search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "supply"

    • சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு விவசாயிக–ளுக்கான கருத்தரங்கு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு மையத்தின் தலைவர் மாணிக்கம் வரவேற்றார்.

    சேலம் தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நீர் நுட்பவியல் இயக்குனர் பழனிவேலன், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் விதை மைய இயக்குனர் உமாராணி ஆகியோர் விவசாயிகளுக்கான கருத்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்ப–டுத்துதல் திட்டத்தின் கீழ் வேளாண்மை எந்திரங்களை பயனாளிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வழங்கினார். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒட்டு ஆமணக்கு விதை உற்பத்தி பயிற்சி மற்றும் பல்வேறு கருத்துக்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.

    இறுதியில் ஏத்தாப்பூர் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய மரவியல் மற்றும் பயிர் பெருக்கத் துறை பேராசிரியர் வெங்கடாஜலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இறுதி ஆண்டு மாணவர்கள் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி மாணவர்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
    • 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

    இந்த ஆண்டு பொங்கலுக்கான பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.

    அதன்படி, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுக்கரும்பு ஒன்று மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 9-ந் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன.

    பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று தொடங்கிவைக்கிறார்.

    அன்றைய தினமே தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

    பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக இன்று முதல் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சை மாவட்டத்தில் 1185 ரேஷன் கடைகளில் உள்ள 6.5 லட்சம் கார்டுகளுக்கு இன்று முதல் டோக்கன்விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

    தஞ்சை கரந்தை சுஜானா கீழக்கரை பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலர் சுமதி இளங்கோவன், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகித்தனர்.

    இதேப்போல் தஞ்சை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் டோக்கன் வினியோகம் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

    அந்த டோக்கனில் பொங்கல் தொகுப்பை பெறும் நாள், நேரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அதைக் காட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது.
    • தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் வழங்கல்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார விவசாயிகளுக்கு கபிலர்மலை தோட்டக்கலை துறை மூலம் தக்காளி, வெங்காயம்,சுரை,கத்திரி, மிளகாய்,பாகல்,பீர்க்கன்,கொத்தவரை,வெண்டை ஆகிய விதைகள் மானியம் மூலம் வழங்கப்படுகிறது. எனவே விதைகள் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் ஜெராக்ஸ் ,ரேசன் ஜெராக்ஸ்,சிட்டா நகல்,அடங்கல்நகல், வங்கிகணக்குபுத்தகம்நகல்,போட்டோ2, ஆகியவற்றை கொண்டு வந்து கபிலர்மலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் கொடுத்து விதைகளை பெற்றுக் கொள்ளுமாறு தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
    • 10 மற்றும் 12-ம்வகுப்பில் அரசு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    மேலூர்

    மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப் சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மூலம் மாணவிகள் அமருவதற்கு மேஜைகள் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று கிளப் நிர்வாகத்தினர் ரூ. 1 லட்சம் மதிப்புடைய 30 மேஜைகளை வழங்கினர். வரும் கல்வி ஆண்டில் மேலூர் தாலுகா அளவில் 10 மற்றும் 12-ம்வகுப்பில் அரசு தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு கிளப் சார்பில் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதில் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேச பெருமாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மகாராஜா, இப்ராகீம், ரவி, ராஜேந்திரன், உறுப்பினர்கள் சந்திரமோகன், அப்துல் ரசாக், விஜயராகவன், தலைமை ஆசிரியர் செந்தில் நாயகி, உதவி தலைமை ஆசிரியர் தமிழ் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்‘ திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது.
    • ரூ.15 மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் உழவர் நலத்துறை மூலம் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம்' திட்டத்தின் கீழ்10,998 தேக்கு மரக்கன்றுகள் விவசாயி களுக்கு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்ப டுத்த, வனத்துறையின் நாற்றங்கால்களில் ரூ.15மதிப்புள்ள தரமான மரக்கன்றுகள்உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்திலோ அல்லது உழவன் செயலி வாயிலா கவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இந்த ஆண்டில் 22,500 செம்மரம், மகோகனி, சந்தனம், சிசு மரம் ஆகிய மரங்கள் பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது என பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

    • காலை, மாலை நேரங்களில் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என நகரசபை தலைவர் தெரிவித்தார்.
    • நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து தலைவர் சுந்தரலிங்கம் கூறியதாவது:-

    தேவகோட்டை நகரில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசின் துணையுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஆழ்துளை கிணறுகள் நகரில் 3 இடங்களில் நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு விரைவில் தினமும் காலை, மாலை நேரங்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    நகரில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக தரம் உயர்த்தி மண் சாலை இல்லாத நகராக தேவகோட்டை மாற்றப்படும்.

    மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

    விரைவில் 6 வார்டு வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநகரங்களுக்கு இணையாக இளைஞர்கள் தற்போதுள்ள சூழலுக்கு தகுந்தவாறு கல்வி கற்பதற்கு வசதியாக இலவச வை-பை வசதி செய்யப்படும். நவீன விளையாட்டு மைதானம் கொண்டு வரப்படும். தினச்சந்தை, வாரச்சந்தைக்கான புதிய கட்டிடத்திற்கு மதிப்பீடும் பணி நடக்கிறது.

