search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் டி20 - வங்காளதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
    X

    முதல் டி20 - வங்காளதேச அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

    உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தியது. #AFGvsBAN #RashidKhan

    டேராடூன்:

    வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.



    இதையடுத்து வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமது ஷசாத், உஸ்மான் கனி ஆகியோர் களமிறங்கினர். கனி 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ருபெல் பந்தில் போல்டானார். அவரைத்தொடர்ந்து அஸ்கார் ஸ்டானிக்சாய் களமிறங்கினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷசாத் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த நஜிபுல்லா சத்ரான் 2 ரன்னிலும், மொகமது நபி டக் அவுட்டும் ஆகினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

    அதன்பின் ஸ்டானிக்சாய் உடன் சமியுல்லா ஷென்வாரி ஜோடி சேர்ந்தார். ஷென்வாரி 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷபிகுல்லா ஷபிக் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டானிக்சாய் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி பந்துவீச்சில் அபுல் ஹசன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.



    அதைத்தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். தமிம் முஜீப் வீசிய முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் களமிறங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த லிட்டன் தாஸ் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அதன்பின் களமிறங்கிய முஷ்பிகுர் ரஹிம் 20 ரன்னிலும், மஹ்மதுல்லா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேச அணி 19 ஓவர்களில் 122 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷபூர் சத்ரான், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், மொகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 



    இதன்மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. #AFGvsBAN #RashidKhan
    Next Story
    ×