search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student suicide"

    • ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
    • உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை அண்ணா நகரை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி கற்பகம். இவர்கள் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் ஹேமலதா (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஹேமலதா சரியாக படிக்காமல் அடிக்கடி டி.வி பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஹேமலதாவின் பெற்றோர் அவரை ஒழுங்காக படித்து நல்ல மதிப்பெண் எடுக்குமாறு அறிவுரை கூறி கண்டித்ததாக தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த ஹேமலதா பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் ஹேமலதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார், மாணவி ஹேமலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து உயிரிழந்த ஹேமலதா தந்தை சம்பத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் அருகே உள்ள சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சந்திரன் (வயது 15).

    இவர் பச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் கடந்த 6 மாதமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சந்திரனுக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதில் வலி தாங்க முடியாத மாணவன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த அவரது குடும்பத்தினர், சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பிச்சாண்டி கீழத்தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு முனீஸ்வரி என்ற முகிலா(16) என்ற ஒரு மகள் உள்ளார்.

    கருப்பசாமி இறந்து விட்டார். இதனால் மாரியம்மாள் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். முனீஸ்வரி புளியங்குடியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய முனீஸ்வரி திடீரென வீட்டில் இருந்த தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனீஸ்வரியின் உடலை கைப்பற்றி புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்தனர். சம்பவத்தன்று மாணவியை பள்ளி ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் ஆசிரியர் அடித்ததாக குற்றச்சாட்டு
    • பெற்றோர் போராட்டம் நடத்தியதால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொட்டு வைத்து பள்ளிக்கு சென்றதால், மாணவியை ஆசிரியர் அடித்துள்ளார். இதனால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

    நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசாரால் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விசயத்தை குழந்தைகள் பாதுகாப்பு உரிமைக்கான தேசிய ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த எங்கள் குழு தான்பாத் செல்லும் என அதன் தலைவர் பிரியங் கனூங்கோ தெரிவித்துள்ளார்.

    மேலும், ''இது மிகவும் கவனிக்க வேண்டிய சம்பவம். அந்த பள்ளி சிபிஎஸ்சி-க்கான அங்கீகாரம் பெறவில்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளேன். நான் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை சந்திக்க இருக்கிறேன்'' என்றார்.

    இந்த சம்பவம் நேற்று முன்தினம் தன்பாத் தெலுல்மாரி என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.

    • வீட்டில் தனியாக இருந்த மாணவி துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை ஜல்லடையான் பேட்டை தாகூர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவருடைய மகள் யுவஸ்ரீ (20). கவுரிவாக்கத்தில் உள்ள எஸ்.ஐ. வி.டி என்ற கல்லூரியில் பிகாம் ஜென்ரல், 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மதியம் யுவஸ்ரீயின் தாய் ராணி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் யுவஸ்ரீ தனியாக இருந்த நிலையில் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
    • கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பூமியான் பேட்டை பாவாணர் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி தையல்நாயகி. இவர்களது மகன் ஆனந்த் (வயது 22). கடந்த 4 ஆண்டுக்கு முன்பு சரவணன் இறந்து விட்டார். ஆனந்த் நெல்லித்தோப்பில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் டி.எம்.எல்.டி டிப்ளமோ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அதே கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவி ஒருவரை கடந்த ஓராண்டாக ஆனந்த் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய பின்னர் தினமும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 2 வாரமாக காதலர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆனந்திடம் அந்த மாணவி பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்த் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டுக்கு வந்த ஆனந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தாயார் ரெட்டி யார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து ஆனந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காதலி பேசாததால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
    • வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டியல் இன எஸ்.சி சாதி சான்று கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர்.

    திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.

    பன்னியாண்டி சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.

    அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து, திருவண்ணாமலை போலீசார் மாணவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.

    என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என தெரிவித்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டி சங்கத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில்:-

    பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 12-ம் வகுப்பில் 367 மதிப்பெண் பெற்றும், சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேல்படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

    இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.

    வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக பட்டியலென எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றார்.

    • காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர்.
    • சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராகுல் (வயது 24). இவர் திண்டுக்கல் அருகே உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பொருளியல் படித்து வந்தார். சின்னாளப்பட்டியில் தனியாக அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த அதே கல்லூரியில் படித்த மாணவி ஒருவருக்கும் காதல் மலர்ந்தது.

    இந்த காதல் விபரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் நேரடியாக வந்து ராகுலை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ராகுல் தனது அறையிலேயே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவியை ஆசிரியர்கள் மனதளவில் காயப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
    • மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருப்பூணித்துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரத்தா சதீஷ் (வயது20) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று கல்லூரி ஆய்வுக்கூடத்துக்குச் சென்றபோது அவரிடம் இருந்த செல்போனை ஆசிரியர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் அவர் விடுதி அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். கல்லூரி நிர்வாகிகள் விரைந்து வந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரத்தா சதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சக மாணவர்கள் கூறும்போது, மாணவியை ஆசிரியர்கள் மனதளவில் காயப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் கூறுகையில், 'எங்கள் மகளை கல்லூரி ஆய்வகத்தில் துன்புறுத்தியிருக்கிறார்கள். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டியதுடன், டாக்டரிடம் தூக்கில் தொங்கியதை மறைத்து தலைச்சுற்றி கீழே விழுந்ததாக கூறியுள்ளனர். இதனால், சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எங்கள் மகள் இறந்தார்' என்றனர்.

    இதற்கிடையே மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கில் சமரசம் ஏற்படுத்த கல்லூரி நிர்வாகம் முயல்வதாக கூறி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் சில மாணவர்களை போலீசார் தாக்கியதாகப் புகார் எழுந்தது.

    இதற்கிடையே கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவி மரணம் குறித்து மாநில இளைஞர் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறது.

    இந்தநிலையில், நேற்று கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து தலைமையில் கல்லூரியில் வைத்து அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மந்திரி வாசவன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி பிந்து கூறும்போது, 'மாணவி தற்கொலை குறித்து கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள்' என்றார். இதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மாணவ அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.

    • வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மதன்குமார், மவுலி சங்கர் என 2 மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் மதன்குமார் டி.என்.பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் மவுலி சங்கர் (18) சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மூர்த்தி அவரது மனைவி, மூத்த மகன் 3 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். கல்லூரி விடுமுறை என்பதால் மவுலிசங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் மாலை வேலை முடிந்து மதன்குமார் வீட்டுக்கு வந்து கதவை தட்டி உள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.

    இதனை அடுத்து மதன்குமார் மாடிப்படி வழியாக ஏறி கீழே இறங்கி பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் மவுலி சங்கர் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மவுலி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியிலேயே மவுலிசங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து பங்களா புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மவுலி சங்கர் எதற்காக? தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார்.
    • என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சின்ன ராஜ குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித் தொழிலாளியான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டதால் மனைவி, பிள்ளைகள் அனைவரும் நிம்மதி இல்லாமல் தவித்துள்ளார்கள்.

    இதனால் வேதனை அடைந்த மகள் விஷ்ணு பிரியா (16) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷ்ணு பிரியா 10-ம் வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண் பெற்றிருந்தார். அடுத்து மேல்நிலைப்பள்ளி படிப்புக்கு தயாராகி வந்த நிலையில் தந்தையின் குடிப்பழக்கத்தால் இப்படி ஒரு துயர முடிவை எடுத்துள்ளார்.

    தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் ஒன்றை அவர் எழுதி வைத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    "என் மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆன்மா சாந்தியடையும். நன்றி. எனது குடும்பம் நல்ல குடும்பம். அப்பா, போய் வருகிறேன்... என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    • விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காளியம்மாள் அனுமதிக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மன்னார். விவசாயி. இவரது மகள் காளியம்மாள். இவர் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் தான் பிளஸ்-2க்கு பிறகு எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை மன்னார் மறுத்துள்ளார்.

    இதனால் விரக்தியில் காணப்பட்ட காளியம்மாள் கடந்த 24-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் மாணவியை மீட்டு உடனே சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாணவி காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மன்னார் அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்தும் படிக்க கூடாது என்று தந்தை மறுத்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×