search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student dead"

    • வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்தார்.
    • மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது மகன் பிரவீன் (14). இவர் கொடிவேரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

    சண்முகராஜா வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர் பிரவீன் தினமும் காலையில் மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவும் கடையில் வியாபாரம் முடிந்ததும் ஷட்டரை பூட்டி விட்டு சென்றனர்.

    வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை 6.30 மணியளவில் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதுப்பற்றி தெரியாத பிரவீன் ஷட்டரை திறந்த போது மின்சாரம் தாக்கி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவர் பிரவீனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மின்சார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
    • காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து வேதம் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (14), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை 6 மணி அளவில் குளிக்கச் சென்றனர்.

    பின்னர் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து சுழலில் சிக்கிய அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தடுமாறி தப்பி கரைக்கு ஓடி வந்தான்.

    பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். உடனடியாக வேத பாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர்.

    அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.

    தற்போது கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் நீரோட்டம் அதிகரித்தது.

    இதனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் குளிக்க சென்ற 4 பேரும் நிலைகொள்ள முடியாமல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அன்பு சரவணன் பலத்த காயமடைந்தார்.
    • அன்பு சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பாவூர்சத்திரம்:

    சென்னை மயிலாப்பூர் குடிசைப்பகுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அன்பு சரவணன்(வயது 20).

    கல்லூரி மாணவரான இவருடன் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் படித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2-ந்தேதி அன்பு சரவணன் புல்லுக்காட்டுவலசை மாணவரின் ஊருக்கு வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்குள்ள ராமச்சந்திரபட்டினம் நான்குவழிச்சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அன்பு சரவணன் பலத்த காயமடைந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அன்பு சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகன் கவின் (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.

    அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நடந்து வரும் வழியில் கோவிலில் சீரியல் பல்பு கட்டுவதற்கு கட்டப்பட்டிருந்த கட்டையில் கை வைத்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரெயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது.
    • முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ ரமணாகர் பகுதியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவரது மகன் முகமது சர்ப்ராஸ் (வயது 18). கொரோனா ஊரடங்கு காலத்தில் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

    உள்ளூர் மதரஸா ஒன்றில் இஸ்லாமிய கல்வி படித்து வந்தார். நேற்று காலை தன்னுடன் படிக்கும் நண்பர்கள் 2 பேருடன் சனாத் நகர் ரெயில் நிலையம் அருகே உள்ள பாப்புகுடா பகுதிக்கு சென்றனர். சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நடந்து செல்வதுபோல வீடியோ எடுக்க நண்பர்களுக்கு கூறினார்.

    அதன்படி முகமது சர்ப்ராஸ் நடனம் ஆடியபடி தண்டவாளத்தில் நடந்து சென்றார்.

    இதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் லிங்கம் பள்ளியில் இருந்து சனாத் நகர் நோக்கி வந்த எம்.எம்.டி.எஸ். ரெயில் முகமது சர்ப்ராஸ் மீது மோதியது.

    இதில் முகமது சர்ப்ராஸ் தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சனாத் நகர் ரெயில்வே போலீசார் முகமது சர்ப்ராஸ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் மீது ரெயில் மோதிய காட்சி அவரது நண்பர்கள் செல்போனில் பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • போலீஸ் விசாரணை
    • சித்தப்பாவுடன் சென்ற நிலையில் பரிதாபம்

    ஆற்காடு:

    ஆற்காடு வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் சேதுரா மன். இவரது மகன் தீபேஷ் (வயது 16). ஆற்காட்டில் உள்ள ஒரு நிதியுதவி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று மதியம் மாணவனின் சித்தப்பா லாரி டிரைவரான நந்தகுமார் தனது லாரியில் புளிய மர விறகுகளை ஏற்றிக் கொண்டு மேல்விஷாரத்தில் உள்ள ஒரு தோல் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளர்.

    அவருடன் மாணவன் தீபேசும் சென்றுள்ளான். தோல் சுத்திகரிப்பு நிலையத் தின் கேட் பகுதியில் மாண வனை இறக்கிவிட்டு விட்டு, நந்தகுமார் உள்ளே சென்றுள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது திபேசை காணவில்லை.

