search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிணறு"

    • புளியம்பட்டியில் பாதுகாப்பு இன்றி கிணறு திறந்து கிடக்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    பு.புளியம்பட்டி,

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தினசரி மார்க்கெட்டு, பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் நகராட்சி அலுவ லகம், கிராம நிர்வாக அலுவலகம், பஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், தபால் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது. மேலும் மாணவ, மாணவி கள் அரசு பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய சாலை யாக இருக்கிறது. இந்த சாலை பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை யாக உள்ளதால் இந்த ரோட்டில் எப்போது போக்கு வரத்து அதிகம் இருந்து கொண்டே இருக்கும். இந்த சாலையையொட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே ஒரு கிணறு உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பின்றி இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்த கிணறு சாலையின் தரை மட்டத்தில் இருந்து எட்டி பார்க்கும் அளவில் உயரம் குறைவாக உள்ளது. கிராம நிர்வாக அலுவ லகத்திற்கு வந்து, செல்ப வர்களும் மற்றும் பொது மக்கள் போக்கு வரத்து அதிகம் உள்ள இந்த சாலை என்பதால் இந்த கிணற்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எந்த ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மற்றும் விபத்துகள் நடக்காமல் இருக்க பாது காப்பு இன்றி திறந்து கிடக்கும் இந்த கிணற்றை இரும்பு கேட்டுகள் அமைத்து மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • வாலிபரை கொலை செய்து பிணம் கிணற்றில் வீசியுள்ளனர்.
    • மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா?

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத் தான் புது கண்மாய் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பேண்ட் சட்டை அணிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தார்.

    அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலை அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து அழுகிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை மீட்டனர்.

    அதன்பின் வாடிப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் முரு கேசன், மாயாண்டி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் கிரே கலர் பேண்டும், புளூ கலரில் வெள்ளை புள்ளி போட்ட முழுக்கை சட்டை யும் அணிந்திருந்தார். உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. முகம் முழுவதும் உப்பிய நிலையில் காணப்பட்டது.அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. கிணற்றை சுற்றி உள்ள பகுதியில் பேக், செல்போன் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? அல்லது காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துமணி விசாரித்து வருகிறார்.

    • பாபுராஜின் பிள்ளைகள் பள்ளி படித்து வரும் மாணவ-மாணவிகள் என்பதால் மண் அள்ளுதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை தந்தைக்கு உதவினர்.
    • கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாபுராஜின் குடும்பத்தினர் தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காட்டையை சேர்ந்தவர் பாபுராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது வீடு உள்ள பகுதியை சேர்ந்தவர்கள், அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

    கடந்த 5 ஆண்டுகளாக பாபுராஜின் குடும்பத்தினர் அங்கிருந்தே தண்ணீர் எடுத்தனர். இந்நிலையில் அந்த ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பாபு ராஜின் குடும்பத்தினரின் தேவைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

    இதனால் என்ன செய்வதென்று தவித்த அவர்கள் தங்களது வீட்டு வளாகத்தில், தாங்களாகவே கிணறு தோண்ட முடிவு செய்தனர். அதன்படி, பாபுராஜ் அந்த பணியை தொடங்கினார். அவருக்கு கிணறு தோண்ட அவருடைய மகன் சிவாஜித், மகள் சிவான்யா ஆகியோர் உதவி செய்தனர்.

    தினமும் வேலைக்கு சென்று விட்டு மாலையில் சீக்கிரமாக வீட்டிற்கு பாபு ராஜ் வந்து விடுவார். பின்பு தனது பிள்ளைகளுடன் சேர்ந்து கிணறு தோண்டும் பணியில் இரவு வரை ஈடுபடுவார். பாபுராஜின் பிள்ளைகள் பள்ளி படித்து வரும் மாணவ-மாணவிகள் என்பதால் மண் அள்ளுதல் உள்ளிட்ட சிறு சிறு வேலைகளை தந்தைக்கு உதவினர்.

    இதனால் 9 அடி விட்டத்தில் 34 அடி ஆழ கிணற்றை 50 நாட்களில் தோண்டி முடித்தனர். 30 அடி ஆழம் தோண்டி முடிந்தபோது பாறைகள் இருந்ததால் பாபுராஜ் என்ன செய்வ தென்று திகைத்தார். பின்பு பாறை உடைக்கும் எந்திரத்தை வாடகைக்ககு வாங்கி உடைத்தார். 4 அடி வரை பாறையை உடைத்து எடுத்ததும் தண்ணீர் வந்தது.

    இதையடுத்து கிணறு தோண்டும் பணியை நிறுத்தினர். கிணற்றில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியது. அதன் பிறகு அவர்களாகவே கிணற்றுக்கு தடுப்புச் சுவர் நேர்த்தியாக கட்டி முடித்தனர். தற்போது அந்த கிணற்றில் இருந்தே தண்ணீர் எடுத்து பாபுராஜின் குடும்பத்தினர் தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    • 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
    • மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் மகா ராஜன்(வயது55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக கேரள மாநிலம் வெங்கானூர் நெல்லியறதலை பகுதியில் வசித்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்சத்தில் முக்கோல பிச்சோட்டு கோணம் பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் வீட்டில் 90 அடி ஆழம் உள்ள கிணற்றில் பழைய கான்கிரீட்டை சீரமைக்கும் பணியை சக தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார்.

