search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager killed"

    • இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்றும் சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார்,

    கள்ளக்குறச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 27). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கீழ்பாடி அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கத்தில் சத்தியராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் சந்தை புதுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாவாடை ராயன் (வயது 27). இவரது நண்பர் வேல்முருகன் (30). இவர் வானூர் பகுதியை சேர்ந்தவர்.இவர்கள் 2 பேரும் நேற்று இரவு திண்டிவனத்தில் வேலையை முடித்துவிட்டு வானூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். வானூர் அருகே தென்கோடிபாக்கம் மெயின்ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 ேபரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடைராயன் இறந்தார். வேல்முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி கண்டன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆண்டணி ஜோசப்ராஜ் (வயது 35). இவர் இன்று காலை சிதம்பரம் அருகே கிள்ளை-சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக திருச்ெசந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆண்டணி ஜோசப்ராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் சுவேந்திரன் (வயது. 23). இவர் அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (17) என்பவருடன்

    நேற்று மாலை மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட மரக்காணத்திலிருந்து நாரவாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்தனர்.

    இவர்கள் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. இந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை சுவேந்திரன்

    திருப்பி உள்ளார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிமாறன் இறந்தார். சுவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மரக்காணம் போலீசார் விசாரிக்கிறார்கள்.

    • தனது நண்பர்கள் ஸ்ரீநாத், நிதீஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • எதிரே வந்த மாருதி கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. .

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள கொங்கரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்துரு (வயது 20) . இவர் தனது நண்பர்கள் ஸ்ரீநாத், நிதீஷ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார். கொங்கரப்பட்டு வல்லம் இடையே சென்ற போது எதிரே வந்த மாருதி கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்துரு அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்ற 2 பேரும் காயம் இன்றி தப்பினார்கள் .இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ராமநாதபுரத்தில் கார் மோதி வாலிபர் பலியானார்.
    • காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே மேலவலசை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47). இவர்களுக்கு திவாகர் (20) என்ற மகன் உள்ளார்.

    சம்பவத்தன்று திவாகருடன் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பினர். ரெகுநாதபுரம் விலக்கு ரோடு அருகிலுள்ள குவார்ட்டர்ஸ் அருகில் வாகனத்தை நிறுத்தி தமிழ்செல்வியும், திவாகரும் ஆறுமுகத்தின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த நான்கு சக்கர வாகனம் நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வி மற்றும் அவரது மகன் திவாகர் ஆகியோர் மீது மோதியது. இதில் திவாகருக்கு தலையில் அடிபட்டு படுகாயமடைந்தார். தமிழ்ச்செல்விக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் திவாகரை மீட்டு ராமநா தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது தாய் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் காரை ஓட்டி வந்த மண்டபத்தைச் சேர்ந்த அருள் ஜெபத்துறை மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கமுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பூதத்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது24). இவர் வலையபூக்குளத்தை சேர்ந்த நண்பர் அருணுடன்(25) மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றார்.

    நேற்று மாலை கமுதி நோக்கி வந்து கொண்டிருந்தார். பாம்புல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது முன்னே சென்ற ஆட்டோவை முந்த முயன்றனர். எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர்.

    இதில் முருகேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது உடல் கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    உடன் சென்ற அருண், ஆட்டோவில் சென்ற கண்ணார்பட்டியை சேர்ந்த சூர்யகலா(42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை.
    • மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ெதன்னமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை. அவரது மகன் கார்த்திகேயன் (வயது 23). இவர் நேற்று இரவு தென்னமாதேவியில் இருந்து விழுப்புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.தென்னமாதேவி டோல்கேட் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்திகேயன் இறந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்குபதிந்து லாரி டிரைவரை கைது செய்தனர்.

    • இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.
    • சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார்

    கடலூர்:

    வேப்பூர் அருகே அவ்வதகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் அம்பேத்கார் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சவுந்திரபாண்டியன் (27). இருவரும் அப்பகுதியில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையில் 3-ம் நாளான காணும் பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் வேப்பூருக்கு சென்று காணும் பொங்கல் விழாவினை குதூகலமாக கொண்டாடி விட்டு வீடு திரும்பினர்.

    அப்போது வேப்பூர் கூட்ரோடு சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்பேத்கார் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார். இத்தகவலறிந்து விரைந்து சென்ற வேப்பூர் போலீசார் பலத்த காயமடைந்த சவுந்திரபாண்டியனை சிகிச்சைக்காக விருத்தாசலம் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அம்பேத்காரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
    • தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

    சின்னசேலம், ஜன. 14-

    கள்ளக்குறிச்சி வி.ஓ.சி.நகரை சேர்ந்த சாகுல் ஹமீத் என்பவர் கள்ளக்குறிச்சியில் உள்ள லேத்து பட்டறையில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் நேற்று வேலையை முடித்துவிட்டு தன்னுடன் வேலை செய்யும் தொழிலாளர்களை அக்ராய பாளையத்திற்கு விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பின்னர் அக்ராய பாளையத்தில் அவர்களை இறக்கிவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக இரவு 10.30 அக்கரா பாளையத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் சாலையில் முத்தையா மில் அருகே சென்று கொண்டிருக்கும் பொழுது புதுப்பல்லக் கச்சேரி ஊரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் டிராக்டரில் கரும்பு ஏற்றிக்கொண்டு கச்சிராயபாளையம் நோக்கி வந்து வந்தவர் எதிர்பாராத விதமாக சாகுல் ஹமீத் சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த அடிப ட்டார் பின்னர் அடிபட்டு கீழே கிடந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • நின்றிருந்த வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    • இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாயில்பட்டி

    சிவகாசி அருகே உள்ள கீழதாயில்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் முனீஸ்வரன் (வயது 23). தாயில்பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் மோகன்ராஜ்.

    நண்பர்களான இவர்கள் இருவரும் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் ஒன்றாக வேலை செய்கிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் இருவரும் வேலை முடித்து மோட்டார் சைக்கிளில் தாயில்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    கொங்கலாபுரம் விலக்கு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நின்றிருந்த வேன் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த முனீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் படுகாயமடைந்த அவரது நண்பர் மோகன்ராஜ், சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்றார்.
    • இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி தோப்புகொல்லை வடக்கு தெருவை சேர்ந்தவர்சுப்பிரமணியன். இவர் மோட்டார் சைக்கிளில் மருங்கூரில் இருந்து கொள்ளுக்காரன்குட்டை நோக்கி சென்ற போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்மோதியதில் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டிஅர சுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×