சிதம்பரம் அருகே இன்று பரிதாபம்தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரெயில் மோதி பலி/

சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்
ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர்,
ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர்,
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் ஆண்டணி ஜோசப்ராஜ் (வயது 35). இவர் இன்று காலை சிதம்பரம் அருகே கிள்ளை-சிதம்பரம் பகுதிக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக திருச்ெசந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ஆண்டணி ஜோசப்ராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com