search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசநோயாளிகள்"

    • கொரோனா தொற்றுக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் காசநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
    • காச நோய் அறிகுறிகள் இருந்தவர்களும் பரிசோதனைக்கு அச்சப்பட்டு சிகிச்சையை தள்ளிப் போட்டதால் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது

    திருச்சி:

    கொரோனா வைரசின் தாக்கத்தால் திருச்சி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காசநோய் இறப்பு விகிதம் அதிகரித்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019-ல் 7 சதவீதமாக இருந்த காசநோய் இறப்பு விகிதம் 2021-ல் எட்டாகவும், 2022-ல் 9 ஆகவும் உயர்ந்துள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் 2019-ல் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,474 ஆக இருந்தது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் 255 பேர் இறந்தனர். 2020-ல் பாதிப்பு 2,158 ஆக இருந்தது. இதில் 193 இறந்தனர். 2021-ல் 2046 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் 224 பேர் மடிந்தனர்.

    இவ்வாறு கடந்த மூன்று ஆண்டுகளில் 8,098 பேர் காசநோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 328 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இறப்பு விகிதம் அதிகரித்ததற்கு கொரோனா வைரஸ் தாக்கமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோவிட் மற்றும் காச நோய் அறிகுறிகள் இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும்.

    இதனால் கோவிட் பயத்தினால் காச நோய் அறிகுறிகள் இருந்தவர்களும் பரிசோதனைக்கு அச்சப்பட்டு சிகிச்சையை தள்ளிப் போட்டதால் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து திருச்சி மாவட்ட காச நோய் அலுவலர் டாக்டர் எஸ் சாவித்திரி கூறும் போது, காசநோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உடனே பரிசோதனை செய்து அதற்கான மருந்துகளை உட்கொண்டால் நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.

    இறப்பு அதிகரித்ததற்கு கோவில் சூழ்நிலையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில் 2022-ம் ஆண்டில் இறப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    முதல் இரண்டு காலாண்டுகளில் இந்த ஆண்டு 103 காச நோயாளிகள் மட்டுமே இறந்துள்ளனர். காச நோய்க்கு தேவையான நல்ல மருந்து நம்மிடம் இருக்கிறது. தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தங்கள் கண்டறியும் ஒவ்வொரு காச நோயாளிகள் குறித்தும் உடனடியாக மாவட்ட காசநோய் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு காச நோய் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு முதல் மாதத்தில் ரூ.1000 மும், அடுத்தடுத்த 5 மாதங்களுக்கு ரூ.500-ம் வழங்கி வருகிறது எனக் கூறினார்.

    • விழுப்புரத்தில் 15 காசநோயாளிகளை தத்து எடுத்து ஊட்டச்சத்துகள் கலெக்டர் வழங்கினார்.
    • நோய் தொற்றிலிருந்து விடுபடும் வரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை வழங்கிட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் மாவட்ட காசநோய் ஒழிப்பு மன்றக்கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், காசநோயாளிகளை தத்தெடுத்து, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து வழங்குதல், காசநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காசநோய் பற்றிய தகவல்களையும், காசநோய் கண்டறியவும் அரசோடு சேர்ந்து அனைவரும் பங்குகொண்டால் மட்டுமே 2025-க்குள் காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும்.

    மேலும் காசநோய் உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மாதந்தோறும் தேவையான மருந்து மாத்திரை களை வழங்கி கண்காணித்து நோய் தொற்றிலிருந்து விடுபடும் வரை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து சிகிச்சை வழங்கிட வேண்டும். காசநோய் தொடர்பான விழிப்பு ணர்வை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் 2015-ஆம் ஆண்டினை காட்டிலும் 2022-ஆம் ஆண்டு காசநோய் 20 சதவீதம் குறைந்துள்ளதாக கள ஆய்வில் கண்டறியப்பட்டு காசநோய் விகிதத்தை குறைத்ததற்காக தமிழக முதல்-அமைச்சர் அவர்களால் பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்ப ட்டுள்ளதுநமது மாவட்டத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

    மேலும் இதுபோன்ற தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்ற காலத்தில் காசநோய் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மேலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் காசநோயாளிகளை தத்தெடுக்க முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் மோகன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்துக முதல்-அமைச்சரால் தலைமைச் செயலகத்தில் காசநோய் விகித்ததை குறைத்ததற்காகவும், காசநோய் குழு சிறப்பாக செயல்பட்டதற்காகவும் துணை இயக்குநனருக்கு (காசநோய்) பாராட்டுச்சான்றிதழ் மற்றும் பதக்கத்தை (வெண்கலம்) வழங்கியதையொட்டி அதனை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும் காசநோயாளிகளை தத்தெடுத்து ஊட்டச்சத்து வழங்கிய விழுப்புரம் கிரீன்ஸ்ரூபவ் விழுப்புரம் ரோட்டரி கிளப் (சென்ட்ரல்), விழுப்புரம் மகாவீர் சூப்பர் மார்க்கெட் ஆகியோரும் சென்னையில் தாங்கள் பெற்ற சான்றிதழினை காட்டி மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து 5 காசநோயாளிகளை ரோட்டரி கிளப் (சென்ட்ரல்) தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை வழங்கினார்கள். 15 காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்தினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) சண்முகக்கனி, துணை இயக்குநர் (காசநோய்) சுதாகர், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி, காசநோய் தடுப்புதிட்ட ஒருங்கிணைப்பாளர்கள். ரோட்டரி கிளப் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×