search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது
    X

    கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது

    • காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி. சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைய அறிவுறுத்தல்
    • அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பலாம்

    கோவை,

    கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சந்திப்பு முதல் உப்பிலிபாளையம் சிக்னல் வரை மேம்பாலப் பணி மற்றும் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்து இருந்தனர். இந்த போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    அதன்படி, அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் நஞ்சப்பா சாலை வழியாக பார்க் கேட் ரவுண்டானாவை அடைந்து மத்திய சிறை அருகே செல்லும் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அல்லது உப்பிலிபாளையம் சிக்னலில் வலதுபுறம் திரும்பி ரெட்கிராஸ், ஹூசூர் சாலை வழியாக எல்.ஐ.சி. சிக்னலை அடைந்து வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.

    அண்ணா சிலை சந்திப்பில் இருந்து மேம்பாலம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி கே.ஜி. மருத்துவமனை ரெட்கிராஸ் வழியாக உப்பிலிபாளையம் சிக்னலை அடைந்து செல்லலாம்.

    அண்ணாசிலை சந்திப்பில் இருந்து காந்திபுரம் செல்லும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி டாக்டர் பாலசுந்தரம் சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக செல்ல வேண்டும்.

    அவிநாசியில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் அண்ணா சிலை சிக்னலில் வலதுபுறம் திரும்பியோ அல்லது லட்சுமி மில் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி வழியாகச் செல்லலாம்.

    காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அவிநாசி செல்லும் பேருந்துகள் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, பாப்பநாயக்கன்பாளையம் லட்சுமி மில் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    காந்திபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் பார்க்கேட், எல்.ஐ.சி. சிக்னல், அண்ணா சிலை சிக்னல் வழியாக ரேஸ்கோர்ஸ் சென்று பின்னர் திருச்சி சாலையை அடைந்து செல்லலாம்.

    திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ரேஸ்கோர்ஸ், எல்,ஐ.சி. சிக்னல், பார்க்கேட் வழியாக காந்திபுரம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×