பகண்டை கூட்டு ரோடு அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்றும் சிகிச்சை பலனில்லாமல் உயிர் இழந்தார்,
பகண்டை கூட்டு ரோடு அருகே டிராக்டர் மீது  மோட்டார் சைக்கிள்  மோதி வாலிபர் பலி
Published on

கள்ளக்குறச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு அருகே எம்.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ்(வயது 27). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சாலை வழியாக சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது கீழ்பாடி அருகே வந்தபோது எதிர்பாரதவிதமாக சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் டிப்பரின் பின்பக்கத்தில் சத்தியராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியராஜ் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com