search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goverment hospital"

    • 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.
    • வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் பல்நோக்கு மருத்துவ மனைக்கு வட கிழக்கு பருவ மழையின் போது தங்கு தடையின்றி மின் வினி யோகம் வழங்கும் பொருட்டு சிறப்பு ஆய்வு கூட்டம் பாளை தியாகராஜ நகரில் உள்ள வட்ட மேற் பார்வை மின் பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. மேற் பார்வை மின் பொறி யாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து 2 மருத்துவமனைக்கும் மின் வினியோகம் வழங்கும் முதன்மை மின் பாதையான பாளை உபமின் நிலை யத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் 11 கிலோ வோல்ட் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் தடங்கள் ஏற்பட்டால் மாற்று வழியில் உடனடியாக மின்சாரம் வழங்கும் மார்கெட் மின் பாதை, சமாதானபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் வ.உ.சி.மின்பாதை, தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கும் மகராஜநகர் மின்பாதை என அனைத்து மின் வழித்தடங்களிலும் இன்று ஆய்வு நடைபெற்றது.

    மின் சாதனங்களான வலைய தரசுற்று, பிரிவு படுத்துதல் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்டார். இயற்கை இடர்பாடுகளின் போது அனைத்து பொறுப்பு மின் பொறியாளர்களிடம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள உத்தர விட்டார்.

    மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் இயற்கை இடர்பாடுகளின் போது தவிர்க்க இயலாத நேரத்தில் மின்ஆக்கியை நல்ல இயக்க நிலையில் வைப்பதற்கும், தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு வைப்பதற்கும் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வு பணியின் போது நெல்லை மின் பகிர்மான வட்ட செயற் பொறியாளர் ( பொது ) வெங்கடேஷ்மணி, உதவி செயற் பொறியாளர்கள் சார்லஸ் நல்லத் துரை, சங்கர், சிதம்பரவடிவு, உதவி மின் பொறியாளர் வெங்கடேஷ், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மின் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • ஒருசில வார்டுகளில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது தவிர உள் நோயாளியாகவும் ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கால தாமதம்

    இங்கு ஒருசில வார்டு களில் நோயாளிகள் எந்த விதமான மறைப்புகளும் இன்றி படுக்கைகள் அமைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏதேனும் ஒரு நோயாளி இறந்து விட்டால் அவர்கள் உடல் உடனடியாக வேறு அறைக்கு எடுத்து செல்லப்படுவது இல்லை.

    மாறாக அதே படுக்கையில் நீண்டநேரம் இறந்தவர்களின் உடல் வைக்கப்படுகிறது. அதனை உடனடியாக வேறு தனி அறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கோரிக்கை

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்கத்தின் தலைவர் முகமது அயூப், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு கொடுத்து இருந்தார்.

    அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கடந்த ஒரு வருடமாக இறந்தவர் உடலை உடனடியாக அப்புறப்படுத்தாமல் பணியாளர்கள் தாமதப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் மீண்டும் புகார் கூறி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை

    குறிப்பிட்ட வார்டில் ஒரு நபர் இறந்து விட்டால் உடனடியாக வேறு ஒரு தனி அறைக்கு மாற்ற வேண்டும். அவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து கால தாமதப்படுத்தாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மீண்டும் பொதுஜன நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

    ×