search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து மாற்றம்"

    • காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி. சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைய அறிவுறுத்தல்
    • அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பலாம்

    கோவை,

    கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சந்திப்பு முதல் உப்பிலிபாளையம் சிக்னல் வரை மேம்பாலப் பணி மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்து இருந்தனர். இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    அதன்படி, அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் நஞ்சப்பா சாலை வழியாக பார்க் கேட் ரவுண்டானாவை அடைந்து மத்திய சிறை அருகே செல்லும் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அல்லது உப்பிலிபாளையம் சிக்னலில் வலதுபுறம் திரும்பி ரெட்கிராஸ், ஹூசூர் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

    அண்ணா சிலை சந்திப்பில் இருந்து மேம்பாலம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கே.ஜி. மருத்துவமனை ரெட்கிராஸ் வழியாக உப்பிலிபாளையம் சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அண்ணாசிலை சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி டாக்டர் பாலசுந்தரம் சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக செல்ல வேண்டும்.

    அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பியோ அல்லது லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாகச் செல்லலாம்.

    காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி செல்லும் பேருந்துகள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    காந்திபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் பார்க்கேட், எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைந்து செல்லலாம்.

    திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், எல்,ஐ.சி. சிக்னல், பார்க்கேட் வழியாக காந்திபுரம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை முடக்குசாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
    • முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .

    மதுரை

    மதுரை முடக்குச் சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முடக்குச்சாலை- எச்.எம்.எஸ். காலனி இடையே 1,190 மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது .

    இதில் தற்போது முடக்குச் சாலை சந்திப்பில் கான்கிரீட் பில்லர்களில் உத்திரம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக முடக்குச் சாலை சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மதுரை போக்கு வரத்து ேபாலீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    முடக்குச்சாலை, தேனி மெயின் ரோடு வழியாக வெளியூர் செல்லும் பஸ்கள், கனரக, இலகுரக வாக னங்கள், இருசக்கரம், ஆட்டோ, 4 சக்கர வாகனங்களுக்கு நாளை (25-ந்தேதி) முதல் போக்கு வரத்து மாற்றம் செய்யப்படு கிறது.

    அதன்படி மதுரை நகரில் இருந்து ேமற்கு நோக்கி செல்லும் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் அனைத்தும் முடக்குச்சாலை சந்திப்பில் உள்ள ஓட்டல் முன்பு பில்லர்-3, 4-க்கு இடையில் வலதுபுறமாக திரும்பி மேலக்கால் சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி துவரிமான் சாலை வழியாக செல்ல வேண்டும்.

    மதுரை நகரில் இருந்து வெளியூர் செல்லும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் மற்றும் சில குறிப்பிட்ட அரசு நகர் பஸ்கள் (பஸ் ரூட் நம்பர்.21) மட்டும் காளவாசல் சந்திப்பு, சம்மட்டிபுரம், எச்.எம்.எஸ் காலனி பிரதான வீதி

    எச்.எம்.எஸ் காலனி சந்திப்பு, விராட்டி பத்து, அச்சம்பத்து வழியாக செல்ல வேண்டும்.

    நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக நகருக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார், மினி வேன் போன்ற இலகுரக வாகனங்கள் வழக்கம்போல் அச்சம்பத்து, விராட்டிபத்து, டோக் நகர், முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர லாம்.

    நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் இருந்து அச்சம்பத்து வழி யாக பஸ்கள், கனரக வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி, பின்னர் துவரிமான், கோச்சடை, முடக்குச்சாலை வழியாக நகருக்குள் வர வேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளது.
    • பொது மக்கள் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கோவை,

    கோவை மாநகர போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை மாநகரில் நாளை(வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சுண்டப்பாளையம் ரோடு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளது.

    இதை யொட்டி நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய் யப்படுகிறது.

    உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, செல்வபுரம், சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

    காந்திபுரம் மற்றும்ட வுன்ஹா லில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று பைபாஸ் ரோடு - சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும்.

    உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ரெயில் நிலையம் வழியாக காந்திபுரம் செல்ல அனுமதிக்கப்படும்.

    தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.எஸ்.ஆர்.ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு- ஏ.ஆர்.சி. சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்ல அனுமதிக்கப்படும்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

    பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்களும் பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நி லைப்பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் அடையலாம்.

    பேரூர் சாலையிலிருந்து தடாகம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் சிவா லயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு, பனமரத்தூர், பூசா ரிபாளையம், சீரநாய்க்கன் பாளையம் வழியாக மருதமலை சாலையை அடைந்து லாலி ரோட்டில் இடது புறமாக திரும்பி தடாகம் சாலையில் பயணிக்கலாம்.

