search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNEB"

    • நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.
    • விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்களை ஆய்வு செய்து மின் வினியோகம் வழங்க உத்தரவிடப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நெல்லை மின் பகிர்மான வட்டம் தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில் கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திர சேகரன் கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்க ளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க சங்கரன் கோவில் கோட்ட செயற்பொறி யாளர் பால சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியா ளர்களும் கலந்து கொண்டனர். மேலும் கூட்டத்தின் போது விவசாய மின் இணைப்பு சுயநிதி அடிப்படையில் விண் ணப்பித்த விண்ணப் பங்களை ஆய்வு செய்து உடனடியாக மின் வினியோகம் வழங்கவும், சங்கரன்கோவில் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரி களுக்கு மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

    • துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • டவுன் மேலரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்புற மின் விநியோக செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை பழையப்பேட்டை, டவுன் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் நாளை ( செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை அங்கிருந்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான

    டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரதவீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் ,எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்திர தெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத் துறை மற்றும் கருப்பன் துறை, டவுன் கீழரதவீதி, போஸ் மார்கெட், ஏ.பி.மாட தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாட வீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.
    • வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் பல்நோக்கு மருத்துவ மனைக்கு வட கிழக்கு பருவ மழையின் போது தங்கு தடையின்றி மின் வினி யோகம் வழங்கும் பொருட்டு சிறப்பு ஆய்வு கூட்டம் பாளை தியாகராஜ நகரில் உள்ள வட்ட மேற் பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மேற் பார்வை மின் பொறி யாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் முதன்மை மின் பாதையான பாளை உபமின் நிலை யத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் 11 கிலோ வோல்ட் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்கும் மார்கெட் மின் பாதை, சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் வ.உ.சி.மின்பாதை, தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் மகராஜநகர் மின்பாதை என அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.

    மின் சாதனங்களான வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்டார். இயற்கை இடர்பாடுகளின் போது அனைத்து பொறுப்பு மின் பொறியாளர்களிடம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தர விட்டார்.

    மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இயற்கை இடர்பாடுகளின் போது தவிர்க்க இயலாத நேரத்தில் மின்ஆக்கியை நல்ல இயக்க நிலையில் வைப்பதற்கும், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு வைப்பதற்கும் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வு பணியின் போது நெல்லை மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் ( பொது ) வெங்கடேஷ்மணி, உதவி செயற் பொறியாளர்கள் சார்லஸ் நல்லத் துரை, சங்கர், சிதம்பரவடிவு, உதவி மின் பொறியாளர் வெங்கடேஷ், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • விஜயாபதி மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாங்குநேரி, ராஜாக்கள் மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையங்களான நாங்குநேரி, விஜயாபதி மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே நாங்குநேரி துணை மின்நிலை யத்திற்குட் பட்ட நாங்குநேரி, ராஜாக்க ள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள். மேலும் விஜயாபதி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூர், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளைய நயினார்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

    • பழையபேட்டை துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பாரமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் காளி தாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பழையபேட்டை, பொருட்காட்சிதிடல் துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அன்று மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்குரதவீதி தெற்கு பகுதிகள், வடக்குரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழில் பேட்டை, பாட்டபத்து, அபிசேகப்பட்டி, பொருட்காட்சி திடல், டவுன் எஸ்.என். ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம்,

    சிவந்திரோடு, சுந்திரதெரு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழரதவீதி போஸ்ட் மார்கெட், ஏ.பி. மாடதெரு, சாமி சன்னதி தெரு, அம்மன்சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்திய மூர்த்தி தெரு, போத்தீஸ், நயினார்குளம் மார்கெட், வ.உசி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோ லியம், சிவன்கோவில்தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான் பாறை உள்ளிட்ட இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர் புற மின் விநியோக செயற்பொ றியாளர் காளிதாசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேலப்பாளையம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணி கர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர்,

    வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்க ருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டி த்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு,

    குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருமால் நகர், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி,டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமி திப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி, திருநகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வள்ளியூர் மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
    • திலக் நகர், பாபுஜி நகர், சிந்து பூந்துறை உள்ளிட்ட இடங்களில் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நெல்லை கோட்டம் வள்ளியூர் வினியோக செயற்பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது;-

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் மற்றும் நாங்குநேரி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. அதன்படி வள்ளியூர் துணைமின் நிலையத்திற்கு உட்டபட்ட சமாதானபுரம், பூங்கா நகர், இ.பி. காலனி, சண்முகாபுரம், வடலிவிளை, நல்ல சமாரியன் நகர், லூத்தர் நகர், கேசவனேரி, ராஜாபுதூர், திருக்குறுங்குடி, நம்பி தலைவன் பட்டயம், ஆவரந்தலை, ஏர்வாடி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

    நாங்குநேரி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெரு மளஞ்சி, ஆச்சியூர், வாகை குளம், கோவநேரி உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    நெல்லை நகர்புற வினியோக செயற்பொறி யாளர் முத்துக்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், தச்சநல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதும் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தொடர்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் கூறிப்பட்டுள்ளது

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்பொழுது தட்கல் முறை யில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சிறப்பு பெயர் மாற்றம் முகாம் பொதுமக்களிடையே அதிகப்படியான வரவேற்பினை பெற்றுள்ளது.
    • இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தில்கொண்டு, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்கிட, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்", கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடைபெற்று வந்தது.

    இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" தொடங்கி வைக்கப்பட்ட நாள் முதல் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 995 வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

    இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம் குறித்து பொதுமக்களிடையே கிடைக்கப்பெற்ற அதிகப்படியான வரவேற்பினை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காலஅவகாசம் 24-ந் தேதி (நேற்று முன்தினம்) முடிவடைவதாலும், இந்த "சிறப்பு பெயர் மாற்றம் முகாம்" மேலும் ஒரு மாதகாலம் அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 25-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் தேவைப்படும் பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்தி, சிறப்பு பெயர் மாற்றம் முகாம் மூலம் தங்களது வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கேட்டுக்கொள்கிறது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • உடன்குடி, சாத்தான்குளம் பகுதியில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சாத்தான்குளம், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    உடன்குடி:

    திருச்செந்தூர் மின்விநியோக பொறியாளர் விஜயசங்கர பாண்டி யன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி, சாத்தான்குளம் பகுதி யில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், நடுவக்குறிச்சி, பழனியப்பபுரம், உடன்குடி, சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்பு ராயபுரம், தருமபுரி, போலயார்புரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, செம்பூர், மணல்குண்டு, ஆதிசாதபுரம், வேலன்காலனி, மளவராய நத்தம், மெஞ்ஞானபுரம், அனைத்தலை ஆகிய பகுதியில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    அதேபோல் ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, நடுவக் குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக் கோட்டை, புத்தன்தருவை, மணிநகர் படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன் குடியிருப்பு, பிச்சி விளை, அழகப்பபுரம், பழனியப்ப புரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசீர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி, உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார் குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, மெய்யூர், பிறைகுடி யிருப்பு, கடாச்சபுரம், அன்பின்நகரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆறுமுகநேரி, திருச்செந்தூர், ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி, திருச்செந்தூர், குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக புன்னக்காயல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம் ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய் புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம். கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகர், திருச்செந்தூர், காயமொழி, சங்கிவிளை, வீரபாண்டி யன்பட்டினம், ராஜ்கண்ணா நகர், குறிஞ்சிநகர், அமலி நகர், தோப்பூர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, சோனகன்விளை, குரும்பூர், நல்லூர், சிறுதொண்ட நல்லூர், ஏரல், அம்மன்புரம், மூலக்கரை.

    பூச்சிகாடு, வள்ளிவிளை கானம்கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை, வடலி விளை, தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர், மணத்தி, கல்லாம்பாறை, ராஜபதி, சேதுக்கு வாய்த்தான். வரண்டியவேல், வீரமாணிக்கம், குட்டித் தோட்டம், கோட்டூர், குரங்கனி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான் குளம், பால்குளம், திருக்க ளுர் ஆகிய பகுதிகளில் நாளை(வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது.

    இந்த தகவலை திருச்செந்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.
    • நிறுவனங்களின் தரப்பில் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

    சென்னை:

    வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்துமாறு ஏற்கனவே அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

    அதன்படி, வீடுகளுக்கு 'ஸ்மார்ட்' மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கியது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் 3 தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட் மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது.

    இந்த நிலையில், ஸ்மார்ட் மின் மீட்டருக்கான டெண்டரை மின் வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்வதில் இருந்து வரும் முறைகேட்டை தடுக்கவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.10 ஆயிரத்து 790 கோடியில் இந்த திட்டத்தை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க காலநிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது பரீட்சார்த்த அடிப்படையில் சென்னை தியாகராயநகர் பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது.

    இதில் உள்ள பல்வேறு குறைபாடுகளை சரி செய்து தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த டெண்டர் கோரப்பட்டது.

    இந்த டெண்டர் அறிவிப்பில் எதிர்காலத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் இருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.

    மின்வாரியத்தின் பல நிபந்தனைகள் நிறைவேற்ற முடியாத வகையில் இருப்பதால் டெண்டர் கோர நிறுவனங்கள் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அழைத்து டெண்டர் கோருவதில் இருந்து வரும் சிக்கல்கள் என்னென்ன என்பதை மின்வாரியம் கேட்டறிந்தது.

    அப்போது இந்த நிறுவனங்களின் தரப்பில் 265 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த சந்தேகங்களை சரி செய்து அவற்றில் பலவற்றை ஏற்றுக்கொள்ள மின்வாரியம் முடிவு செய்தது.

    இதற்காக திருத்தப்பட்ட டெண்டரை வெளியிடுவதற்கு பதிலாக அத்தனை சந்தேகங்களுக்கான தீர்வுகளுடன் புதிய டெண்டரை வெளியிடும் வகையில் ஏற்கனவே விடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேபோன்று 3 தொகுப்புகளாக நடைபெற இருந்த பணியை ஒரே தொகுப்பாக சேர்த்து முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் புதிய டெண்டர் விரைவில் வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×