    இடிவு மண்ணை அகற்றி விட்டு, பழைய குழாயை வெளியே எடுப்பதற்காக கிணற்றின் அடிப்பகுதியில் நேற்று முன்தினம் மகாராஜன் இறங்கினார். அவருக்கு சற்று மேலே இருந்த இடத்தில் மணிகண்டன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கிணற்றின் இடைப்பகுதியில் மண் இளக்கமும், தண்ணீர் சலசலப்பும் இருந்ததை கிணற்றின் மேலே நின்றவர்கள் உணர்ந்தனர்.

    இதனால் கிணற்றுக்குள் இருந்த இருவரையும் மேலே வரும்படி கூறினர். இதையடுத்து மகாராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் கயிறை பிடித்து கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கிணற்றுக்குள் மண்சரிவு ஏற்பட்டது.

    மண்ணுக்குள் மகாராஜன் சிக்கிக் கொண்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விழிஞ்சம், சாக்கை தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் விரைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மீண்டும் மண் சரிவு செய்யப்பட்டது.இதனால் மீட்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். மண் சரிவு ஏற்பட்ட கிணற்றில் கிணறு தரை மட்டத்தில் இருந்து 45 அடி ஆழம் வரை கிணற்றின் உள் விட்டம் 4 அடி ஆகும். அதற்கு கீழ் 45 அடி ஆழம் வரை உள் வட்டம் 3 அடியாகும். கிணற்றின் அடிப்பகுதியில் 20 அடி உயரத்தில் மண் சரிந்து விழுந்துள்ளது.

    அதில் மகாராஜன் சிக்கி இருக்கலாம் என கருதப்பட்டு மீட்பு பணி துரிதப்பட்டுத்தப்பட்டது. நேற்று 2-வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் உள்ள தண்ணீர் மற்றும் சகதியை அகற்றப்பட்டு தொழிலாளி மகாராஜனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அவரை மீட்கும் பணி இன்று 3-வது நாளாக நீடித்தது. அவர் மண்சரிவில் சிக்கி இன்று காலையுடன் 48 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் அவரது கதி என்ன ஆனது? என்று அனைவர் மத்தியிலும் கவலை ஏற்பட்டது. இருந்த போதிலும் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மகாராஜன் கிணற்றுக்குள் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்பு படையினர் கயிறு மூலம் கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். 50 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மகாராஜன் பிணமாக மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமின்றி மீட்பு குழுவினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

    • சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது.
    • மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    உடுமலை :

    மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் ஆத்தூர் பகுதியில் சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. சுமார் 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றின் அருகில் மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • அர்ஜுன் காற்றின் வேகத்தால் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
    • தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டம் குருக்கள்பட்டி கிராமத்தை சேர்ந்த மகாராஜா என்பவரது 50 அடி ஆழமுள்ள கிணற்றிற்குள் மருதப்பபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மகன் அர்ஜுன் (வயது13) என்பவர் தண்ணீர் குடித்துவிட்டு ஓரமாக நின்ற போது காற்றின் வேகத்தால் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். கிணற்றில் விழுந்த சிறுவன் மோட்டார் பம்ப் செட்டினுடைய பைப்பை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டான். சிறுவனின் சத்தம் கேட்டு அங்கு சென்று மகாராஜா பார்த்த போது சிறுவன் கிணற்றில் விழுந்து கிடப்பது தெரிந்துள்ளது. உடனடியாக கிணற்றின் படிக்கட்டு சரியாக இல்லாத காரணத்தினால் உதவிக்காக கிணற்றுக்குள் கயிற்றை அனுப்பினார். அதனை பிடித்துக் கொண்டு சிறுவன் இருந்துள்ளார்.

    தொடர்ந்து சங்கரன்கோவில் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் விஜயசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று சிறுவனை மீட்டனர். பின்னர் அவரது தாத்தாவிடம் சிறுவன் ஒப்படைக்கப்பட்டாார். சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது.
    • கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர்.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்த வட்டமலை அருகே சேடன்புதூர் பகுதியில் உள்ள செட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 68) விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீர் இல்லாத 80 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. அதில் தோட்டத்தில் சுற்றித்திரிந்த பிறந்து 3 மாதங்களே ஆன கன்றுக்குட்டி ஒன்று தவறி விழுந்தது.

    பின்னர் மேலே வரமுடியாமல் கன்றுக்குட்டி கிணற்றுக்குள் அங்கும் இங்கும் கத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இந்த சத்தத்தை கேட்ட பெரியசாமி அங்கு சென்று கிணற்றை எட்டிப்பார்த்த போது கிணற்றுக்குள் கன்றுக்குட்டி விழுந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திக்கு வந்து பார்வையிட்டு கன்றுக்குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்டு கயிற்றின் மூலம் கட்டி மேலே கொண்டு வந்தனர். பின்னர் கன்றுக்குட்டி அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×