search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20"

    இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன மகேந்திர சிங் டோனி டி20 தொடர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #MSDhoni #INDvWI #INDvAUS
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 4–ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

    இந்த ஆறு டி20 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 37 வயதான டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு டோனி நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை படைத்துள்ளார். #AfghanistanPremierLeague #APLT20 #HazratullahZazai
    சார்ஜா:

    ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    சார்ஜாவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார். காபுல் ஸ்வானை அணி வீரரான அவர் பல்கி லெஜன்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

    ஆட்டத்தின் 4-வது ஓவரை அப்துல்லா மஜாரி வீசினார். இந்த ஓவரில் தான் ஹஸ்ரசத்துல்லா 6 பந்துகளிலும் 6 சிக்சர் விளாசினார். அவர் 17 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். 12 பந்துகளில் அரை சதத்தை தொட்டார்.

    ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த 6-வது வீரர் என்ற பெருமையை ஹஸ்ரத்துல்லா பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ் (வெஸ்ட்இண்டீஸ்), ரவிசாஸ்திரி (இந்தியா), கிப்ஸ் (தென்ஆப்பிரிக்கா), யுவராஜ்சிங் (இந்தியா), ஜோர்டன் கிளார்க் (இங்கிலாந்து) ஆகியோர் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் அடித்து இருந்தனர்.

    அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முன்பு ஹஸ்ரசத்துல்லா இந்த அதிரடியை நிகழ்த்தினார். அவரது அதிரடியான ஆட்டத்தை கெய்ல் பாராட்டினார்.



    ஹஸ்ரசத்துல்லா விளையாடிய அவரது அணி வெற்றி பெற முடியாமல் அந்த அணி 21 ரன்னில் தோற்றது. பல்கி லெஜன்டஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன் எடுத்தது. கெய்ல் 48 பந்தில் 80 ரன் எடுத்தார். காபூல் ஸ்வானை அணியில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்னே எடுக்க முடிந்தது.

    ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தது குறித்து ஹஸ்ரத் துல்லா கூறியதாவது:-

    கிறிஸ்கெய்ல்தான் எனக்கு முன் மாதியானவர். அவர் முன்னால் இப்படி நான் ஆடியது எனக்கே கனவாக இருக்கிறது. வழக்கமான எனது ஆட்டத்தை ஆடினேன். இதில் நான் பல சாதனைகளை செய்து இருப்பதாக கூறுகிறார்கள். இதன் முலம் என் பெயரும் கிரிக்கெட்டில் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #AfghanistanPremierLeague #APLT20 #HazratullahZazai
    இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. #ENGvIND

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மான்செஸ்டர் நகரில் இன்று முதல் டி20 போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

    இந்திய அணியில் மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக கேஎல் ராகுல் இடம்பெற்றுள்ளார். 

    உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது. #AFGvsBAN #RashidKhan

    டேராடூன்:

    வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.



    இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். கனி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷசாத் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த நஜிபுல்லா சத்ரான் 2 ரன்னிலும், மொகமது நபி டக் அவுட்டும் ஆகினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

    அதன்பின் ஸ்டானிக்சாய் உடன் சமியுல்லா ஷென்வாரி ஜோடி சேர்ந்தார். ஷென்வாரி 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபிகுல்லா ஷபிக் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டானிக்சாய் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் அபுல் ஹசன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.



    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். தமிம் முஜீப் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அதன்பின் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் 20 ரன்னிலும், மஹ்மதுல்லா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேச அணி 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷபூர் சத்ரான், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 



    இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. #AFGvsBAN #RashidKhan
    ஐசிசி உலகலெவன் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 போட்டியில் புத்தம் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட மைதானத்தின் உள்ளே நின்று வருணனை செய்யும் முறையானது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

    ஷகீத் அப்ரிடி தலைமையிலான உலக லெவன் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியான இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. உலக லெவன் அணி பந்திவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 

    இதன்மூலம் உலக லெவன் அணியின் வெற்றிக்கு 200 ரன்களை இலக்காக வெஸ்ட்இண்டீஸ் அணி நிர்ணயித்தது. இதையடுத்து உலக லெவன் அணி பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சில் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

    வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்களும், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன்மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஐசிசி ஒரு புதிய அம்சத்தை சேர்த்தது.



    மைதானத்தில் ஒரு அறையில் அமர்ந்து வருணனையாளர்கள் ஆட்டத்தை நேரலையாக வருணனை செய்வார்கள். ஆனால், இந்த போட்டியில் களத்திற்கே வருணனையாளர் நாசர் உசைன் சென்று ஆட்டத்தை வருணனை செய்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படத்தில், பிரகாஷ் ராஜ் செய்யும் சண்டைக்காட்சி ஒன்றை ரேடியோவில் ஹீரோ சிவகார்த்திகேயன் களத்தில் இருந்தே நேரலையாக வருணனை செய்வார்.

    இதேபோல, டி20 ஆட்டம் தொடங்கியதும் வருணனையாளர் நாசர் உசைன் கையில் மைக் உடன் களத்தில் இறங்கினார். முதல் ஓவரில் ஸ்லிப் திசையில் நின்று கொண்டு ஆட்டத்தை வருணனை செய்தார். இரண்டு ஓவர்கள் களத்தில் இருந்த அவர் பின்னர், பார்வையாளர்கள் வேலி பக்கம் நின்று கொண்டு வருணனை செய்தார்.

    அவ்வப்போது, பீல்டிங் நின்று கொண்டிருந்த வீரர்களிடம் மைக்கை நீட்டி கேள்விகளையும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த புதிய வருணனை முயற்சி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. பலர் இந்த முயற்சியை வரவேற்ற நிலையில், ஒரு சிலர் ஆட்டத்தின் போக்கை இது சீர் குலைக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
    ×