search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசநோயை ஒழிக்க இலக்கு"

    • காசநோயை முற்றிலுமாக 2025 க்குள் ஒழிக்கும் இலக்கோடு பயணித்து க்கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் பலதரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
    • மேலும் காசநோயாளிகளுக்கு 11 வகையான ஊட்டசத்துப் பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் காசநோய் ஒழிப்பு மற்றும் தொற்றாளர் நல கூட்டமைப்பு சார்பாக, காசநோய் தொற்றா ளர்களுக்கு சுண்டல், பாசிப்பயிறு, மொச்சை உள்ளிட்ட 11 வகையான ஊட்டசத்துப் பொருட்கள் உள்ளடக்கிய தொகுப்பு பெட்டகம் வழங்கப்பட்டது.

    மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குனர் ராமசந்திரன் தலைமை வகித்தார். வரவேற்புரை யாற்றிய நம்பிக்கை மைய ஆற்றுநர் கண்ணன் மைய சாராம்சங்களை எடுத்துரை த்தார். ஆத்தூர் அரசு டாக்டர் அரவிந்த் நாரா யணன், தலைமை செவிலி யர் லெட்சுமி, நெல்லூர் அரசுப்பள்ளி ஆசிரியர் கருப்பையா மற்றும் சி அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் அழகர்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நர்ஸ் நித்யா தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு கருத்துரையாற்றினார். துணை இயக்குனர் ராமச்சந்திரன் பேசுகையில், காசநோயை முற்றிலுமாக 2025 க்குள் ஒழிக்கும் இலக்கோடு பயணித்து க்கொண்டிருக்கும் மத்திய மாநில அரசுகள் பலதர ப்பட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. தற்போது தமிழக அரசு மாநிலம் முழுவதும் 23 எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை வழங்கியுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தி ற்கும் ஒரு வாகனம் கிடைக்க ப்பெற்றுள்ளது.

    இதன்வாயிலாக, காசநோய் தொற்றாளர்களை அந்தந்தப் பகுதிக்கே சென்று பரிசோதனை செய்திட முடியும். இதுபோன்று, அதிகப்படியான பரி சோதனை வசதி, சிகிச்சை வசதி முழுமையாக கிடை க்கப்பெற்றாலும், காச நோயாளிகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து கிடைக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. இச்சேவையை இங்குள்ள கூட்டமைப்பு கடந்த 7 மாதமாக வெகு சிறப்பாக செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரிய தாகும்.

    இச்சேவையை மாநிலம் முழுவதும் செய்துவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், தன்னார்வலர்களையும் ஊக்குவித்து பாராட்டும் விதமாக தமிழக அரசு 100 தன்னார்வ அமைப்புகளை தேர்வு செய்து, பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி–யுள்ளது. இப்பாராட்டு சான்றிதழை வளம் குன்றா சுற்று சூழல் மற்றும் கல்விக்கான அறக்கட்டளை பெற்றி ருப்பது இக்கூட்டமை–ப்பின் சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். மேலும், ஆத்தூர் வட்டாரத்தில் மாதந்தோறும் தொடர்ந்து நடைபெறும் ஊட்டச்சத்து நல உதவி நிகழ்வு காசநோய் இல்லா தமிழகம் 2025 எனும் இலக்கினை அடைய தூண்டுகோலாய் அமையுமெனக் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, பயனாளிகள் துணை இயக்குனரோடு இணைந்து மரக்கன்றுகளையும், மூலிகை செடிகளையும் ஆத்தூர் அரசு மருத்துவ–மனையில் நட்டனர்.

    சிறப்பு பங்கேற்பா ளர்களாக மதுரைவீரன், காசநோய் பிரிவு ஜான் ஜாய்ஸ் ராஜன், மரிய மெரினா, ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டனர். காசநோய் பிரிவு முது–நிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பு ஏற்பாடு–களை கண்ணன் செய்திருந்தார்.

    ×