    விநாயகர் சிலை ஊர்வல பாதைகளான ராஜவீதி, ரங்கே கவுண்டர் வீதி, பெரிய கடைவீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்திபார்க், தெலுங்கு வீதி, சுக்கிரவார் பேட்டை, தியாகி குமரன் வீதி, இடையரவீதி, தெப்பக்குளம் மைதானம், பூமார்க் கெட்ரோடு, பால்மார்க்கெட் ரோடு, மெக்ரிக்கர் ரோடு, டி.பி.ரோடு. லைட்ஹவுஸ் மைதானம், சுப்பிரமணியம் ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு, தடாகம் ரோடு, பூசாரிபாளையம் ரோடு ஆகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எனவே ஊர்வலப்பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மூக்கனேரி யில்‌ கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள்‌ நாளை நண்பகல்‌ 12 மணிக்குள்‌ கொண்டு சென்று கரைத்திடல்‌ வேண்டும்‌.
    • விநாயகர்‌ சிலை கரைத்தல்‌ சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல்‌ படையினர்‌ உட்பட மொத்தம்‌ 1232 காவலர்கள்‌ ஈடுபட உள்ளனர்‌.

    சேலம்:

    சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலை 10 மணிக்குள் சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் சென்று, திட்டமிட்ட நீர்நிலைகளில் கரைத்திடல் வேண்டும்.

    இவற்றுள் மூக்கனேரி யில் கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள் நாளை நண்பகல் 12 மணிக்குள் கொண்டு சென்று கரைத்திடல் வேண்டும்.

    இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை காலை 11 மணிக்குள் சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து எடுத்து, ஊர்வலம் புறப்படும் இடமான எல்லை பிடாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும்.

    மேற்படி விநாயகர் சிலை கரைத்தல் சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1232 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.

    சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலப் பாதையான எல்லை பிடாரியம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்படுகின்றது.

    மாற்று வழிப்பாதை விவரம்

    ஊர்வலப்பாதை சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றுபாதை அண்ணா பூங்கா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு மற்றும் அஸ்தம்பட்டி. வழியாக போக்குவரத்து மாற்றபட்டுள்ளது. இதேபோல் அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரையான ஊர்வலப்பாதை மாற்றாக அஸ்தம்பட்டி, கலெக்டர் பங்களா, ஐயந்திருமாளிகை, மற்றும் கன்னங்குறிச்சி வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு மாநகர போலீஸ் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்தவுடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
    • ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.

    சென்னை:

    சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்களை போலீசார் செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    * காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி.போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

    * மதியம் 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பிரிட்ஜை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பால சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். ஈ.வெ.ரா.சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம்.

    * ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்தவுடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை, ஈ.வெ.ரா சாலை மற்றும் டாக்டர் அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தலாம்.

    * திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயிண்டிலிருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணாகுரு சாலை ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

    * திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவுட்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் நாராஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.யணா குரு சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

    * ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் அடையும் போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலனி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.

    இவ்வாறு போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சந்திப்பு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது.
    • டி.ஜி.எஸ்.தினகரன் சாலை மற்றும் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து எந்த வாகனமும் அடையாறு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீஸ் துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "ஐ.பி.ஏ. நீரத்தான் என்னும் மாரத்தான்" நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் 7.30 மணி வரை 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ, ஓட்டம் ஆல்காட் நினைவு பள்ளியில் தொடங்கி எம்.ஆர்.சி. நகர் வரை சென்று மீண்டும் ஆல்காட் நினைவு பள்ளி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    அடையார் உட்கோட்ட மாற்று வழிகள்:-

    * எல்.பி. சாலையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை நோக்கி 3-வது அவன்யூ மற்றும் 2-வது அவென்யூ அனைத்து உள்வரும் வாகனங்களும் எம்.எல். முத்துலட்சுமி பார்க்கில் திருப்பி விடப்பட்டு எல்.பி. சாலை சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை வழியாக கடற்கரை நோக்கி அனுப்பப்படும்.

    * சாஸ்திரி நகர் பஸ் நிலையத்தில் இருந்து டாக்டர் முத்துலட்சுமி பார்க் நோக்கி வரும் அனைத்து பஸ்களும் (எம்.டி.சி. பஸ்கள் உட்பட) 7-வது அவென்யூ சந்திப்பு எம்.ஜி. சாலை-எல்.பி. சாலை வழியாக அவர்களது இலக்கை அடையலாம்.

