search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati Devasthanam"

    திருப்பதியில் நடைபெற உள்ள ஏழுமலையானின் வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவங்களுக்கு வருகை தரும்படி தேவஸ்தானம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. #TirupatiTemple
    திருமலை:

    வைதீக நாள் காட்டியின்படி இந்த ஆண்டில் அதிக மாதங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, திருப்பதியில் நடப்பாண்டில் இம்மாதம் வருடாந்திர பிரம்மோற்சவமும், அடுத்த மாதம் (அக்டோபர்) நவராத்திரி பிரம்மோற்சவமும் நடைபெற உள்ளன.

    பிரம்மோற்சவத்தின் சிறப்பை விளக்கும் வகையில் 12 ஆயிரம் சுவரொட்டிகள், ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் 8 ஆயிரம் கையேடுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

    திருமலைக்கு வரும் அனைத்து மாநில மக்களுக்கும் தெளிவாகப் புரியும் வகையில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த சுவரொட்டிகளை தேவஸ்தானம் அச்சடித்துள்ளது

    வாகன சேவை விவரங்கள், அவற்றின் நேரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளடங்கிய சுவரொட்டிகளை திருமலை, திருப்பதியில் உள்ள விசாரணை மையங்கள், நேர ஒதுக்கீடு டோக்கன்கள் அளிக்கப்படும் கவுன்ட்டர்கள், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான கல்யாண மண்டபங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ளது.

    திருமலை-திருப்பதி இடையே இயக்கப்படும் பஸ்கள், திருமலை மற்றும் திருப்பதியிலிருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், தெலுங்கானா ஆகியவற்றுக்கு இயக்கப்படும் ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழக பஸ்களிலும் சுவரொட்டிகளை ஒட்டி தேவஸ்தானம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    அதனால் இம்முறை பிரம்மோற்சவத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #TirupatiTemple

    திருப்பதியில் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது வைகுண்டம் வழியாக வரும் பக்தர்கள் சாமியை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான அங்குரார்ப்பணம் 11-ம் தேதி மாலை நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தானம் அறிவித்தது.

    தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தேவஸ்தான நிர்வாக முடிவை மறுசீலனை செய்து கும்பாபிஷேக நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களையாவது தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையே, கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றிய தகவல் கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பக்தர்கள் அனுப்பி வைக்கும்படி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

    இந்நிலையில், இலவச தரிசனத்தில் செல்வோர் சாமியை தரிசிக்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி கோயில் கும்பாபிஷேகத்தின் போது இலவச தரிசனத்தில் செல்வோர் சாமியை தரிசிக்கலாம்.

    ஆகஸ்ட் 11- ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கும்பாபிஷேக நாட்களில் வைகுண்டம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினங்களில் விஐபி தரிசனம், ரூ.300 தரிசனம், மலைப்பாதை தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. #TirupatiTemple
    திருப்பதியில் கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பாக பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை தெரிவிக்க தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேகத்திற்கான அங்குரார்ப்பணம் 11-ந்தேதி மாலை நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தானம் அறிவித்தது.

    தேவஸ்தானத்தின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில் தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவஸ்தான நிர்வாக முடிவை மறுசீலனை செய்து கும்பாபிஷேக நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களையாவது தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில்களில் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது பக்தர்கள் பெருமளவில் வந்து யாகசாலை பூஜையை கண்டு தரிசிப்பது வழக்கம். சாதாரண கோவில்களில் நடைபெறும் போதே லட்சக்கணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள்.

    எனவே ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேக நாட்களில் ஏராளமான எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை இருக்கும் என்று கருதினோம். கும்பாபிஷேக நாட்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே தரிசன வசதியை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்பதாலும், சாமி தரிசன வாய்ப்பு கிடைக்காமல் அதிக பக்தர்கள் மனவேதனைக்கு உட்படுவார்கள் என்பதாலும் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க இயலாது என்று கூறினோம்.

    ஆனால் சமூக வலைத்தளங்களில் தேவஸ்தான நிர்வாகத்தின் முடிவுக்கு பின்னால் இருக்கும் உண்மை மறைக்கப்பட்டு வேறுவிதமான வி‌ஷ பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்த வி‌ஷயத்தில் நாங்கள் நினைத்ததை சாதித்தே தீருவோம் என்று உறுதியாக இருக்க வேண்டிய அவசியம் தேவஸ்தான நிர்வாகத்துக்கு கிடையாது.

