search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuberculosis"

    • கள்ளக்குறிச்சியில் காசநோய் கண்டறியும் வாகனம் கலெக்டர் ஸ்ரீதர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் 2025-ல் காசநோய் இல்லா தமிழகம் என்ற இலக்கை அடையும் வகையில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ரே பொருத்திய நவீன மருத்துவ வாகனத்தினை சென்னை யில்தமிழகமுதல்-அமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வழங்கப் பட்ட காசநோய் கண்டறியும் நடமாடும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த காசநோய் கண்டறியும் வாகனம், மருத்துவ குழுவினருடன் கிராமங்கள் முழுவதும் சென்று காசநோய் கண்டறிதல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட் டவர்கள், வயதான வர்கள், புகைப்பிடிப்பவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ள வர்கள், சிறுநீரகம் தொடர்பான நோய் உடைய வர்கள், புற்று நோயால் பாதிக்க ப்பட்ட வர்களுக்கு எக்ஸ்ரே பரி சோதனை மேற் கொள்ளப்படும். இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட த்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

    இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தர், துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் பொது சுகாதாரம் ராஜா, நெஞ்சக நோய் நிபுணர் ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நேரு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் பழமலை, உதவி மருத்துவ அலு வலர் பொய்யாமொழி, தேசிய சுகாதார குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதம மந்திரி மத்திய மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மீனவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகவும், சில்லரை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டும் ரூ.69,243 மதிப்பீட்டிலான இருசக்கர வாகனத்தினையும், ரூ.4,478 மதிப்பீட்டிலான 70 லிட்டர் கொள்ளளவு உள்ளகுளிர்காப்பு பெட்டியினையும், பொதுப்பிரிவினருக்கு 40 சதவீத மானியத்திலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்கு டியினர் பிரி வினருக்கு 60 சதவீத மானிய த்திலும் வழங்கப் படுகிறது.

    அதன்படி, இன்று சங்கராபுரம் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர் களில் பொதுப்பிரிவு வகுப்பைச் சேர்ந்த 12 பயனாளிகளுக்கு தலா ரூ.73,721 மதிப்பிலான குளி ர்காப்பு பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தினை 40 சதவீத மானியத்துடன் ரூ.44,233 மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது, உதவி இயக்கு நர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) நித்ய பிரியதர்ஷினி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் சந்திரமணி மற்றும் அரசு அலு வலர்கள் உடன் இருந்தனர்.

    • 23 மாவட்டங்களுக்கு ரூ.10.85 கோடி மதிப்பில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.
    • வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் காசநோய் தொற்று கண்டறியும் நுண்கதிர் நடமாடும் வாகனம் தொடக்க விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் கடந்த 1-ம் தேதி சென்னை நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லாத தமிழ்நாடு 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறுநடவடிக்கைகளின் ஒருபகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.85 கோடி மதிப்பில் எக்ஸ்ரே கருவி பொருத்திய 23 நடமாடும் வாகனங்களை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நடமாடும் நுண்கதிர் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் மின்வசதி இல்லாத இடங்களில்கூட ஜெனரேட்டர் உதலியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் உட்பகுதி குளிர்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எடுக்கப்படும் எக்ஸ்ரேக்களை உடனுக்குடன் சரிபார்க்கும் வகையில் கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்புமுறைகளை தெரிவிப்பதற்கு வண்ணத் தொலைக்காட்சி திரையும், முகாம்களின் போது பொதுமக்கள் வசதிக்காக நிழற்குடையும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு மணிநேரத்தில் 10 எக்ஸ்ரே எடுக்கும் திறன் கொண்ட இவ்வாகனங்களின் மூலம் நடப்பாண்டில் சுமார் 5 லட்சம் நபர்களுக்கு மறைந்திருக்கும் காசநோயை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு காசநோய் அறிகுறி உள்ள 21.354 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2860 பேருக்கு காசநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். அனைந்து காசநோயாளிகளுக்கும் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்திற்காக மாதந்தோறும் ரூ. 500 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடமாடும் நுண்கதிர் வாகனத்தை பயன்படுத்தி தஞ்சை மாவட்டத்தில் மறைந்திருக்கும் காசநோய் தொற்று உள்ளவர்களை கண்டறிய அதிதீவிரகாசநோய் பரிசோதனை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, காசநோய் துணை இயக்குனர் மாதவி, உலக சுகாதார அமைப்பு ஆலோசகர் பிரபு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மருத்துவ அலுவலர் பசுபதீஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காசநோயை முற்றிலுமாக 2025 க்குள் ஒழிக்கும் இலக்கோடு பயணித்து க்கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் பலதரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
    • மேலும் காசநோயாளிகளுக்கு 11 வகையான ஊட்டசத்துப் பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நல கூட்டமைப்பு சார்பாக, காசநோய் தொற்றா ளர்களுக்கு சுண்டல், பாசிப்பயிறு, மொச்சை உள்ளிட்ட 11 வகையான ஊட்டசத்துப் பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

    மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராமசந்திரன் தலைமை வகித்தார். வரவேற்புரை யாற்றிய நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் மைய சாராம்சங்களை எடுத்துரை த்தார். ஆத்தூர் அரசு டாக்டர் அரவிந்த் நாரா யணன், தலைமை செவிலி யர் லெட்சுமி, நெல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கருப்பையா மற்றும் சி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நர்ஸ் நித்யா தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு கருத்துரையாற்றினார். துணை இயக்குனர் ராமச்சந்திரன் பேசுகையில், காசநோயை முற்றிலுமாக 2025 க்குள் ஒழிக்கும் இலக்கோடு பயணித்து க்கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் பலதர ப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தற்போது தமிழக அரசு மாநிலம் முழுவதும் 23 எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை வழங்கியுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தி ற்கும் ஒரு வாகனம் கிடைக்க ப்பெற்றுள்ளது.

