொடர்ந்து டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்பால்டன், ராணுவ மந்திரி மைக்பாம்பியோ, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஆகியோரும் பேட்டி அளித்தனர்.

    அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தனர். ஜெய்ஷ் இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக்க ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினர். #Pulwamaattack #Trump
    சர்வதேச ராணுவமான நேட்டோ படையில் இருந்து விலகும் அதிபர் டிரம்ப் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர். #UShouse #USexitNATO #NATO
    வாஷிங்டன்:

    இந்தியா உள்ளிட்ட 28 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச ராணுவமான ‘நேட்டோ’ படையினர் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த  ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டில் அறிவித்திருந்தார்.


    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் டிரம்ப் முடிவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

    ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலக கூடாது என 357 உறுப்பினர்களும், விலகலாம் 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.  #UShouse #USexitNATO #NATO

    அமெரிக்காவில் அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும் என ஹாலிவுட் பாடகி லேடி காகா வலியுறுத்தி உள்ளார். #LadyGaga #DonaldTrump
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஹாலிவுட் திரையுலகின் பிரபல பாடகி லேடி காகா, அரசுத்துறைகள் முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் படி வலியுறுத்தி உள்ளார்.

    இது பற்றி அவர் கூறுகையில், “அரசுத்துறைகள் வழக்கம் போல் சீராக இயங்குவதற்கான சூழ்நிலையை ஜனாதிபதி டிரம்ப் கொண்டு வரவேண்டும். ஏனெனில் வாரந்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பித்தான் அரசு ஊழியர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பிழைத்து வருகிறார்கள்” என தெரிவித்தார். #LadyGaga #DonaldTrump
    பாகிஸ்தானுடன் நல்லுறவை கடைபிடிக்க முடியவில்லை என்றும், எதிரிகளுக்கு அந்தநாடு அடைக்கலம் தருவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். #DonaldTrump #Pakistan
    வாஷிங்டன்:

    உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் நிதி உதவி அளித்து வந்தது.

    ஆனால் அந்த நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு, தனது சொந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளை பாரபட்சமின்றி ஒடுக்கத்தவறி விட்டது என்பது அமெரிக்காவின் கருத்தாக உள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானை வெளிப்படையாக கண்டித்த ஜனாதிபதி டிரம்ப், பாகிஸ்தானுக்கு அளித்து வந்த கோடி கணக்கிலான நிதி உதவியை நிறுத்தினார்.



    கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கான புதிய கொள்கையை வெளியிட்ட டிரம்ப், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாகவும், அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 1.3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9 ஆயிரத்து 100 கோடி) நிதி நிறுத்தப்படுவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல், மந்திரி சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாகிஸ்தானுடன் நாம் நல்லுறவை கடைப்பிடிக்க விரும்புகிறோம். ஆனால் அந்நாடு எதிரிகளுக்கு அடைக்கலம் தருகிறது. எதிரிகளை பாதுகாக்கிறது. இதனால் அந்த நாட்டுடன் நல்லுறவை கடைப்பிடிக்க முடியவில்லை.

    பாகிஸ்தானின் புதிய அரசுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறேன். காலம் தாழ்த்தாமல் அதனை உடனே செய்ய வேண்டும்.

    அதே சமயம் பாகிஸ்தானுக்கு நிதி உதவியாக வழங்கிய வந்த 1.3 பில்லியன் டாலரை நான் நிறுத்திவிட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து பேசிய டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னிடம் இருந்து தனக்கு ஒரு சிறப்பான கடிதம் கிடைத்ததாகவும், கிம் ஜாங் அன்னை விரைவில் சந்திப்பேன் என்றும் தெரிவித்தார்.  #DonaldTrump #Pakistan 
    ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவதில் அதிபர் டிரம்ப்பின் நிலைப்பாடு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. #Trumpwithdraw #UStroops #Afghanistan #Whitehouse
    வாஷிங்டன்:
        
    சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

    நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவை சேர்ந்த ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
     
    தற்போதைய நிலவரப்படி அங்கு அமெரிக்காவை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் ராணுவ துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் திரும்பி அழைக்கப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த தகவல் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலிபான்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது.

    அமெரிக்காவின் இந்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஒருவர், ‘தன்னுடைய முக்கிய எதிரி களத்தில் இருந்து பின்வாங்கி விட்டால் யார் சமாதானத்துக்கு வருவார்கள்? தாக்குதல்களை தலிபான்கள் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்’ என தெரிவித்தார்.

    ஆனால், தலிபான்கள் இதை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு என்று குறிப்பிட்டனர். இப்போதாவது அமெரிக்கா இங்குள்ள உண்மை நிலவரத்தை உணர்ந்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் சில நல்ல தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் படைகளின் முழு கட்டுப்பாட்டில்தான் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளது. அமெரிக்கப் படைகள் விலகுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஹாரூன் சக்கன்சுரி சுட்டிக்காட்டினார்.

    அதேவேளையில், டிரம்ப்பின் இந்த முடிவு  மிகப்பெரிய ஆபத்தாக அமையலாம் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் லின்ட்சே கிராஹம் எச்சரித்திருந்தார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க வீரர்களை திரும்பப்பெறுவது தொடர்பாக அதிபர் டிரம்ப் எந்த முடிவும் எடுக்கவில்லை. அங்குள்ள படைகளை திரும்பபெற வேண்டும் என அமெரிக்க ராணுவத்துக்கு அவர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கெர்ரெட் மார்குயிஸ் விளக்கம் அளித்துள்ளார். #Trumpwithdraw #UStroops #Afghanistan #Whitehouse
    அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் சிறுமியிடம் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. #DonaldTrump #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது கோல்மன் லாயிட் என்ற சிறுமியிடம் டிரம்ப் பேசினார்.

    அப்போது அந்த சிறுமியிடம் அவர் நலம் விசாரித்தார். கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து சற்றும் எதிர்பாராத வகையில், “சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) நீ நம்புகிறாயா?” என டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

    அந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத அவள், “ஆமாம் சார்” என்று கூறி சமாளித்து விட்டாள். அவளிடம் அந்தப் பதிலை எதிர்பார்த்திராத டிரம்ப், “சரி, சந்தோஷமாக இருங்கள்” என்று கூறினார்.


    கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாவை நீ நம்புகிறாயா என அதிபர் டிரம்ப், சிறுமியிடம் எழுப்பிய கேள்வி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

    தெற்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுமி, டிரம்பிடம் “சாண்டா கிளாசை நம்புகிறேன்” என கூறி விட்டாலும், அவர் கேட்ட கேள்விக்கு உண்மையிலேயே தனக்கு அர்த்தம் தெரியவில்லை என்று ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறாள்.

    அதே நேரத்தில் நாட்டின் அதிபதியான டிரம்ப், தங்கள் மகளிடம் பேசியதில் கோல்மன் லாயிட்டின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #DonaldTrump #MelaniaTrump
    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு திடீரென ஈராக் நாட்டிற்குச் சென்று அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #Trump #AmericanSoldiers
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள்  முடங்கியிருப்பதால் டிரம்பின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு டிரம்ப் சென்றார். அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளமான அங்கு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியதுடன், அவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை டிரம்ப் தெரிவித்தார். அத்துடன் வீரர்களுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.



    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர் ஈராக்கிற்கு டிரம்ப் திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    முன்னதாக தன்னுடன் பயணம் செய்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார். சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற விரும்புவதாகவும், ஐஎஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது, தேவைப்பட்டால் ஈராக்கில் உள்ள தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Trump #AmericanSoldiers
    ×