    எனவே கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றிய தகவல் கருத்துக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை இம்மாதம் 23-ந்தேதிக்குள் தேவஸ்தான நிர்வாகத்துக்கு பக்தர்கள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

    பக்தர்கள் வழங்கும் ஆலோசனைகள், கருத்துகள் குறித்து 24-ந்தேதி திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் அறங்காவலர் குழு ஆலோசனை கூட்டத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

    அதன் பின்னர் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதி பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். அபிஷேகம் நடைபெற இருக்கும் 6 நாட்களிலும் சேர்த்து அதிகபட்சம் 34 மணி நேரம் மட்டுமே பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்க முடியும்.

    எனவே நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை தேவஸ்தானத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TirupatiTemple
    வேலூரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்க பரிசீலனை செய்யப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் தெரிவித்தார்.
    வேலூர்:

    ‘திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை’ என்று அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் தெரிவித்தார்.

    வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் தின விழா நேற்று நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி.ஐ.டி.யின் (சென்னை) துணைத் தலைவருமான சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டாசுதாகர்யாதவ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர், திருமலை-திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் வேலூர், டெல்லி ஆகிய 2 இடங்களில் தான் பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளியின் வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இப்பள்ளியில் படித்தவர்கள் பலர் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். பள்ளிக்கு தேவையான வகுப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அளித்த காணிக்கை திருட்டு போகவில்லை. திருட்டு போனதாக அர்ச்சகர் கூறுவது பொய். அவர் பணியில் இருக்கும்போது கூறவில்லை. ஓய்வுபெற்ற பின் ஏன் புகார் கூறுகிறார்?. மேலும் அவர் சென்னை, டெல்லி போன்ற பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பேட்டி அளிக்கிறார். அருகில் இருக்கும் எங்களிடம் ஏன் அவர் புகார் கூறவில்லை? என்று தெரியவில்லை. தேவஸ்தானத்தில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. 1952-ம் ஆண்டு முதல் ஆவணங்கள் சரியான முறையில் உள்ளது. புகார் கூறினால் ஏழுமலையான் தண்டிப்பார்.

    தற்போது ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.79 கோடி செலவில் தங்குமிடம் அமைக்கப்பட உள்ளது. 2 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    முதியோர் செல்ல, பேட்டரி கார்கள் அதிகப்படுத்தப்படும். வேலூரில் தேவஸ்தானம் சார்பில் கல்லூரி தொடங்க பரிசீலனை செய்யப்படும். பக்தர்களுக்கு வழங்கும் லட்டு எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கான இலவச தரிசனங்களை தேவஸ்தானம் மீண்டும் தொடங்கியுள்ளது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாட்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது.

    எனினும், மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது. அதனால் இந்த இரு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

    இந்நிலையில், திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதால், மீண்டும் இம்மாதம் முதல் அந்த தரிசனத்தை தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

    அதன் படி வரும் 10 மற்றும் 24-ந் தேதிகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர் மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் வீதம் இரு நாட்களில் 8 ஆயிரம் பேர் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்கலாம்.

    அதேபோல் இம்மாதம் 11 மற்றும் 25-ந் தேதி ஆகிய இரு நாட்களில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.

    தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #TirupatiTemple
    திருப்பதி ஏழுமலையானுக்குப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய இந்திய, வெளிநாட்டு சில்லரை நாணயங்களை விரைவில் எண்ணி முடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்கள், தங்கம், வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அதில் ரூபாய் நோட்டுகள் திருமலையிலேயே பரகாமணி அறையில் எண்ணப்படுகின்றன.

    இந்திய மற்றும் வெளிநாட்டுச் சில்லரை நாணயங்கள் மூடைகளில் கட்டி, திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்குள்ள பரகாமணி அறையில், தேவஸ்தான ஊழியர்கள் சில்லரை நாணயங்களை எண்ணுகிறார்கள். சில்லரை நாணய மூடைகள் அடுக்கி வைத்திருக்கும் அறையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் திருமலையில் உடனுக்குடன் எண்ணப்படுகின்றன. ஆனால் இந்திய, வெளிநாட்டுச் சில்லரை நாணயங்கள் மட்டும் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு தான் காலதாமதம் ஆகிறது. அதனை விரைவாக எண்ண வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். அங்கு கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்கள், மின்விசிறிகள் ஆகியவற்றை பொருத்தி கூடுதலாக ஊழியர்களை நியமித்து நாணயங்களை விரைவாக எண்ணி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சுவேத பவனில் தேவஸ்தான ஊழியர்களுக்கான கேண்டீன் உள்ளது. அதற்கு பதிலாக புதிதாக கேண்டீன் கட்டப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் முடிந்ததும் பழைய கேண்டீன் கட்டிடத்தைச் சில்லரை நாணயங்களை எண்ணுவதற்குப் பயன்படுத்தி கொள்ளலாம். வெளிநாட்டு மற்றும் இந்திய சில்லரை நாணயங்களை விரைவில் எண்ணி முடித்து, மத்திய அரசின் உதவியோடு வெளிநாட்டு நாணயங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக நாங்கள் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி, நிதித்துறை அதிகாரி பாலாஜி, பரகாமணி அதிகாரி தாமோதரம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    திருப்பதி ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மாயமானது தொடர்பாக முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமை அர்ச்சகராக இருந்தவர் ரமண தீட்சிதர். இவர் திருப்பதி கோவிலில் ஆகம விதிகளுக்குட்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் நியமனம் நடக்கவில்லை, பூஜைகள் சரியாக செய்யவில்லை என்றும் ஏழுமலையானின் பல கோடி மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் காணவில்லை என்றும் பல்வேறு புகார்கள் கூறினார்.