    மயிலாப்பூர் உட்கோட்ட மாற்று வழிகள்:-

    * மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக அடையாறு மற்றும் கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் தெற்கு கால்வாய் வங்கி சாலை மற்றும் கிரீன்வேஸ் சந்திப்பு வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வாகனங்கள் வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை, சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் சாலை மற்றும் எஸ்.வி.படேல் சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    * கிரீன்வேஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையில் இருந்து செல்லும் வாகனங்கள் ஆர்.கே.பிராடீஸ் கோட்டை வழியாக டி.ஜி.எஸ்.தினகரன் இசைக் கல்லூரி மற்றும் சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல அனுமதிக்கப்படும். டி.ஜி.எஸ்.தினகரன் சாலை மற்றும் இசைக் கல்லூரி சந்திப்பிலிருந்து எந்த வாகனமும் அடையாறு நோக்கி செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டது.
    • பன்னீர்செல்வம் பூங்காவில் போக்குவரத்து போலீசுக்காக வைக்கப்பட்டுள்ள நிழற்கு டை அகற்றப்பட்டு விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் உள்ள சாலையில் மேம்பா ட்டு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர். இந்த பகுதியில் ஜவுளி, நகைக்கடை, சாலை யோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர். பொதுமக்கள், வியாபாரிகள், வாடிக்கை யாளர்கள் அதிகம் கூடுவதால் நெருக்கடியாக உள்ளது.

    இப்பகுதியில் பாதசாரிகள் சாலையை கடக்கும்போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இந்த சாலையில் போக்குவரத்தை குறைக்கும் வகையில் இந்த சாலை சந்திப்பு வாகனங்க ளும், பாதசாரிகளும் பாதுகா ப்பாக கடந்து செல்லும் வகையில் வாகன போக்குவ ரத்தை சோதனை அடிப்ப டையில் தற்காலிகமாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் முடிவு செய்துள்ளது.

    இதன்படி திருவேங்கடம் வீதிக்கு பிரதான சாலையில் இருந்து வடக்கு நோக்கி மட்டும் வாகனங்கள் ஒரு வழிப்பாதை யில் செல்லும் வகையில் இன்று முதல் மாற்றி அமைக்க ப்பட்டது.

    மறுவ ழியில் வரும் வாகனங்கள், ஈஸ்வரன் கோவில் வழியாக மீனாட்சி சுந்தரனார் சாலை யில் இணை யலாம். அல்லது மணிக்கூண்டு சந்திப்பினை கடந்து பெரியார் மன்றம் சந்திப்பின் வழியாக பன்னீ ர்செல்வம் பூங்காவை அடையலாம் என அறிவுறுத்தப்பட்டு ள்ளது.

    இதையடுத்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் போக்குவரத்து போலீசுக்காக வைக்கப்பட்டுள்ள நிழற்கு டை அகற்றப்பட்டு விட்டது.

    இது போல இந்த பகுதியில் பொது மக்கள் கடந்து செல்லும் வகையில் தடுப்பு கள் வைக்க ப்ப ட்டுள்ளது. மேலும் திரு வேங்கடசாமி வீதியில் போக்குவரத்து போ லீசார் வாகனங்களை ஒழு ங்கு படுத்தி கொண்டிருந்த னர். 

    • பாதசாரிகள் சாலையை கடக்கும் போது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.
    • வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் நாளை முதல் மாற்றி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு பகுதியில் உள்ள சாலையில் மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

    இந்த பகுதியில் ஜவுளி, நகைக்கடை, சாலையோர வியாபாரிகள் அதிகம் உள்ளனர். பொதுமக்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அதிகம் கூடுவதால் நெருக்கடியாக உள்ளது.

    இப்பகுதியில் பாதசாரிக ள் சாலையை கடக்கும்பே ாது விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது.

    இந்த சாலையி ல் போக்கு வரத்தை குறை க்கு ம் வகையில் இந்த சாலை சந்திப்பு வாகன ங்களும், பாதசாரிகளும் பாதுகாப்பாக கடந்து செல்லும் வகையில் வாகன போக்குவரத்தை சோதனை அடிப்படையில் தற்காலி கமாக மாற்றி அமைக்க மா வட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் முடிவு செய்துள்ளது.

    இதற்காக திருவேங்கடம் வீதிக்கு பிரதான சாலையில் இருந்து வடக்கு நோக்கி மட்டும் வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் செல்லும் வகையில் நாளை (புதன்கி ழமை) முதல் மாற்றி அமை க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    மறுவழியில் வரும் வாக னங்கள், ஈஸ்வரன் கோவில் வழியாக மீனாட்சி சுந்தர னார் சாலையில் இணைய லாம். அல்லது மணிக்கூண்டு சந்திப்பினை கடந்து பெரி யார் மன்றம் சந்திப்பின் வழியாக பன்னீர்செல்வம் பூங்காவை அடையலாம்.

    எனவே பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆகஸ்ட் 4, 10, 13-ந் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.

