search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "supply"

    • தொண்டியில் மீன் வரத்து அதிகரித்துள்ளது.
    • மீன்கள் ஏலம் விடப்பட்டு தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகமானது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று கரை திரும்பினர். இதில் அரிய வகை மீன்களான மூட்டான், மஞ்சள் கீலி, கண்ணாடி பாறை ஆகிய மீன்கள் வலையில் சிக்கின.

    இது தவிர கொடுவா, பாறை, ஓரா, நகரை, செங்கனி, விலா மீன், தாழஞ்சுரா, திருக்கை, முரல், ஊடகம் மற்றும் ஆழ்கடலில் பிடிபடும் இறால், நண்டு, கனவாய் போன்ற மீன்களும் சிக்கியது. இவை தொண்டி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இங்கிருந்து ஏலம் விடப்பட்டு, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் உள்ள அசைவப்பிரியர்களுக்கு எந்த மீன்களை வாங்கி சாப்பிடுவது என்ற நிலையில் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

    திருத்துறைப்பூண்டி அருகே மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திருத்துறைப்பூண்டி:

    கஜா புயலின் தாக்கத்தால் திருத்துறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் வீடுகள், மின்கம்பங்களும் சேதமடைந்தன. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் பகுதி புயலால் பாதிக்கப்பட்டு 1 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்சாரம் வழங்கவில்லை. ஆதலால் உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், அரசு இலவசமாக வழங்கும் 27 நிவாரண பொருட்களையும் வழங்க வலியுறுத்தியும் நேற்று வரம்பியத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். முற்போக்கு எழுத்தாளர் சங்க கிளை தலைவர் செந்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் வீரசேகர், விட்டுக்கட்டி விவசாய சங்க தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நிலப்பரப்பு மற்றும் வான்வெளியில் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன பராக்-8 ரக ஏவுகணை தடுப்பு கவன்களை 77 கோடி டாலர்கள் விலையில் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. #IsraelsupplytoIndia #missiledefencesystems #$777mnmissiledefencesystems
    ஜெருசலேம்: 

    இஸ்ரேல் நாட்டின் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைகள் உள்நாட்டின் பாதுகாப்புக்கு அதிநவீன பராக்-8 ரக ஏவுகணைகளை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவின் கடலோரப் பகுதிகளிலும் இத்தகைய ஏவுகணை தடுப்பு கவன்களை பயன்படுத்த இந்தியா தீர்மானித்தது.

    இதில் ஒருகட்டமாக, 77 கோடி அமெரிக்க டாலர்கள் விலையில் நிலப்பரப்பு மற்றும் வான்வெளியில் நீண்டதூரம் சென்று தாக்கும் அதிநவீன பராக்-8 ரக ஏவுகணை தடுப்பு கவன்களை இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.  

    இந்த ஏவுகணை தடுப்பு கவன்கள் இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இஸ்ரேல் நாட்டின் விண்வெளித்துறையின் கூட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை என்பதும், இந்திய ராணுவம் மற்றும் கடற்படைக்கு 200 கோடி ரூபாய் அளவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தங்களை இஸ்ரேல் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. #IsraelsupplytoIndia #missiledefencesystems #$777mnmissiledefencesystems
    பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தினமும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    கண்டமனூர்:

    ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜதானி ஊராட்சியில் ஜக்கம்மாள்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டாகவே சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்தும், தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர்.

    அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தனர். இந்தநிலையில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.5 லட்சத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கீடு செய்தது. அதன்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எபி, முத்துப்பாண்டி ஆகியோர் ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்து வருகின்றனர். அதுவரை பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தினமும் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தண்ணீரை குடங்களில் பிடித்து செல்கின்றனர்
    சின்னாளபட்டியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரை பிடித்த போது துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டிக்கு பேரணை பகுதி சித்தர்கள் நத்தத்தில் இருந்தும், ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் இருந்தும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. வாரத்திற்கு 2 முறை விநியோகிக்கப்படும் இந்த குடிநீரில் அவ்வப்போது துர்நாற்றம் விசுவதும் தொடர் கதையாக உள்ளது.

    2 -வது வார்டு பகுதிக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரை பிடித்த போது துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் வளுவளுப்பாக இருந்ததோடு, பிடித்து குடம் மற்றும் பாத்திரங்களில் வைக்கப்பட்ட தண்ணீர் நுரையாக இருந்தது. மேலும், குடிக்க முடியாத நிலையில் அழுக்கு நிறைந்து துர்நாற்றமும், அதிகளவு பிளிச்சிங் பவுடர் கலந்தும் இருந்தது. தண்ணீரை கையில் அள்ளி பார்த்தால் பசை போல் இருந்துள்ளது. அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலையில் இருந்தது. 

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஆத்தூர் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குழாய்கள் தரமற்றவையாக இருப்பதால் ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது வாடிக்கையாக உள்ளது.

    இதுபோன்ற நேரங்களில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் காலதாமதமாக அடைக்கின்றனர். மேலும், சரியாக அடைக்கப்படாமல் இருப்பதால் சாக்கடை தண்ணீர் குடிநீரோடு கலந்து வருகிறது.

    இதனை மறைக்க பேரூராட்சி நிர்வாகம் சின்னாளபட்டியில் தண்ணீரை சேமிக்கும் மேல்நிலைத் தொட்டிகளில் அதிகளவு பிளிச்சிங் பவுடரை கொட்டுகிறது. இதனால் தான் சாக்கடை கலந்த தண்ணீரில் அதிகளவு பிளிச்சிங் பவுடர் கலப்பதால் இது போன்று நுரையாகவும், குடிக்க முடியாத நிலையில் தண்ணீரும் உள்ளது. 

    இவ்வாறு தெரிவித்தனர்.

    குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் ஊராட்சியில் ஈச்சம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமமக்களுக்கு அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் ஆழ்குழாயில் இருந்து தொட்டிக்கு செல்லும் குழாய் உடைந்து உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெகு தொலைவில் சென்று குடிநீர் எடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து நக்கசேலம் ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுநாள் வரைக்கும் குடிநீர் வினியோகம் செய்ய எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் பெரம்பலூர்-துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரன், ஆலத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் குழாய் சரிசெய்யப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்-துறையூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
    ×