    இதன்வாயிலாக, காசநோய் தொற்றாளர்களை அந்தந்தப் பகுதிக்கே சென்று பரிசோதனை செய்திட முடியும். இதுபோன்று, அதிகப்படியான பரி சோதனை வசதி, சிகிச்சை வசதி முழுமையாக கிடை க்கப்பெற்றாலும், காச நோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இச்சேவையை இங்குள்ள கூட்டமைப்பு கடந்த 7 மாதமாக வெகு சிறப்பாக செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரிய தாகும்.

    இச்சேவையை மாநிலம் முழுவதும் செய்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தன்னார்வலர்களையும் ஊக்குவித்து பாராட்டும் விதமாக தமிழக அரசு 100 தன்னார்வ அமைப்புகளை தேர்வு செய்து, பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி–யுள்ளது. இப்பாராட்டு சான்றிதழை வளம் குன்றா சுற்று சூழல் மற்றும் கல்விக்கான அறக்கட்டளை பெற்றி ருப்பது இக்கூட்டமை–ப்பின் சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். மேலும், ஆத்தூர் வட்டாரத்தில் மாதந்தோறும் தொடர்ந்து நடைபெறும் ஊட்டச்சத்து நல உதவி நிகழ்வு காசநோய் இல்லா தமிழகம் 2025 எனும் இலக்கினை அடைய தூண்டுகோலாய் அமையுமெனக் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, பயனாளிகள் துணை இயக்குனரோடு இணைந்து மரக்கன்றுகளையும், மூலிகை செடிகளையும் ஆத்தூர் அரசு மருத்துவ–மனையில் நட்டனர்.

    சிறப்பு பங்கேற்பா ளர்களாக மதுரைவீரன், காசநோய் பிரிவு ஜான் ஜாய்ஸ் ராஜன், மரிய மெரினா, ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டனர். காசநோய் பிரிவு முது–நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பு ஏற்பாடு–களை கண்ணன் செய்திருந்தார்.

    • நடமாடும் எக்ஸ்ரே வாகன மூலம் காச நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவ பரிசோதனை அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
    • காசநோய் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் ஊராட்சித் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான காசநோய் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    காரிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கவிதா தலைமை தாங்கினார். காசநோய் பிரிவு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜா கலந்து கொண்டு காச நோயின் அறிகுறிகள், அவை பரவும் விதம், தடுக்கும் முறைகள் சிகிச்சைகள் குறித்து பேசினார்.

    மேலும் அவர் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் புதிதாக முதல் அமைச்சரால் வழங்கப்பட உள்ள நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவியுடன் கூடிய வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கு சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன் பரிசோதனை முடிவினை துரிதமாக அறிந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்றார்.

    பின்னர் பஞ்சாயத்து தலைவர்களுக்கு தங்கள் பகுதியில் காசநோய் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் வரைய அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுசீந்திரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன், குமரேசன் மற்றும் அலுவலர்கள் சதாசிவம், கிருஷ்ண முருகேஷ், சென்னகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பை யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் வழங்கினார்
    • ஊட்டச்சத்தான உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினை வழங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் சத்ய நாராயணன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் பொய்யா மொழி கலந்து கொண்டு காச நோயால் பாதிக்க ப்பட்டவர்கள் தொடர்ந்து 6 மாதத்திற்கு முழுமையாக மாத்திரை களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்தான உணவுகளை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

    மேலும் காசநோய் பரவும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து காச நோயால் பாதிக்கப்பட்ட 14 பயனாளிகளுக்கு பச்சைபயிறு, வேர்கடலை; நாட்டுச்சக்கரை, கொண்டக்கடலை, அரிசி, முட்டை உள்ளிட்ட 11 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. அப்போது களப்பணியாளர் சுமதி, சுகாதார பார்வையாளர் லட்சுமி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் வீரபாண்டியை அடுத்துள்ள துத்திக்காடுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
    • தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் தங்கி இருத்ததாக தெரிகிறது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். சிகிச்சை முடிந்து அவர் செங்கிப்பட்டி பஸ் நிலையம் வந்துள்ளார். இதனையடுத்து இரவு தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் தங்கி இருத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் நேற்று அதிகாலையில் அங்குள்ள கடையின் வாசல் அருகே சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பையில் பார்த்த போது ஆதார் கார்டு இருந்துள்ளது.

    அதில் அவர் பெயர் சேகர் (63), திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையம் வீரபாண்டியை அடுத்துள்ள துத்திக்காடுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சடலமாக கிடந்த சேகரின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னரே முதியவர் சேகர் கொலை செய்யப்பட்டாரா? விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நலம் பாதிப்பில் இறந்தாரா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    காசநோயாளிகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில், காசநோய் தடுப்புத் திட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்கத்தினர், தனியார் மருத்துவ நிர்வாகத்தினர், மருந்தாளுனர் சங்கம், ஆய்வக நுட்புனர்கள் சங்கத்தினர் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்திலும் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க, காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஆய்வகத்தினர், மருந்தாளுனர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

    பரிசோதனை மூலம் நோயாளிக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே சுகாதாரத்துறை இணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு நோயாளிகளை அனுப்பி வைக்கும் தனியார் மருத்துவமனை பரிசோதனை மையம் மற்றும் மருந்தாளுனர் ஆகியோருக்கு அரசு சார்பில் ரூ.500 ஊக்கத் தொகை வழங்கப்படும். மேலும், காசநோயால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மாதந்தோறும் ரூ.500 உதவி தொகை வழங்குகிறது. அதுமட்டுமல்லாது, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. காசநோயாளிகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.
    ×