    சென்னை:

    சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு சாா்பில் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினவிழா, சென்னை தலைமைச் செயலகத்தில் வழக்கம்போல கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஆகஸ்ட் 4, 10, 13-ந் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஒத்திகை நிகழ்ச்சியால், அந்த 3 நாட்களிலும் காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் நேப்பியா் பாலத்தில் இருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப்பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.

    காமராஜா் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்.

    அதேபோல், பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம், அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சந்திப்பு, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல கத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதை யொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி நாளை விழா நடைபெறும் நத்தம் சாலை யில் ஐ.ஓ.சி. ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. இப்பகுதிக்கு ஐ.ஓ.சி. ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமைரைத்தொட்டி, புதூர், மூன்றுமாவடி வழியாக ஐயர்பங்களா சந்திப்பு சென்று தங்கள் பகுதிக்கு செல்லலாம். அதுபோல நத்தம் ரோட்டிலிருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் மூன்று மாவடி, புதூர் வழியாக நகரின் உட்பகுதிக்கு செல்லலாம். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பி லிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர் வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லவேண்டும். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

    அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வளையங்குளம், சாம நத்தம், பொட்ட பாளையம் மற்றும் கீழடி வழியாக ராமேசுவரம் சாலையினை மாட்டுத் தாவணி செல்லவேண்டும்.

    தூத்துக்குடி, அருப்புக் கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு கனரக வாகனங்களும் கப்பலூர் செல்லவேண்டும். சென்று திண்டுக்கல் சாலை வழியாக செல்லவேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் வாகன கொள்ளப் படுகிறது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பன் சாலை வரை பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்படுகிறது.
    • ஜிம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடதுபுறம் திரும்பி மூப்பாரப்பன் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. நகர் அடையலாம்.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தியாகராயநகர் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணா சாலை சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு வரை இணைப்பு மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே தெற்கு உஸ்மான் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 13-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் ஒரு வாரம் சோதனை ஓட்டம் செய்யப்பட உள்ளது.

    * அண்ணா சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் மற்றும் வாகனங்கள் தியாகராயநகர் மேட்லி சந்திப்பு செல்வதற்கு கண்ணம்மாபேட்டை சந்திப்பில் இடதுபுறமாக திரும்ப வேண்டும். பின்னர், புதிய போக் சாலை சென்று முத்துரங்கன் சாலை வழியாக வலது புறமாக திரும்பி முத்துரங்கன் சாலை மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி தியாகராயநகர் பஸ் நிலையம், உஸ்மான் சாலையை சென்றடையலாம்.

    * போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலை வரும் மாநகர பஸ்கள் (47,47A -வழித்தட எண்) இடதுபுறம் சென்று பர்கிட் சாலை வழியாகவும் மற்றும் தியாகராயநகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளி நுழைவுவாயில் வழியாக வரும் மாநகர பஸ்கள் அண்ணாசாலை செல்வதற்கு மேட்லி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி பர்கிட் ரோடு வழியாக மூப்பாரப்பன் சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி சி.ஐ.டி. நகர் ரவுண்டானா அடைந்து இணைப்பு சாலை வழியாகவும் அல்லது 5-வது மெயின் ரோடு வழியாகவும் அண்ணா சாலையை அடையலாம்.

    * மேட்லி சந்திப்பில் இருந்து மூப்பாரப்பன் சாலை வரை பர்கிட் ரோடு ஒருவழி சாலையாக மாற்றப்படுகிறது.

    * போத்தீஸ் மேம்பாலத்தில் இருந்து உஸ்மான் சாலை வரும் இலகுரக வாகனங்கள் மேட்லி சந்திப்பில் வலது புறமாக திரும்பி மேட்லி சுரங்கப்பாதை வழியாக மேற்கு மாம்பலம் மற்றும் மேற்கு சைதாப்பேட்டையை அடையலாம்.

    * ஜிம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் தண்டபாணி தெருவில் இடதுபுறம் திரும்பி மூப்பாரப்பன் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி. நகர் அடையலாம்.

    * வெங்கட் நாராயணா சாலையில் இருந்து தியாகராயநகர் செல்லும் வாகனங்கள் பர்கிட் சாலை மூப்பாரப்பன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மூசா சாலை வழியாக தியாகராயநகர் சென்றடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
    • கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் கலங்கரை விளக்கம் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில், காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பயன்படுத்த இயலாது. இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் 6-ந்தேதி (நாளை) முதல் ஒரு வருடத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    * லூப் ரோடு மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவு சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் 'யூ-டர்ன்' செய்து கலங்கரை விளக்கம் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

    * போர் நினைவுச்சின்னத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லவிரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் 'யூ-டர்ன்' செய்து இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

    வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×