search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taliban"

    • உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
    • சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அங்குள்ள பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாணவிகள் கல்வி கற்கவும் தடைவிதிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    சமீபத்தில் தலைநகர் காபூல் உள்ளிட்ட மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் பெண் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் வெளியில் காரில் செல்லும் போது ஆண் துணை இல்லாமல் செல்லக்கூடாது என்றும் கட்டாயம் புர்கா உடை அணிந்து செல்லவேண்டும் என்றும் தலிபான் அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி நடவடிக்கை.
    • நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் எரித்தனர்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது.

    இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஹெராத் மாகாணத்தில் இசை ஒழுக்கக்கேடானதாகக் கருதி, பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகள் மற்றும் அது சார்ந்த உபகரணங்களை தலிபான் தீயிட்டு எரித்தன.

    இதுகுறித்து, நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் ஹெராத் துறையின் தலைவர் அஜிஸ் அல்-ரஹ்மான் அல்-முஹாஜிர் கூறுகையில், "இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்" என்று கூறினார்.

    இதைதொடர்ந்து, நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகள் மற்றும் உபகரணங்களை தலிபார் அதிகாரிகள் எதிர்த்தனர்.

    இதில் ஒரு கிட்டார், மற்ற இரண்டு கம்பி வாத்தியங்கள், ஒரு ஹார்மோனியம் மற்றும் ஒரு தபேலா, ஒரு வகை டிரம் அத்துடன் ஒலி பெருக்கிகள் ஆகியவை இருந்தது.

    • பெண்கள் சுதந்திரம் ஏற்கனவே பறிக்கப்பட்டுள்ளது
    • சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள், நடன நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு ஏற்கனவே தடை

    ஆப்கானிஸ்தான் நாட்டைவிட்டு அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் 2021-ல் வெளியேறியவுடன், தலிபான் அங்கு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து, கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக, பெண்களின் சுதந்திரம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. பெண் குழந்தைகள் பள்ளிகள், கல்லூரி செல்வதும், பெண்கள் அலுவலகங்களுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டு விட்டது.

    இது மட்டுமில்லாமல், கேளிக்கைகளில் ஈடுபடுவது மதத்திற்கு எதிரான குற்றம் என பிரகடனம் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மூலம் சினிமா, தொலைக்காட்சி, பாடல்கள், நடன நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் அறவே ஒடுக்கப்பட்டுள்ளது.

    உலக நாடுகளின் கண்டனங்களை மீறி இத்தகைய சர்வாதிகாரத்தை தலிபான் கையாளுகிறது. அங்கு "நல்லொழுக்கத்தை பரப்புதல் மற்றும் தீமைகளை தடுத்தல்" என்ற நோக்கத்திற்காக ஒரு அமைச்சரவை செயல்பட்டு வருகிறது.

    தற்பொழுது அந்த அமைச்சரவையின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையின்படி இனி ஆப்கானிஸ்தானில் திருமண வீடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதோ, இசை ஒலிபரப்பு செய்வதோ, பாடல்கள் பாடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது.

    இசை என்பது மத கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் மனிதர்கள் மட்டுமே பாடல்களை பாட வேண்டும், அதுவும் கூட இறைவனை புகழ்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் மிகக் கடுமையாக தலிபான் வலியுறுத்துகிறது.

    "கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், இசை, நடனம் போன்றவை இல்லையென்றால் திருமண வீட்டிற்கும், துக்க நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?" என தன் பெயரை குறிப்பிட விரும்பாத ஒரு மண்டபத்தின் மேலாளர் தெரிவித்தார்.

    கடந்த ஏப்ரல் மாதம் பெண்களே நடத்தும் வானொலி நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. மசூதிகள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து அந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த பயங்கரவாத அமைப்பினர் ஆப்கானிஸ் தான் எல்லையில் இருந்து செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்க தலைவர் கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடி மாவட்டத்தின் எல்லையான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    இதில் தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தின் தளபதி அப்துல் ஜபா ஷா கொல்லப்பட்டார். மேலும் இரண்டு தீவிரவாதிகள் காயம் அடைந்தனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட அப்துல் ஜபர்ஷா, பாதுகாப்பு படை மற்றும் போலீசார் மீதான தாக்குதலில் ஈடுபட்டவர். மேலும் சட்ட அமலாக்க முகவர் மதக்குழுக்களை மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    • ஆப்கானிஸ்தானில் 2021, ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது.
    • அன்று முதல் பெண்களின் சுதந்திரம் பல்வேறு வழிகளில் தலிபான்களால் பறிக்கப்பட்டுள்ளது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் 2021, ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் கல்வி பறிக்கப்பட்டுள்ளது. பெண்களின் சுதந்திரம் பல்வேறு வழிகளில் தலிபான்களால் பறிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, உலகம் முழுவதும் இஸ்லாமிய மத பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மதத்தினர் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

    அந்நாட்டின் பஹ்லன் மற்றும் தக்ஹர் மாகாணங்களில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையான இன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியே குழுவாக செல்லக்கூடாது என தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

    ஏற்கனவே பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொது இடங்கள், பூங்காக்களுக்கு செல்லக் கூடாது என்றும், கருத்தடை மாத்திரைகளை பெண்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் தலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
    • தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.

    காபூல்:

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா., மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஐ.நா.வின் இந்த அமைப்பில் பெண்களே முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது.