    இதற்கிடையே திருப்பதி கோவிலில் அர்ச்சகருக்கு ஓய்வு வயதை 65 ஆக தேவஸ்தானம் நிர்ணயித்தது. அதன்படி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதரருக்கு கட்டாய ஓய்வு அளித்தது திருப்பதி தேவஸ்தானம் மீது புகார்கள் கூறியதால் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக ரமண தீட்சிதர் கூறினார்.

    இவ்விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. விஜயசாய் ரெட்டியும் புகார் ஒன்றை கூறினார்.

    அவர் கூறும் போது, திருமலையில் பிரசாதங்கள் தயாரிக்கும் இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த நகைகளை தேவஸ்தானத்தினர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்து விட்டதாக கூறினார்.

    இந்த நிலையில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், விஜயசாய் எம்.பி. ஆகியோருக்கு திருப்பதி தேவஸ்தானம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பக்தர்களை குழப்பும் விதமாக புண்படும் படியும் அறிக்கை வெளியிட்டதாகவும் கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையானின் அனைத்து நகைகளையும், பக்தர்களின் பார்வைக்கு வைக்க அறங்காவலர் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய பவனில் நடந்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா.சுதாகர்யாதவ் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேவஸ்தானம் மீதும் அதில் பணியாற்றிய அதிகாரிகள் மீதும் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர் மற்றும் சிலர் ஏழுமலையானின் நகைகள் மாயமாகி விட்டதாகவும், மைசூர் மகாராஜா காணிக்கையாக அளிக்க பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிங்க் வைரத்தை காணவில்லை என்பன உள்பட பல்வேறு அவதூறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

    அவர்கள் மீது தேவஸ்தானம் சார்பில் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் வழக்கு தொடர உள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.

    24 ஆண்டுகள் தேவஸ்தான தலைமை அர்ச்சகராகப் பணியாற்றிய ரமண தீட்சிதருக்கு தைரியம் இருந்தால் அவர் அறங்காவலர் குழுவின் முன்னால் வந்து தனது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும். ஏழுமலையானின் அனைத்து நகைகளையும், பக்தர்களின் பார்வைக்கு வைக்க அறங்காவலர் குழுவில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.



    ஆனால் இதற்கு ஆகம விதிகள் ஒப்புக் கொள்கிறதா என்பதை அறிய ஆகம வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட உள்ளது. பின்னர் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும்.

    ஆந்திர மாநிலத்தில் தலித் வாடா, கிரிஜன வாடா, மச்சக்கார காலனி ஆகிய பகுதிகளில் ரூ.8 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை செலவு செய்து வெங்கடாஜலபதி கோவில், ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் கோவில் பிரசித்திப் பெற்றதாகும். அங்கு, வேத பாட சாலை தொடங்கப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அதற்காக, திருமலையில் பழைய அன்னதானக்கூடத்தில் பொது காவல் மைய கட்டுப்பாட்டு அலுவலகம் அமைத்து, அங்கு ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் அகண்ட ஒளித்திரைகள் அமைக்கப்பட உள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் அதற்கான பணியை ஒப்படைக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள தேவஸ்தான தகவல் மையத்தில் பத்மாவதி தாயாருக்கு தினமும் புஷ்ப அலங்காரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பக்தர்கள் தினமும் புஷ்பங்களை காணிக்கையாக வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பதி ஏழுமலையானுக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், விஜயநகர பேரரசர்கள், மைசூர் மகாராஜாக்கள், ஆங்கிலேயர்கள், நவாப்புகள், ஜமீன்கள், மிராசுதாரர்கள் உட்பட தற்போதைய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் கோடிக்கணக்கிலான தங்க, வைர ஆபரணங்களை காணிக்கையாக வழங்கி உள்ளனர். இதன் மதிப்பு பல்லாயிரம் கோடி இருக்கும்.

    இந்த நகைகள் யாவும், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டால் அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்ய வேண்டியிருக்கும்.
    ×