கிணற்றுக்குள் விழுந்த பசு மாடு மீட்பு

சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்கப்பட்ட காட்சி.
தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்கப்பட்ட காட்சி.
Published on

உடுமலை :

மடத்துக்குளத்தை அடுத்த கொழுமம் ஆத்தூர் பகுதியில் சுந்தரம்மாள் என்பவருடைய தோட்டத்தில் தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று உள்ளது. சுமார் 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றின் அருகில் மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் இறங்கி பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com