    இது குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐ.நா. அமைப்பில் ஆப்கான் பெண்கள் பணிபுரிய தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அறிவிக்காமல், வாய்மொழியாக அறிவித்துள்ளனர். தலிபான்களின் இந்த முடிவை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. பெண் ஊழியர்கள் இல்லாமல் மருத்துவத் துறை சார்ந்த இங்குள்ள உயிர் காக்கும் கருவிகளை இயக்க முடியாது" என கூறப்பட்டுள்ளது.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது.
    • கடந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த 5 பேரை தலிபான்கள் சிறை பிடித்தனர்.

    லண்டன்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு நாட்டை தங்களது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டவர்கள் 3 பேரை தலிபான்கள் கைது செய்து சிறை பிடித்துள்ளதாக இங்கிலாந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக அந்த அமைப்பை சேர்ந்த ஸ்காட் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் நன்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் நாங்கள் நம்புகிறோம்.

    சித்ரவதை போன்றவற்றில் அவர்கள் உட்படுத்தப்பட்டனர் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றார். இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரஜைகளுடன் தூதரக தொடர்பை பெற நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவளித்து வருகிறோம் என்றார்.

    மூன்று பேரில் 2 நபர்கள் கடந்த ஜனவரி முதல் தலிபான்களால் பிடிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 3-வது நபர் எவ்வளவு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த 5 பேரை தலிபான்கள் சிறை பிடித்தனர். அவர்களை 6 மாதங்களுக்கு பிறகு விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • கடந்தாண்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200 வழக்குகள் பதிவானதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு பிறகு 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டின் பத்திரிகையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும் 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 200 வழக்குகள் பதிவானதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
    • படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    குஜராத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

    கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
    • அரசுக்கு எதிராக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக தலிபான்கள் கொண்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தலிபான்கள் எந்த நேரமும் காபூல் நகர வீதிகளில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர். பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி பக்கத்து நாடான துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

    தற்போது தலிபான்களின் பார்வை சமூக ஊடக பிரபலங்கள் மீது திரும்பி உள்ளது. தலிபான்களுக்கு எதிராக உள்ளவர்கள் பேஸ்புக்கில் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். காபூலை சேர்ந்த இம்ரான் அமகத் சாய் என்பவரை சமூக வலை தளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    அவர் தனது பேஸ் புக்கில் ஆப்கான் மக்களை தலிபான்கள் துருக்கியை நோக்கி துரத்துவதாகவும் இதனால் காபூல் நகர வீதிகளில் பொதுமக்கள் பயத்தில் விமான நிலையத்தை நோக்கி ஓடுவதாகவும் கூறி வீடியோ வெளியிட்டதாக தெரிகிறது. .இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இதையடுத்து தலிபான் அரசு காபூலில் உள்ள வீட்டில் இருந்த இம்ரானை அதிரடியாக கைது செய்தனர்.இதேபோல மற்றொரு சமூக ஊடக பிரபலமான அப்துல் ரகுமான் என்பரும் கைது செய்யப்பட்டார்.அரசுக்கு எதிராக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக ஊடக பிரபலங்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கடந்த ஆட்சியின் போது பாதுகாப்பு படையில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர்.
    • பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு கடிதம்

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில் தனியார் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தலிபான் அரசு தடை விதித்தது. பல்கலைக்கழகங்களில் பாலினக் கலப்பைத் தடுக்க இந்த தடை அவசியம் என்று தலிபான் அரசாங்கத்தின் உயர்கல்வி அமைச்சர் நிடா முகமது நாதிம் வாதிட்டார். மேலும் சில பாடங்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

    இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன, அவை சரிசெய்யப்பட்டவுடன் பல்கலைக்கழகங்கள் பெண்களுக்காக மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

    மூத்த ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது, பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தும்படி வலியுறுத்தினர். எனவே, தலிபான்கள் எந்த நேரத்திலும் தங்கள் உத்தரவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

    ஆனால் தலிபான் அரசு பெண்களுக்கு எதிரான தடையை மேலும் வலுப்படுத்தியது. அதாவது, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத் தேர்வு எழுத முடியாது என அதிரடியாக கூறி உள்ளது. பெண்களை நுழைவுத் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாவுல்லா ஹஷ்மி இன்று கூறியிருக்கிறார். 

    இளங்கலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க முடியாது. ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் இந்த உத்தரவை மீறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சில மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக இருந்தது. பிற இடங்களில் பிப்ரவரி 27-ல் தொடங்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், அரசின் உத்தரவால் கலக்கமடைந்துள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.
    • ஆப்கானிஸ்தானில் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு தடைகளை கொண்டு வந்துள்ளனர்.

    இதற்கிடையே குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சமீபத்தில் அறிவித்தனர். கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    இந்தநிலையில் திருடிய குற்றத்துக்காக 4 பேரின் கைகளை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கந்தகாரில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திருட்டு உள்ளிட்ட குற்றசாட்டப்பட்ட 9 பேரை அழைத்து வந்தனர். அவர்களுக்கு 35 முதல் 39 முறை கசையடி அளிக்கப்பட்டது.

    பின்னர் திருட்டு குற்றத்துக்காக 4 பேரின் கைகளை வெட்டி துண்டித்தனர். கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு கடந்த மாதம் 7-ந்தேதி பரா மாகாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர்.

    இதேபோல் பல்வேறு குற்றத்துக்காக பலருக்கு கசையடி உள்ளிட்ட தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்ற தண்டனைகளுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியபோதும் அதை தலிபான்கள் அரசு கண்டு கொள்ளவில்லை.

    ×