    நகர் முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும். கால்வாய்களை மராமத்து செய்து சீர்படுத்தி குளங்கள் தூர்வாரப்படும். நகரில் பூங்காவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டு பூங்காக்கள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டி.பி.சி. திறப்பதற்கு ஆலோசனை.
    • விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரேஷன் கடை ஆகியவற்றில் தமிழக அரசின் கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பின்பு அவர் நிருபவரிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 117 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளது நாள் ஒன்றுக்கு 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது இதற்காக தேவைப்படும் இடங்களில் ஒரே இடத்தில் இரண்டு கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது

    மேலும் 250 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்பவர்களுக்கு மொபைல் டிபிசி திறப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டுள்ளபடும் அதிகாரிகள் கனிவுடன் மக்கள் பிரச்சனையை கேட்டறிந்து அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது இந்த ஆண்டு 120 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுற வங்கிகளில் கடன் கொடுக்கும் சங்கமாக இல்லாமல் வங்கி சேவை போன்று பல்வேறு சேவைகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    ரேஷன் அரிசி தேவை இல்லை என்றால் அதனை வாங்க வேண்டாம் அதனால் ரேஷன் கார்டு இல்லாமல் போகாதுதமிழகத்தில் 109 நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளன மேலும் 20 நெல் சேமிப்பு கிடங்குகள் கட்ட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அடுத்த 18 மாதங்களில் படிப்படியாக திறந்த வெளி நெல் குடோன் இல்லை என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்

    எருக்கூர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் (சைலோ) விஞ்ஞான சேமிப்பு களன் செயல்பட வல்லுநர் குழு மூலம் ஆய்வு செய்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றுக்கு 40 வசூல் செய்வதாக எழுப்பிய கேள்விக்கு ராதாகிருஷ்ணன் பதில் அளிக்கையில் விவசாயிகளிடம் கூடுதல் பணம் வசூல் செய்யக்கூடாது இது தொடர்பாக கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்

    அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, செயற்பொறியாளர் குணசீலன், கண்காணிப்பு பொறியாளர் ராஜா மோகன், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜகுமார், தாசில்தார் செந்தில்குமார், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், கூட்டுறவு கடன் சங்க தலைவர் போகர்.ரவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.
    • அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா புதுக்குடி கிராமத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் ஆணைப்படியும், மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் அறிவுறுத்தல்படியும் 11 விவசாயிகள் குழுவாக இணைந்து ஒருங்கிணைத்து 15 ஏக்கர் நிலத்தில் சூழ் உருவாக்கினர்.

    இதையடுத்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இதனை தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் முதன்மை செயலருமான விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மாங்கன்று வழங்கினார்.

    தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் இந்த குழுவுக்கு அரசு மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்வதற்கான மானியமும் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி, தோட்டக்கலை அலுவலர் சோபியா, உதவி ேதாட்டக்கலை அலுவலர் ரகுபதி, கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு பணி வழங்குதல் ஆகும்.
    • மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்று திறனாளிகளுக்கு பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில் உள்ள குறைதீர் கூட்ட அறையில் நாளை ( செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    எனவே தஞ்சை மாவ ட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், இந்த குறை தீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி தலைமை தாங்கினார். பரமத்தி பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் கவுன்சிலர் நாச்சிமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் பூச்சியில் வல்லுனர் சேகர் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகலா ஆல் பென்டசோல் மாத்திரை எப்படி சாப்பிடுவது, குடல் புழுக்களின் தன்மை, குடற்புழு நீக்க நாள் மற்றும் மாணவர்களுக்கு தன் சுத்தம் போன்றது பற்றி விளக்கமாக கூறினார்.

    பரமத்தி வட்டாரத்துக் குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 14 ஆயிரத்து 112 மாணவ, மாணவியருக்கும், அங்கன்வாடியில் 3561 குழந்தைகளுக்கும் என 17,673 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி கைகளை கழுவும் முறைகளை பற்றி கூற கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி செய்து காண்பித்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் குமார், ராஜ்குமார், பெரியசாமி, அருண் ,தனபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது.
    • முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன.

    ஓமலூர்:

    ஆதரவற்றோர், விதவை பெண்கள், ஏழைப் பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் யாரையும் நம்பி வாழாமல் தன் சுய உழைப்பில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இலவச ஆடுகளை வழங்கி வருகிறது. ஓமலூர் ஒன்றியத்தில் இந்த ஆண்டு 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கப்படுகிறது.

    முதல் கட்டமாக கடந்த வாரம் 20 பேருக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து 2-ம் கட்டமாக இலவச ஆடுகள் வழங்கும் விழா ஓமலூர் அரசு கால்நடை மருத்துவமனையில் ஓமலூர் அட்மா குழு தலைவர் செல்வ குமரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் ஓமலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம் அழகிரி ஆகியோர் கலந்து கொண்டு இலவச ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

    விழாவில் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அரசு மருத்துவர்கள் ஆய்வு செய்து ஆரோக்கியமான ஆடுகளை வழங்கினர். தொடர்ந்து மீதமுள்ள பயனாளிகளுக்கும் ஆடுகளை வழங்க உள்ளதாக கூறினர்.

    நிகழ்ச்சியில் ஓமலூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் புஷ்பா, ஒன்றிய கவுன்சிலர்கள் தேன்மொழி, தனசேகரன், கோபால்சாமி, வடக்கு ஒன்றிய அவை தலைவர் ஜெயவேல், தங்கராஜ், அருமை சுந்தரம், கருணாகரன், மோலாண்டிப்பட்டி மணி, கால்நடை மருத்துவர் மதிசேகர், கால்நடை உதவி மருத்துவர்கள் நவநீதன், கோபி, கவிதா, சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 800 பண்ணைக் குடும்பங்களுக்கு 2400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • அட்மா தலைவர் பி.பி.தனராசு முன்னிலையில் விவசாயிகளுக்கு தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள கோதூர், இராமதேவம், நடந்தை, மேல்சாத்தம்பூர் ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 800 பண்ணைக் குடும்பங்களுக்கு 2400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    ராமதேவம் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் அட்மா தலைவர் பி.பி.தனராசு முன்னிலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×