    அப்பகுதியில் தேடிபார்த்தபோது பயன்பாட்டில் இல்லாத ரசாயன சுத்திகரிப்பு தொட்டியில் தேங்கியிருந்த மழைநீரில் மாணவன் தீபேஷ் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பள்ளி மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவன் எப்படி தொட்டியில் விழுந்து இறந் தான் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    • பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த கஸ்பாபேட்டை அரசு பேருந்து நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது மகன் சஞ்சய் (15). இவர் கஸ்பாபேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறையால் சஞ்சய் வீட்டில் இருந்து உள்ளார். பின்னர் மதியம் ஒரு மணி அளவில் தனது நண்பர்களுடன் சஞ்சய் அதே பகுதியில் உள்ள சிவக்குமார் என்பவரின் கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது விளையாட்டு மிகுதியால் சஞ்சய் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாது எனவும் கூறப்படுகிறது.

    அப்போது திடீரென சஞ்சய் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சய் தண்ணீரில் மூழ்கினார்.

    இது குறிப்பு ஈரோடு தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றினர். பின்னர் சஞ்சய் உடலை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது சஞ்சய் உடலை பார்த்து அவரது பெற்றோர் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆங்கில தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் மாணவர் குளிக்க சென்றார்.
    • ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் ஏ.எஸ். பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் இளங்கோ (வயது 15). இவர் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள், மாணவன் உடலை மீட்டனர். இதற்கிடையே அங்கு வந்த மாணவனின் பெற்றோர், உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளார்.
    • 12 வயது சிறுமி மூச்சுத்திணறலில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பைபாலம் கிராமத்தை சேர்ந்தவர் லகபதி. இவருடைய மனைவி வசந்தி. தம்பதியின் மகள் ஸ்ரவந்தி.

    இவர் மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை வீட்டில் தனது தோழிகளுடன் ஸ்ரவந்தி விளையாடி கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு லேசாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனது பாட்டியிடம் கூறியுள்ளார்.

    சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்தார். உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

    12 வயது சிறுமி மூச்சுத்திணறலில் பலியானது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    தேனி மாவட்டம் குப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகள் மகேசுவரி (வயது 25). இவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கினார்.

    விடுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள அறையில் இருந்த மகேசுவரி நேற்று இரவு நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவில் 2-வது தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் மகேசுவரி படுகாயமடைந்தார்.

    விடுதியில் இருந்த சக மாணவிகள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சு மூலம் மகேசுவரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகேசுவரி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் நண்பர்கள் இருந்துவிட்டனர்.
    • இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வாயலூர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் மோனிஷ் (வயது10). மெரட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்றுமாலை மாணவன் மோனிஷ், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் 5 பேருடன் சைக்கிளில் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்ற மோனிஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனை அருகில் இருந்து நண்பர்கள் கவனிக்கவில்லை. இதனால் மோனிஷ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே குளித்து விட்டு கரைக்கு திரும்பியதும் நண்பர்கள் உடன் வந்த மோனிசை தேடினர். அவர் மாயமாகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோனிசின் சைக்கிள் மற்றும் ஆடைகளை குளத்தில் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். மோனிஷ் தண்ணீரில் மூழ்கியது பற்றி எதுவும் தெரியாதது போல் இருந்துவிட்டனர்.

    இரவு நீண்ட நேரம் ஆகியும் மோனிஷ் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் உடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் மோனிஷ் குளத்தில் மூழ்கியது தெரியவந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் இறங்கி தேடினர். இரவு 11 மணியளவில் மோனிஷின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார்.
    • பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மாமல்லபுரம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கமால். இவர் கல்பாக்கம் அடுத்த மெய்யூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த மகள் லவ்லி(வயது11). கல்பாக்கம் நகரியத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 16-ந்தேதி வீட்டில் ஊஞ்சலில் மாணவி லவ்லி விளையாட்டாக ஆடினார். அப்போது அதன் கயிறு மாணவியின் கழுத்தை இறுக்கி அறுத்தது. இதில் பலத்த காயம் அடைந்த லவ்லியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லவ்லி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து சதுரங்க பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×